என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, July 13, 2011

22 மறைந்தும் மறையாமல்.....எனக்கு எல்லாமுமாய் இருந்து
இன்று இல்லாமல் போய்விட்ட
என் தந்தையே.....

உன் மரணத்திற்கு முன்
மரணத்தின் பாதிப்பை நான் அறிந்ததில்லை....
உன் மரணத்திற்கு பின்
வேறு எந்த மரணமும் என்னை பாதித்ததில்லை.

நீ இந்த உலகைவிட்டு அஸ்தமித்து போயிருந்தாலும்
எஙகள் உள்ளத்தில் தினமும்  உதயமாகிக்கொண்டே இருக்கிறாய்....

(கடந்த ஆண்டு இதே நாளில்(13-07-2010) எங்களை விட்டு பிரிந்த என் பாசமிகு தந்தை அப்துல் ரஹீம் அவர்களின் மறைவு நாள் இன்று)


Post Comment

இதையும் படிக்கலாமே:


22 comments:

 1. உங்கள் சோகங்களை நானும் பகிர்ந்துக் கொள்கிறேன்...

  ReplyDelete
 2. தந்தையின் பிரிவு என்பதை நானும் 12 வயதில் அனுபதிவித்துவிட்டேன்....

  அது இயத்திலே தய்ங்கிவிட்ட இடி...
  கண்ணைவிட்டு அகலாத வலி...

  ReplyDelete
 3. அன்புடன் கஸாலி,
  வணக்கம் .
  தந்தையை பற்றிய தங்களின் நினைவு கூறல் பதிவில்,தங்களின் காயத்தின் ஆழத்தை உணர்கிறேன் .
  அவரின முதலாம் ஆண்டு நினைவு நாள் அவரின ஆத்ம சாந்திக்கு மற்றுமொரு வேண்டுதலாக இருக்கட்டும் .

  என்றென்றும் அன்புடன் ,
  சுகி ...

  ReplyDelete
 4. அன்பின் கஸாலி - மறைந்த தந்தைக்கு அஞ்சலிகள் - ஆண்டொன்று கழிந்தாலும் தினந்தினம் நினைவில் வந்து நல்வழி நடத்துவார். நட்புடன் சீனா

  ReplyDelete
 5. இறைவன் அவர்களை சுவனவாசியாய் இருக்கவைக்க என் பிராத்தனைகள்.

  ReplyDelete
 6. என்னுடைய அஞ்சலிகள்...

  ReplyDelete
 7. தந்தைக்கு அஞ்சலி ., ., .

  ReplyDelete
 8. இறைவன் அவர்களை சுவனவாசியாய் இருக்கவைக்க என் பிராத்தனைகள்.உறவுகாரன் என்றால் விலகி நிற்க வாய்ப்பு இருக்கு நண்பனாகவே தொடர்வோம் ....நம்ம பக்கம் வாங்க உங்களுக்கு பரிட்சை இருக்கு

  ReplyDelete
 9. உங்களின் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் தந்தைக்கு அஞ்சலிகள் ///

  ReplyDelete
 10. மறைந்த தந்தைக்கு அஞ்சலிகள் ...

  ReplyDelete
 11. அந்த வலியை நானும் அறிவேன் கஸாலி..தந்தை மகனுக்காற்றும் உதவி அவை முன் முந்தி இருக்கச் செய்வதே. அதைச் சரியாகச் செய்துவிட்டே போயிருக்கிறார்கள். அன்னாரது ஆத்மா நிச்சயம் சாந்தி அடைந்திருக்கும்.

  நமது குடும்ப வரலாற்றின் சுவடுகளையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.

  ReplyDelete
 12. வணக்கம் சகோ, உங்கள் தந்தையினை நினைவு கூறும் இந் நாளில், எனது உணர்வுகளையும், அஞ்சலிகளயும், உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

  உங்கள் தந்தையின் இலட்சியக் கனவினை நிறைவேற்றி, சமூகத்தில் உயர்ந்து நல்ல மகனாக வாழ வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 13. எங்களது மனப்பூர்வ அஞ்சலி.

  ReplyDelete
 14. தங்கள் இழப்பு ஈடுசெய்ய முடியாததுதான்
  காலம்தான் ஆறுதல் படுத்த முடியும்
  தங்கள் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய
  ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 15. தந்தையை இழந்த துயரம் எவ்வளவு வேதனை என்பது அனுபவத்தில் உணர்ந்தவன் நான். தாயிற்கு நிகராக தந்தைக்கு இருக்கும் பங்கினை வெளியுலம் பரவலாக உணராத போதும், ஒரு இழப்பின் போது அக்குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அதை கடுமையாக உணர்வர். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்!

  ReplyDelete
 16. உங்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும், உங்கள் தந்தைக்கு அஞ்சலி. உங்களை எந்நாளும் வழி நடத்திக் கொண்டு தான் இருப்பாங்க.

  ReplyDelete
 17. மதிப்பிற்கு உரிய ரஹீம் அய்யாவிற்கு என் அஞ்சலி...

  ReplyDelete
 18. உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  ReplyDelete
 19. எனது அஞ்சலிகளும்! விரைவில் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கட்டும்!

  ReplyDelete
 20. மறைந்த தங்கள் தந்தைக்கு என் அஞ்சலிகள்

  ReplyDelete
 21. இதே இழப்பு என்னையும் தாக்கியது. அதன் வலியை உணர்வேன். கடந்து செல்வோம். அவர்கள் ஆசியுடன்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.