என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, August 09, 2011

11 எதுக்கெல்லாம் ஐடியா கொடுக்கறாங்க பாருங்க...வெளங்கிரும்.....

 (இது ஆண் பெண் இருபாலருக்கும்)


நீங்கள் காதலித்த பொண்ணையோ, பையனையோ கல்யாணம்   செய்துக்க வேண்டாமென்று உங்கள் வீட்டில் அடம்பிடிக்கிறார்களா?....உங்களுக்கு வேறிடத்தில் பெண்/பையன் பார்க்கிறார்களா? அதுவும் கல்யாண தரகர் மூலம். அப்படியானால் கவலையை விடுங்க....பிடிங்க டிப்ஸ....இப்ப நீங்க கரக்ட் பண்ண வேண்டியது உங்க அப்பாவையோ...அம்மாவையோ அல்ல....தரகரைத்தான். ஏன்.....?

நீங்கள் காதலிப்பவரின் போட்டோவை எடுத்துக்கொண்டு நேராக தரகரிடம் போங்க. எனக்கு பார்த்திருக்கிற வரன் போட்டோவோடு இந்த போட்டோவையும் சேர்த்து வைத்திருங்க..என்று சொல்லி தரகரை தனியாக கவனித்து விடவும். அப்புறமென்ன...அந்த போட்டோக்களோடு உங்கள் மனம்கவர்ந்தவரின் போட்டோவையும் எடுத்ததுக்கு உங்க வீட்டுக்கு வருவாரு தரகர். உங்க பெற்றோர் முன்னாடியே கொஞ்சம் பிகு பண்ணிட்டு தரகர் தந்த எல்லா போட்டோவையும் பார்ப்பத்துபோல பார்த்துட்டு, உங்களுக்கு பிடித்த ஆளோட போட்டோவை செலக்ட் பண்ணி கொடுத்துடுங்க....அதுக்கப்புறம் பாருங்க யாரை வேண்டாம்ன்னு உங்க வீட்டுல சொன்னாங்களோ...அந்த ஆளையே உங்க வீட்டு ஆளுங்க ஆசியோடு கல்யாணம் பண்ணிக்கலாம்.

பின் குறிப்பு: தரகர் கொடுக்கும் போட்டோவில் உங்க ஆளைவிட பெட்டரா வேறு ஆளோட போட்டோ இருந்து அதை நீங்க செலக்ட் பண்ணினா...அதுக்கு நான் பொறுப்பல்ல.....

(மறக்காம எனக்கு அழைப்பிதல் அனுப்பவும்) வாழ்க வளமுடன்.

டிஸ்கி: இது ஒரு திருத்தப்பட்ட மீள்பதிவு


Post Comment

இதையும் படிக்கலாமே:


11 comments:

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.