என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, July 11, 2011

13 இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்............


ஒரு நாள் நான் என் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு செய்ன் ஸ்மோக்கர்.

பேச்சு சுவாரஸ்யத்தில் இருந்த சிகரெட்டை எல்லாம் ஊதி தள்ளினார். சிகரெட் காலியாகிவிட்டது. அப்போது என்னை பார்த்து கொஞ்சநேரம் இருங்கள் கடைக்கு போய் சிகரெட் வாங்கிக்கொண்டு வந்துவிடுகிறேன் என்றார். அப்போது வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணின் பதினைந்து வயது பையன் வந்தான்.

அவனை பார்த்த நான் என் நண்பரிடம், அவனை போய் வாங்கிவர சொல்லுங்களேன். ஏன் தேவையில்லாமல் நீங்கள் போகிறீர்கள் என்று சொன்னேன். பரவாயில்லை கடை பக்கத்தில்தான் இருக்கிறது. நானே போய்க்கிறேன் என்றவாறு அவர் கிளம்பிப்போய் வாங்கிக்கொண்டு வந்தார்.

பின்பு அவரே என்னிடம் சொன்னார். அந்தப்பையனை போக சொல்லலாம். ஆனால் இன்னைக்கு நமக்காக வாங்கப்போவான். சின்னப்பையனா இருக்கானே என்று கடைக்காரருக்கு சந்தேகம் வந்து அவனிடம் யாருக்கு என்று கேட்டால் எங்க முதலாளிக்கு என்று சொல்வான். கடைக்காரரும் நம்மிடம் கேட்டு சந்தேகத்தை தீர்த்து கொள்வார். என்றாவது அவனுக்கு சிகரெட் குடிக்க ஆசை வந்துச்சுன்னா நம்ம பேரை சொல்லி அவன் ஒரு சிகரெட் வாங்கி விடுவான். கடைக்காரரும் எத்தனை தடவைதான் என்கிட்டே கேட்பாரு. எனக்காத்தான் இருக்கும்ன்னு கொடுத்துடுவாரு. இந்த பழக்கம் நம்மோடு போகட்டும். எதுக்கு அவனையும் கெடுப்பானே...அதான் நானே போயிட்டேன் என்றார். அவரின் பதில் எனக்கு நியாயமாக பட்டது.
உங்களுக்கு.........(பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்.....)

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

தயாநிதியை கைவிட்ட கலாநிதியும், கைகொடுத்த ஜெயாவும்....Post Comment

இதையும் படிக்கலாமே:


13 comments:

 1. எனக்கும் சரி என்று தான் படுத்து அன்ன்ன்னன்ன்ணன் அண்ணன் என்பதை அழுத்தி சொன்னேன் ...அவ்வளவுதான் ஹி ஹி

  ReplyDelete
 2. வடையுடன் வாக்களித்து
  விடைபெறுகிறேன்

  ReplyDelete
 3. இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு

  ReplyDelete
 4. சரியான செயல் ... நண்பரை நிறுத்த சொல்லுங்க புகைப்பதை ..

  ReplyDelete
 5. தனது தொழிலாளியின் நலன்விரும்பியவர், தனது நலனில் அக்கரை இல்லாமல் போவது சரியில்லை சகோதரா!

  ReplyDelete
 6. மிகச்சரியான செயல்.

  ReplyDelete
 7. எப்படியெல்லாம் நாம் சமாதானம் செய்து கொள்கிறோம் பாருங்கள்
  சிகரெட் குடிப்பது தவறு கெடுதல் எனத் தெளிவாகத் தெரிகிறது
  அடுத்தவர் கெட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக
  தெளிவாக யோசிக்கவும் தெரிகிறது.
  நாம் தொடர்கிறோமே தவறு விட்டுவிடவேண்டும் என்கிற எண்ணம்
  வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
  இதுபோன்ற பிரச்சனையே வராதே
  அதை விடுத்து......ம் என்ன சொல்வது

  ReplyDelete
 8. இவரும் திருந்தினா நல்லா இருக்கும்..

  ReplyDelete
 9. தங்களுடைய கூற்று சரிதான் தலீவரே; ஆனா, பொகை வுடுறது எம்புட்டு பேருக்கு வியாதியை வரவழைக்குதுன்னு ஒங்க நண்பருக்கு அறிவுருத்தினீங்களா எசமான்? இ.அ.ச.வ. எனச்சொன்ன உங்களோட நண்பர சும்மா சொல்லக்கூடாதுங்க, இங்கதான் அவரு நிக்குறாரு கஸ்ஸாலி!

  ReplyDelete
 10. //எப்படியெல்லாம் நாம் சமாதானம் செய்து கொள்கிறோம் பாருங்கள்
  சிகரெட் குடிப்பது தவறு கெடுதல் எனத் தெளிவாகத் தெரிகிறது
  அடுத்தவர் கெட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக
  தெளிவாக யோசிக்கவும் தெரிகிறது.
  நாம் தொடர்கிறோமே தவறு விட்டுவிடவேண்டும் என்கிற எண்ணம்
  வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
  இதுபோன்ற பிரச்சனையே வராதே
  அதை விடுத்து......ம் என்ன சொல்வது// நன்கு சொன்னீர்கள் ரமணி ஐயா. புகைப்பவர்கள் நன்குணர்ந்துபார்த்து, இனியாவது விலைகொடுத்து வியாதியை வாங்கும் பழக்கத்தை விட்டுவிட முன்வரட்டும்! நன்றி, வணக்கம்.

  ReplyDelete
 11. தங்களுடைய கூற்று சரிதான் தலீவரே; ஆனா, பொகை வுடுறது எம்புட்டு பேருக்கு வியாதியை வரவழைக்குதுன்னு ஒங்க நண்பருக்கு அறிவுருத்தினீங்களா எசமான்? இ.அ.ச.வ.மா. எனச்சொன்ன உங்களோட நண்பர சும்மா சொல்லக்கூடாதுங்க, இங்கதான் அவரு நிக்குறாரு கஸ்ஸாலி!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.