என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, July 08, 2011

30 தயாநிதியை கைவிட்ட கலாநிதியும், கைகொடுத்த ஜெயாவும்....ஒரு கக்கூஸ் திறப்பு விழாவில் தயாநிதி மாறன் கலந்துகொண்டால் கூட அவருக்கென்று ஒரு தனி கேமராமேனையே நியமித்து அவரையே சுற்றிசுற்றி காண்பிக்கும் சன் டிவி, நேற்று நடந்த அதிமுக்கிய நிகழ்ச்சியான தயாநிதி மாறன்  ராஜினாமாவை காண்பிக்கவே இல்லை. கடந்த வாரம் முன்னாள் சட்ட அமைச்சர் இசக்கிசுப்பையாவின் பதவி பறிப்பை முக்கிய செய்தியாக காட்டிய சன் டிவி, அதைவிட முக்கிய செய்தியான தயா ராஜினாமாவை இருட்டடிப்பு செய்து விட்டார்கள். இசக்கிசுப்பையாவிற்கு கொடுத்த முக்கியத்துவத்தில் கொஞ்சமாவது தன் தம்பி தயாநிதிக்கு கொடுக்காமல் கைவிட்டுவிட்டார் கலாநிதிமாறன்.
கலைஞர் டி.வி.யும் இவ்விஷயத்தில் மவுனம் சாதித்தது.

ஒருவேளை இந்த விஷயத்தை இவர்கள் ஒளிபரப்பாமல் மறைத்துவிட்டால் யாருக்கும் தெரியாமல் போய்விடும் என்று நினைத்துவிட்டார்களோ என்னவோ?
பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடுமா என்ன?

ஆனால், இலவு  காத்த கிளியாக இருந்த ஜெயா டிவி, அவர்கள் கைவிட்டால் என்ன? நாங்கள் கை கொடுக்கிறோம் என்று இந்த விஷயத்தை உடனே ஒளிபரப்பி புண்ணியம் தேடிக்கொண்டது.பாவம், அண்ணனும் தாத்தாவும் செய்யாததை ஜெயா செய்திருக்கிறார்.

Post Comment

இதையும் படிக்கலாமே:


30 comments:

 1. வடை..வடை...மெது வடை.

  ReplyDelete
 2. ஹா..ஹா..செம நக்கல்யா உங்களுக்கு..பாவம், அவங்களே அடிமேல அடி விழுதேன்னு நொந்து கிடக்காங்க..நீங்க என்னடான்னா வெந்த புண்ணுல வேலைப் பாய்ச்சுறீங்களே?

  ReplyDelete
 3. பதவி விலகியதை காட்டினால் இன்னும் மற்றதையெல்லாம் காட்டவேண்டும்..

  அதனால்தான் அப்படியே விட்டுவிட்டார்கள் போல...

  ReplyDelete
 4. இது வஞ்ச புகழ்ச்சி ....படித்ததில் நெகிழ்ச்சி அடுத்த நிகழ்ச்சி ஒட்டு போடுறது தான் வரட்டா

  ReplyDelete
 5. உண்மைதான் நண்பரே அவங்க காட்டலைன்ன , யாரும் பாக்க மாட்டோம்முன்னு நினைப்பு காலத்திற்கு ஏற்ற பதிவு

  ReplyDelete
 6. அப்போ கலாநிதி திகார் போகும் போது எந்த டிவியிலே காட்டுவாங்க

  ReplyDelete
 7. இது நல்ல இருக்கு. பாவம் மாறன். என்னவோ போங்க. நீங்களும் உங்கள் அரசியலும். சதயம்.

  ReplyDelete
 8. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. aakaa aakaa சரியான வஞ்சப் புகழ்ச்சி - சிந்தனை எல்லா திசைகளிKஉம் ஓடுகிறதே ! ரஹீம் கஸாலி - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  ReplyDelete
 10. உங்களுக்கு செம லொள்ளுங்க...

  ReplyDelete
 11. ஜெயா டி வி க்கு இது வடை மாதிரி...

  ReplyDelete
 12. பாவம், அண்ணனும் தாத்தாவும்

  ReplyDelete
 13. பாவம், அண்ணனும் தாத்தாவும்

  ReplyDelete
 14. அட, விடுங்க. குடும்பமே திகார் ஜெயிலுக்கு போக டிக்கெட் ரிசர்வ் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவங்கள போயி...

  ReplyDelete
 15. \\இலவு காத்த கிளியாக இருந்த ஜெயா டிவி\\ இலவு காத்த கிளி என்றால் கடைசி வரை நினைத்தது கை கூடாமல் போனதாக அர்த்தம், இங்கு தான் அவர்கள் எதிர்பார்த்தது நடந்து விட்டதே!! கதையை போடும் போது கொஞ்சம் அர்த்தத்துக்கு ஓட்டி வரும்படி போடலாமே?

  ReplyDelete
 16. இன்னும் யார் யார கலாநிதியண்ணே கைவிட வேண்டி வருமோ?

  ReplyDelete
 17. நல்லது பண்ணியிருக்க அம்மா
  அண்ணனும் தாத்தாவும் பாவம் அவங்களே இருப்புக்கு திண்டாடிக்கிட்டு இருக்காங்க

  ReplyDelete
 18. பூனை கண்ணை மூடிகிச்சுன்னா பூலோகம் இருண்டுடுமா என்ன?! ஆனா, ஒரு பக்கமா, தி.மு.க. வுக்கு மட்டும் விரோதமா ஊடகங்கள் (பதிவுலகம் உட்பட) ஊதாமா அ.தி.மு.க உட்பட அனைத்துக் கட்சிகளின் தவறுகளை சுட்டிக் காட்டவேணும்.

  ReplyDelete
 19. அடடே..........தலைப்பு ஒன்னு செய்தி ஒன்னு....மிக அற்புதம்.....

  ReplyDelete
 20. சி.பி.ஐ. இன்னும் என்னல்லாம் செய்யப் போவுதுன்னு பாருங்க!

  ReplyDelete
 21. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. அட்டகாசம்! தலைப்பைப் பார்த்து என்னமோ நினைச்சேன்!

  ReplyDelete
 23. அப்போ கலைஞர் பேரன் வாழ்கை முடிந்து போய்விட்டத?

  ReplyDelete
 24. இந்த 2 ஊடகங்கள்மே ஒரு பெரிய திருட்டு கோடிகள் . அம்மா ஒரு பெரிய உலக மகா கூ,

  ReplyDelete
 25. எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது என்பது இதுதானோ

  ReplyDelete
 26. உங்கள் அருமையான தலைபு

  ReplyDelete
 27. eelathil ayiram ayiram thamil makkal
  kolla thunai pona karunanithi kudumbam valattum....eraivan avarkallukku thandanai tharuvaan

  ReplyDelete
 28. இதில் கலா.. அடக்கி வாசிக்கிறது சரிதான். தயாதான் ஜெயா சப்போர்டராச்சே. ஜெயா டீவி இத ஒளிபரப்பி இருக்கக்கூடாது. அவர்தான் தன் தாத்தாவிற்கு பெரிய துரோகியாச்சே. கலைஞர் டீவி இத ஒளிபரப்பி இருக்கனும்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.