என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, July 27, 2011

20 விக்ரமன், வீ.சேகரை வாழவைத்த ஜெயலலிதாவுக்கு ஒரு ஜே.....


வரிவிலக்குகிற்காக தமிழில் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க வன்முறைகளையும், ஆபாசங்களையும் அரங்கேற்றி வந்த தமிழ்சினிமாவிற்கு ஆப்படித்துள்ளார் ஜெயா.....

பெயரை மட்டும் தமிழில் வைத்துக்கொள்வார்களாம்.....பாடல்கள், வசனங்கள் பாதி ஆங்கிலத்தில் இருக்கும்....அதாவது சேலை கட்டிக்கொண்டு வந்து வணக்கம் என்ற ஒற்றைசொல்லை மட்டும் தமிழில் பேசும் வெளிநாட்டினர்களை போல....எப்படி ஒத்துக்கொள்ளமுடியும்?

இன்று ஆங்காங்கே ஒட்டப்பட்டிருக்கும் சினிமா சுவரொட்டிகளை பார்த்தால்.....ஐந்து வாலிபர்கள் அல்லது வாண்டுகள் கையில் அரிவாள், கத்தி, உருட்டுக்கட்டையுடன் நம்மை பார்த்து நாக்கை துருத்தி, கண்களை பெரிதாக்கி பயமுறுத்துகிறார்கள். அதையும் மீறி தியேட்டருக்கு போனால்....வெண் திரை முழுவதையும் குருதியால் தோய்த்து விடுகிறார்கள். படம் முடிந்து வெளியேறும் ரசிகர்கள் அணிச்சையாய் அவர்கள் கழுத்தையும் தடவி பார்த்துக்கொள்கிறார்கள்...எங்கே.. நமக்கும் ஒரு வெட்டு விழுந்திருக்குமோ என்று.....

அல்லது..... நாயுடுஹால் விளம்பரம் போல.....ஒரு சின்ன சைஸ் ஜட்டி, பிரா போன்ற அயிட்டங்களை மட்டும் போட்டுக்கொண்டு கதாநாயகிகள் நம்மை பார்த்து கவர்ச்சியாய் கண்ணடிக்கிறார்கள். ஆங்கில பிட்டுப்படங்கள் கூட வரிவிலக்கிற்காக தமிழில் பெயர் வைக்கப்பட்டு உலக மொழி (அதாவது முக்கல் முனங்கலை மட்டும்) பேசியது.

அப்படிப்பட்ட இந்த நேரத்தில்... நேற்று தமிழக அரசு புதியதாக ஒரு சட்டம் கொண்டுவந்துள்ளது.அதில்

1. அவ்வாறான திரைப்படம், திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து "யூ" சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


2. திரைப்படத்தின் கதையின் கருவானது தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்.


3. திரைப்படத்தின் தேவையை கருதி பிறமொழிகளை பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்.


4. திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம் பெறுமேயானால் அத்திரைப்படம் வரிவிலக்கு பெறப்படுவதற்கான தகுதியை இழக்கும்.


என்று சொல்லியுள்ளது. வரவேற்கப்படவேண்டிய சட்டம். இனி ஒருத்தன் கூட, கத்தியை காட்டி போஸ் கொடுக்க முடியாது...ஒருத்தி கூட மார்பையும், தொப்புளையும் காட்டி சிரிக்க முடியாது....குறிப்பாக இயக்குனர் சாமி போன்றவர்கள் படமே எடுக்க முடியாது....

இனி, விக்ரமனும், வீ.சேகரும் பிழைத்துக்கொள்வார்கள்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


20 comments:

 1. //
  வரிவிலக்குகிற்காக தமிழில் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க வன்முறைகளையும், ஆபாசங்களையும் அரங்கேற்றி வந்த தமிழ்சினிமாவிற்கு ஆப்படித்துள்ளார் ஜெயா.....
  //

  ரொம்ப சரி

  ReplyDelete
 2. ஹரி கூட இனி என்ன பன்னபோரர்னு தெரில ..

  ReplyDelete
 3. என்ன தலைவா இப்பலாம் அதிகம் போஸ்ட் வரது இல்லை ?

  ReplyDelete
 4. நல்லதும் நடக்குது இந்த ஆட்சியில சந்தோசம் ..அதை பதிவிட்டு நடுநிலை தவறாத சமுதாய அக்கறை கொண்ட பதிவர் என்பதை உலகிற்கு சொன்ன அண்ணனுக்கு ஜே

  ReplyDelete
 5. அருமையான பகிர்வு நண்பரேவரவேற்க்கபட வேண்டிய விஷயம் தான்.இவர்களுக்கெல்லாம் வரி விலக்கு என்பது கொடுமையின் உச்சம்.

  ReplyDelete
 6. அப்போ பேரரசு என்ன பண்ண போறாரு?

  ReplyDelete
 7. மற்ற விசயங்களில் எப்படியோ இதனை நான் மனமார வரவேற்கின்றேன்

  ReplyDelete
 8. வரவேற்க படவேண்டிய சட்டம்தான். ஆனால் படங்களுக்கு சர்டிபிகேட் கொடுப்பதையும் வரையறை படுத்த வேண்டும். இல்லையேல் எல்லா இயக்குனர்களும் யு சர்டிபிகேட் வாங் படாத பாடு படுவார்கள்.

  ReplyDelete
 9. வரவேற்ககூடிய விஷயம்தானே! இனியாவது தமிழ் திரை உலகம் "சதை"க்காக அறியப்படாமல், "கதை"க்காக அறிந்துணரப்படட்டும்! பகிர்வுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 10. நல்ல விஷயம் தாங்க ...
  பாராட்டியே ஆகணும் ...

  ReplyDelete
 11. அட பரவால்லையே இனி வெறும் கலை படமா வரும் ஒருத்தனும் படம் பாக்க மாட்டான் யப்பா சன் பிச்சர்ஸ் வேற தொழில பாருங்கப்பா (ஓட்டு போட்டுட்டேன் ரொம்ப பீல் பண்ணாதிங்க)

  ReplyDelete
 12. //படம் முடிந்து வெளியேறும் ரசிகர்கள் அணிச்சையாய் அவர்கள் கழுத்தையும் தடவி பார்த்துக்கொள்கிறார்கள்...எங்கே.. நமக்கும் ஒரு வெட்டு விழுந்திருக்குமோ என்று.....// :)

  ReplyDelete
 13. உங்கள் பார்வை வித்யாசமானது.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.