என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, July 04, 2011

25 நண்பேன்டா-இது ஒரு தொடர் பதிவு......

பெற்றோரின் உதவியால் பிறக்கும் நாம் நண்பர்களோடுதான் வாழ்கிறோம், வளர்கிறோம்.  நம் இன்பம்,துன்பம்,சுகம்,துக்கம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் நட்பு பெரும் பங்கு வகிக்கிறது.

நட்பு மட்டும் இல்லையென்றால் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பூஜ்யமாக முழுமை பெறாமலேயே போயிருக்கும்.

நல்ல வழியில் செல்லும்போது தட்டி கொடுக்கவும், தவறான வழியில் செல்லும்பொது குட்டவும், சுட்டிக்காட்டவும் நண்பர்களின் பங்கு அளப்பெரியது.

உன் நண்பர்களை பற்றி சொல்  நான்  உன்னை பற்றி சொல்கிறேன் என்பது பிரபலமான நட்பு மொழி.

தெருவில் கோலி ஆடியதிலிருந்து,பள்ளி,கல்லூரி என்று தொடங்கி நம் கூடவே வருவார்கள் சில நண்பர்கள்.  அப்படிப்பட்ட நட்பை, நண்பர்களை  அடையாளம் காட்டும் பதிவுதான் இது.

எல்லோரிடமும் நட்பாய் இரு, சிலரிடமே நெருக்கமாய் இரு என்பார்கள். அப்படி எனக்கு நெருக்கமான சில நண்பர்களை அடையாளப்படுத்த நினைக்கிறேன்.

1-ஷமீம்
இவனை பற்றி சொல்வதென்றால்.....என் நெருக்கமான நண்பர்களில் இவனுக்குத்தான் முதலிடம் எப்போதும். நான்தான் இவன், இவன்தான் நான் என்றும் சொல்லலாம். என் இன்ப துன்பங்களில் என் கூடவே வரும் நண்பன். எனக்கென்று எதுவுமே இல்லாத நேரத்தில் எனக்கு எல்லாமுமாய் இருந்தவன். மலேசியா குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளி, தற்போது மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் சொந்தமாக தொழில் செய்து வருகிறான்.

2-சிராஜ்
இவனை பற்றி நிறைய முறை சொல்லியாகிவிட்டது. ஆமாம், டீக்கடை நடத்தி வடை பஜ்ஜி விற்கும் பிரபல பதிவர்தான் இவன்.

3- நைனா
முதலில் பார்த்த நண்பன் ஷமீமின் மைத்துனர்தான் இவன். இவனும் ஒரு மலேசிய குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளிதான்.
ஷமீமை வைத்துதான் இவன் பழக்கம். பழகிய சில நாட்களிலேயே என் நெருக்கமான நட்பு வளையத்திற்குள் வந்தவன். பல சிக்கலான தருனங்களில் எனக்கு கை கொடுத்தவன். (நன்றி மறப்பது நன்றன்று).........

4- புஹாரி
இவனும் ஒரு மலேசிய குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளிதான். ஆனால்,படித்ததெல்லாம் எங்கள் ஊரில்தான். ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை என் கூடவே படித்தவன். இவனை வைத்துதான் அரசியல் பேசும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.

5-ஷர்புதீன்
இவனை பற்றி சொல்வதென்றால்....எனக்கு மிகவும் நெருங்கிய நண்பன். உச்சிமுதல் உள்ளங்கால் வரை ஒன்றாகவே இருக்கும். அதாவது காலுக்கு செருப்பு முதல் தலைக்கு தொப்பி வரை ஒன்றாக ஒரே கலரில் இருக்கும். எதை வாங்கினாலும் எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியாக இரண்டிரெண்டாக வாங்கி என் மற்ற நண்பர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவோம்.

இன்னும் ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை பற்றி இன்னொரு நாளில் பார்ப்போம்.
உங்களுக்கும் இப்படி நண்பர்கள் இருக்கலாம். அவர்களை பற்றி நீங்களும் எழுதலாமே....

இருந்தாலும்.... நான் இந்த பதிவை தொடர அழைப்பது....

செங்கோவி
மெட்றாஸ்பவன் சிவக்குமார்

ஆயுத எழுத்து A.R.ராஜகோபால்
பனித்துளி ரியாஸ் அஹமது
Post Comment

இதையும் படிக்கலாமே:


25 comments:

 1. நண்பர்களை பற்றி நல்ல பதிவு...

