என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, July 29, 2011

17 தெரியும்...ஆனா, தெரியாது.....


 நேத்து என் மகன் வந்து என்கிட்ட ஒன்னு கேட்டான்பா

என்னன்னு கேட்டான்?

நம்ம பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பிடித்த தமிழ் வார்த்தை தெரியுமா உனக்குன்னு  கேட்டான்

நீ என்ன சொன்னே?


தெரியாதுன்னு சொன்னேன்.

சரியாத்தானே சொல்லிருக்கே?

நான் எங்கேப்பா சரியா சொன்னேன்? தெரியாதுன்னுல சொன்னேன்.

அதான் கரக்டு...

அதான் கரக்டா?குழப்பாம சொல்லுப்பா....சரி....உனக்குதெரியுமா....அவருக்கு என்ன வார்த்தை பிடிக்கும்ன்னு?

தெரியுமே

எங்கே சொல்லு...

தெரியாது....

என்ன தெரியாதா? இப்பத்தான் தெரியும்ன்னு சொன்னென்....

அதான் தெரியுமே

அப்ப சொல்லு

தெரியாது...

என்ன விளையாடுறியா? தெரியும்ங்கறே...தெரியாதுங்கறே.....மன்மோகனுக்கு பிடித்த தமிழ் வார்த்தை உனக்கு தெரியுமா? தெரியாதா?

தெரியும்

அப்படின்னா சொல்லேன்...

அதான் சொல்லிட்டேனேப்பா தெரியாதுன்னு....

அய்யோ...அய்யோ....எதுக்குப்பா இப்ப்டி என்னை குழப்புறே..தெரியுமா? தெரியாதா?

சத்தியமா எனக்கு தெரியும்....

தெரியும்னா சொல்லி தொலையேன்....

எத்தனை தடவைப்பா உனக்கு சொல்றது தெரியாதுன்னு

டே...என்னை கொலைகாரனா மாத்தாதே....தெரிஞ்சா தெரியும்ன்னு சொல்லு...தெரியாட்டி தெரியாதுன்னு சொல்லு...எதுக்கு இப்படி உயிரை வாங்கறே?

நான் எப்ப தெரியாதுன்னு சொன்னேன்...அதான் தெரியும்ன்னு சொல்றனே?

தெரியும்ன்னு சொல்றே...ஆனா, சொல்லமாட்டேங்குறியே?

நாந்தான் அப்பவுலேருந்து சொல்லிக்குத்தானே இருக்கேன்.

சரி...அப்ப சொன்னதை விடு...இப்ப கரக்டா சொல்லு

கரக்டா சொல்றேன் கேட்டுக்க....தெரியாது....

சரி விடு... நீ சொல்லவே வேனாம். நான் வேற யாருகிட்டயாவது கேட்டுக்கிறேன்.

நீ யாருட்ட கேட்டாலும் இதைதான் சொல்லுவாங்க.....

என்னன்னு

தெரியாதுன்னு....

டே....உன்னை கொல்லாம விடமாட்டேண்டா.........

============================================
 படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

விக்ரமன், வீ.சேகரை வாழவைத்த ஜெயலலிதாவுக்கு ஒரு ஜே.....Post Comment

இதையும் படிக்கலாமே:


17 comments:

 1. ரசித்தேன் வாக்களித்தேன்

  ReplyDelete
 2. தலையை கிண்டல் பண்ணி....


  அசத்தல்...

  ReplyDelete
 3. அவ்வ்வ்வவ்வ்வ்!

  ReplyDelete
 4. ஹா ஹா ஹா ஹா கஸாலி - வி.வி.சி - தெரியும் ஆனா தெரியாது ........ வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  ReplyDelete
 5. அவருக்கு ஆட்சி பண்ணகூட தெரியாது

  ReplyDelete
 6. இந்த பதிவ படிச்சா புரியும் ஆனா புரியாது ஏன் நண்பா இப்படி....................ரசனையான பதிவு

  ReplyDelete
 7. ஹா..ஹா..வாழைப்பழக் காமெடி தோத்துச்சு. கலக்கிட்டீங்க கஸாலி.

  ReplyDelete
 8. இந்த கமென்ட் தெரியுமா? தெரியாதா?

  ReplyDelete
 9. நான் சுத்த காங்கிரஸ் காரன்....ஒரு கருத்து சொல்றதுக்கு எவ்வளவு காசு தருவே? காசு தந்தாதான் கருத்து....///காசா பணமா ஒரு கருத்தையாவது சொல்லிட்டு போங்களேன்///

  ReplyDelete
 10. ஐயோ ........மண்டை வெடிச்சிரும் போலிருக்கே ......

  ReplyDelete
 11. ஏன் பையன் வந்து இதை படிச்சிட்டு அரசகுலத்தான் கு என்ன கமெண்ட் போடா போறீங்க நு கேட்டான்

  ReplyDelete
 12. அவருக்கு தான் எங்க இருக்கிறோம் என்றே தெரியாது

  ReplyDelete
 13. Hi Friend This Is Mohan VelloreWe buyd one script (cannot copy) your content anyone Copying ?This problem Was SolvedPlz Go To (http://tamilcinemaphotos.blogspot.com) You Can copy From This Site :)You Need This Just Rs 500 Lets buy Contact Mohanwalaja@gmail.com

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.