என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, June 20, 2011

8 புலன் விசாரணை-12


முந்தைய பாகங்கள் 
"மனோகரன் ஒரு நிமிடம் அதிர்ந்தார் பின்னர் சுதாரித்தவராய்....
வாங்க சார்....வாங்க....உட்காருங்க..."

"நான் இப்ப உட்கார வரல, உங்கள கைது பண்ணலாம்ன்னு வந்திருக்கேன்"

"என்னது கைதா? கைது பண்ணும் அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்."

"சேகரை பார்த்துமா  புரியல?...கொலை...கொலை பண்ணிருக்கீங்க...அதுவும் நடிகை ஸ்ரீமதிய...."

"சார்...தப்பா வந்துருக்கீங்க...நான் எதுக்கு ஸ்ரீமதியை கொலை பண்ணனும்...."

"அதை கேட்கத்தான் நான் வந்திருக்கேன். எல்லாத்தையும் சேகர் சொல்லியாச்சு....நீங்களும் சொல்லிட்டீங்கன்னா காதும் காதும் வச்சமாதிரி இங்கேருந்து கூட்டிக்கு போயிருவோம். நாளை காலைலதான் பேப்பர பார்த்து மக்கள் தெரிஞ்சுக்குவாங்க....முரண்டு பிடிச்சா நாலு பேரு பார்க்கற மாதிரி அடிச்சு இழுத்துக்கு போவோம்...நாளைக்கு பேப்பர பார்த்து தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் இன்னைக்கே அதுவும் இப்பவே எல்லோருக்கும் தெரிஞ்சிடும். வசதி எப்படி?"

"சொல்றேன் சார்...சொல்றேன்..."

"உங்களுக்கும் ஸ்ரீமதிக்கும் கொலைபன்னுற அளவுக்கு என்ன மோட்டிவ்?"

"அதுவந்து....ஆறுமாசத்துக்கு முன்னாடி என் படத்துல அவங்க நடிச்சு கொடுத்தாங்க.....அந்த படத்துக்காக நான் சம்பள பாக்கி ரெண்டு லட்ச ரூபா தரனும். அந்த படம் சுமார போச்சு. அதனால எனக்கு கொஞ்சம் நட்டம் ஆச்சு. அந்த நேரத்துல அவங்களுக்கு தரவேண்டிய சம்பள பாக்கியை கேட்டாங்க...கொஞ்சம் டைம் கேட்டேன். அவங்களும் ஒருவாரம் டைம் கொடுத்தாங்க...நானும் ஒருவாரம் கழிச்சு ஒரு தேதிய போட்டு ஒரு செக் கொடுத்தேன். ஒரு வாரத்துக்குள்ளே எப்படியும் ரெண்டு லட்ச ரூபாயை புரட்டிடலாம்ன்னு நம்பிக்கையில்தான் கொடுத்தேன். சொன்னமாதிரி கொடுக்க  முடியல..செக்கும் பவுன்ஸ் ஆயிடுச்சு. இதனால என் மேல கேஸ் போடுவேன்னு அவங்க மிரட்டுனாங்க...சமாதானம் பேச அவங்க வீட்டுக்கு போனேன்...."

"எப்ப போனீங்க?"

"சம்பவம் நடந்த அன்னிக்கு...."

"அப்படின்னா...கொலை பண்ணும் முடிவோடதான் அங்கே போயிருக்கீங்க..அப்படித்தானே?"

"சத்தியமா அந்த முடிவோட போகல....முடிஞ்ச வரையும் சமாதானமா போகணும்ன்னு நினைச்சுத்தான் போனேன். அங்கே அவங்கள பார்த்து இன்னும் ஒரு பத்துநாள் பொறுத்துக்கங்க...படத்த ஒரு சேட்டிலைட் டிவிக்கு விக்கப்போறேன். கொஞ்சம் பணம் கிடைக்கும் அதுக்கப்புறம் உங்களுக்கு செட்டில் பண்றேன்னு எவ்வளவோ சொன்னேன். அவங்க கேக்கல...அந்த நேரத்துல எனக்கு கோவம் வந்துருச்சு.என்னடா இவ்வளவு தூரம் கெஞ்சறோம்.கொஞ்சம் கூட பிடி கொடுக்க மாட்டேன்னு சொல்றாளேன்னு  விட்டேன் பாருங்க ஒரு அரை...டக்குன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா..."

"அப்புறம் "

"பட்டுன்னு அங்கே கிடந்த துப்பட்டாவ எடுத்து அவ கழுத்துல போட்டு இருக்குனேன். உடனே அவளுக்கு விழிப்பு வந்து திமிறினா...அந்த நேரத்துல நான் உங்களுக்கு உதவுறேன்னு சொல்லிட்டு அவன் வந்தான். அவன்  கைய்ய  இறுக்கி பிடிச்சுக்கிட்டான். நான் கழுத்த இருக்கினேன்.கொஞ்ச நேரத்துல ஸ்ரீமதி செத்துட்டா...."

"அவன் வந்தான்னு சொன்னீங்களே....அவன் எவன்?"

அவன்....அவன்...

"ம்...சொல்லுங்க...."

"ஸ்ரீமதியோட காதலன் தரன்"
 

விசாரணை தொடரும் Post Comment

இதையும் படிக்கலாமே:


8 comments:

 1. ஆஹா..வடை எனக்கே!

  ReplyDelete
 2. தமிழ்மணத்துல இணைக்க முயன்றேன்..முடியலை..ஏன்?

  ReplyDelete
 3. வந்தேன் குருவே ...நானும் தமிழ் மனத்தில் இணக்க முயன்றேன் முடியல

  ReplyDelete
 4. என்னாச்சு தமிழ்மணம்?

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.