  ReplyDelete
 2. ஹா...ஹா... முதல் வடை எனக்கே...

  ReplyDelete
 3. தமிழ்மணம் எங்கே போச்சு? காணோம்.

  ReplyDelete
 4. வாங்க தலைவரே...


  நட்பு வட்டம் பற்றி தங்களின் பதிவு தொடரட்டும்...

  ReplyDelete
 5. /////
  நட்பு மட்டும் இல்லையென்றால் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பூஜ்யமாக முழுமை பெறாமலேயே போயிருக்கும். ////

  உண்மையான வார்த்தை...

  ReplyDelete
 6. நல்ல பதிவு நண்பா , வாழ்க்கையில் எது இல்லாமல் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் நண்பர்கள் இல்லாமல் வாழ்வது மிக சிரமம், பல பல சிக்கலான பிரச்ச்னைகளில் கூட சொந்தபந்தங்களை விட நண்பர்கள் மட்டுமே கூட இருப்பார்கள், உங்களின் நண்பர்களை பற்றி எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, என்னையும் தொடர்பதிவுக்கு அழைத்ததற்கும் நன்றி நண்பா, ஏற்கனெவே செங்கோவி ஒரு தொடர்பதிவு எழுத சொல்லி இருக்கிறார், நான் இன்னும் எழுதவில்லை, என்ன சொல்ல போகிறாரோ, ஹி ஹி நண்பர்தானே சமாளித்துக் கொள்ளலாம் :-)

  ReplyDelete
 7. நட்பை பற்றி நச்சுனு ஒரு பதிவு ..........நல்ல இருக்கு அண்ணன்

  ReplyDelete
 8. மீண்டும் என்னை நம்பி ஒரு அழைப்பு நன்றி அண்ணன்

  ReplyDelete
 9. அருமையா சொல்லி இருக்கீங்க...... !

  ReplyDelete
 10. ”நண்பேண்டா!:” பதிவினை இட்டு நட்பு மறப்பது நன்றன்று என்பதை நிரூபித்து விட்டீர்கள்!

  ReplyDelete
 11. நட்பிற்கு முதல் மரியாதை.நல்லதுதான்.

  ReplyDelete
 12. வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

  கொள்ளைகார பதிவர்கள்

  ReplyDelete
 13. பதிவுலக நண்பர்களையும் மறக்காது தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி கஸாலி..சீக்கிரம் எழுதுகின்றேன்.

  ReplyDelete
 14. //நண்பா, ஏற்கனெவே செங்கோவி ஒரு தொடர்பதிவு எழுத சொல்லி இருக்கிறார், நான் இன்னும் எழுதவில்லை, என்ன சொல்ல போகிறாரோ, // யோவ் இரவுவானம், நானே அதை மறந்துட்டேன்யா..உங்களைப் பத்தித் தெரியாம கஸாலி கூப்பிட்டிருக்காரு.

  ReplyDelete
 15. நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. அன்பு நண்பரே நன்றி என்னையும் என் எழுத்தையும்அங்கீகரித்து என்னை தொடர அழைத்தமைக்கு மிக்க நன்றி ,நட்பின் காலமும் களமும் என்றுமே பசுமையான நினைவுகளே அந்த நினைவுகளை எழுத கசக்குமா என்ன, விரைவில் மலரும் மலரும் நினைவுகள்

  ReplyDelete
 17. நண்பர்களை பற்றிய பதிவு super.

  ReplyDelete
 18. வணக்கம் ரஹீம் ஆருமையான பதிவு

  ReplyDelete
 19. நண்பர்களை பற்றி நல்ல பதிவு...வாழ்க்கையில் எது இல்லாமல் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் நண்பர்கள் இல்லாமல் வாழ்வது மிக சிரமம்.....நட்பு வட்டம் பற்றி தங்களின் பதிவு தொடரட்டும்...

  ReplyDelete
 20. என் எண்ணங்களை விரைவில் எழுதுகிறேன் கஸாலி!

  ReplyDelete
 21. நல்ல பதிவு.என்ன கஸாலி சார் முன்ன மாதிரி முப்பது நாளுக்கு முப்பத்தோரு பதிவெல்லாம் போடுறதில்லையா?

  ReplyDelete
 22. சுருக்கமாகஆயினும் தெளிவாக மிகத் தெளிவாக
  நண்பர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள்
  நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.