என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, August 08, 2011

20 காப்பி-பேஸ்ட் தப்பா என்ன?ஒரு நா காலையில தூங்கி எந்திரிச்ச உடனே என் பொண்டாட்டிட்ட காப்பி கேட்டேன். ஏங்க காலயில காப்பி கேக்குறது தப்பாங்க?....தப்புல்லதானே? அது உங்களுக்கு தெரியுது. என் பொண்டாட்டிக்கு தெரியலியே.....வச்சா பாருங்க நடுமண்டையில ஒர் குட்டு.... நல்லவேளை...விகடன் தாத்தாவுக்கு மாதிரி நடுமண்டை வீங்காததுதான் குறை.
எனக்கு ஒன்னுமே புரியல... நம்ம அப்படி என்னத்த தப்பா கேட்டுட்டோம்...இப்படி குட்டிட்டாளேன்னு....என்ன ஆனாலும் சரின்னு மனசுல தைரியத்த வரவச்சுக்கு(பின்னே....பொண்டாட்டிய எதிர்த்து கேள்வி கேக்கறதுக்கு தனி தைரியம் வேணும்ல)..
.”எதுக்கு என்னை இப்படி குட்டுனே”ன்னு கேட்டேன்.
உங்களை என்ன சொல்லிருக்கேன்...காலைல எந்திருச்சதும் பல்ல விலக்கினாத்தான் காப்பின்னு சொன்னேன்ல”ன்னாள்.
அதுக்கு நான் உடனே
இதுக்குத்தான் இந்தக்குட்டு குட்டுனியா...அதான் நேத்தோட பேஸ்ட் முடிஞ்சிருச்சே...முதல்ல காப்பிய குடிச்சுட்டு அப்புறமா கடைக்கு போயி பேஸ்ட் வாங்கிட்டு வர்றேனே”ன்னு சொன்னேன்.

நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு எனக்குத்தெரியும்...அதான் நேத்தே ஒரு பேஸ்ட் வாங்கிட்டு வந்துட்டேன்”...ன்னு சொல்லி பேஸ்ட்ட கைய்யில தந்துட்டா...வேற என்ன தலைய தடவியபடியே பல்லு துலக்க ஆரம்பிச்சேன்.

இதையும் படிச்சுப்பாருங்க....

தி.மு.க-வின் அடுத்த தலைவர் பற்றி-கலைஞர் கவிதை...
Post Comment

இதையும் படிக்கலாமே:


20 comments:

 1. ஹிஹி அப்ப பாருங்களன்

  ReplyDelete
 2. நடந்த உண்மைய மறைக்காம சொன்ன உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு சார்

  ReplyDelete
 3. ஒத்துக்கறேன் நீர் அறிவாளின்னு ஹிஹி!

  ReplyDelete
 4. காப்பி-பேஸ்ட் தப்பே இல்ல, காப்பிக்குள்ள பேஸ்ட்டுதான் தப்பு...!

  ReplyDelete
 5. எதுவுமே தப்பு இல்லை!நடத்துங்க!

  ReplyDelete
 6. ஆஹா.. இப்படியும் யோசிக்க உங்களால் மட்டும் தான் முடியும்.. ரசித்தேன்..

  ReplyDelete
 7. காபி பேஸ்ட்டை பத்தி தான் புகார் மேல புகாரா எழுதிக்கிட்டு இருக்காங்க, நீங்க அதுக்கு ஒரு தீர்வு சொல்வீங்கனு பார்த்தா காமெடி பண்ணிகிட்டு இருக்கீங்க. காபிக்கும் பேஸ்ட்டுக்கும் அருமையா லிங்க் கொடுத்து இருக்கீங்க,

  ReplyDelete
 8. அப்போ நீங்க ஏற்கனவே ஒரு காப்பி பேஸ்ட் பதிவர் ஆயிட்டீங்கன்னு சொல்லுங்க. உங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு. நடத்துங்க.

  ReplyDelete
 9. அண்ணன் எதோ சொள்ளவரார்ந்னு வந்தா?

  ReplyDelete
 10. என்ன இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு பிடித்துள்ளது .....அவ்..அவ் ...அவ் ....அவ்

  ReplyDelete
 11. பேஸ்ட்-பிறகு காப்பி.. ?????

  ReplyDelete
 12. இந்த பதிவை படிச்சதால என் டைம் வேஸ்ட்.

  ReplyDelete
 13. சூப்பர் காப்பி பேஸ்ட் தான் போங்கோ. ஹா ஹா ஹா.

  ReplyDelete
 14. ஹ்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் நாங்களும் புதுசா ஒரு கடைய ஓபன் பண்ணிருக்கோம் வந்து எட்டிப்பார்த்தா சந்தோஷம்..

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.