என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, June 18, 2011

16 புதுசு புதுசா சொல்றாங்கப்பா...

ஒரு உழவன் வயலில் மாடு பூட்டி உழுது கொண்டிருந்தான். அந்த மாட்டின் கொம்பில் ஒரு ஈ உட்கார்ந்திருந்தது. 
சிறிது நேரம் உழுத உழவன் ஏரில் பூட்டியிருந்த மாட்டை அவிழ்த்து தண்ணி காட்டி தீவனம் வைத்தான்.

 அப்போது மாட்டின் கொம்பில் உட்கார்ந்திருந்த ஈ அந்த உழவனை பார்த்து 
"மாட்டுக்கு மட்டும் தீவனம் வைக்கிறாயே? எனக்கும் உணவு கொடு"...என்றது. 

அதற்க்கு உழவன் "மாடு என்னோடு உழுது களைத்து விட்டது.அதற்க்கு உணவு கொடுக்கிறேன். நீ என்ன செய்தாய் உனக்கும் உணவு கொடுக்க" என்றான். 

அதற்க்கு அந்த ஈ, "மாட்டின் கொம்பில் உட்கார்ந்து கொண்டு நானும் தானே சேர்ந்து உழுதேன்" என்றதாம். 

இந்த கதை இப்ப எதுக்கு என்று கேட்கறீங்களா? சும்மா சொல்லனும்ன்னு தோனுச்சு சொன்னேன். 

ஆனால், இந்த கதைக்கும் ஜெயலலிதாவின் வெற்றியில் நடிகர் விஜய்க்கும் பங்கிருக்கிறது என்று நேற்று சீமான் சொன்னதற்கும் சம்பந்தமில்லை. Post Comment

இதையும் படிக்கலாமே:


16 comments:

 1. எல்லாத்தையும் கேட்க வேண்டி இருக்கு என்ன பண்றது தலைஎழுத்து.
  கண்டுக்காம விட்டுட்டா அமுங்கிடும்

  ReplyDelete
 2. எப்புடி எங்க ஆதரவு

  ReplyDelete
 3. எல்லாத்தையும் சொல்லிக்காட்டி சோலிய முடிச்சிபுட்டு சம்பந்தம் இல்லைனு வேற சொல்றீங்களா பாஸ்,

  ReplyDelete
 4. தேச துரோகி சீமானை முதலில் தேச துரோக சட்டப்படி உள்ளே தள்ளவேண்டும். பிரபாகரன் ஒரு தேடப்படும் குற்றவாளி..அவனை தலைவன் என்று இவ்வளவு திமிராக சொல்லுபவன் கண்டிப்பாக ஒரு தேச துரோகிதான் அல்லது பைத்தியக்காரன்..
  இந்த பேச்சின் மூலம் இவன் ஒரு பைத்தியக்காரன் என்று தெளிவாகிறது..கீழ்பாக்கத்துக்கு இவனை அனுப்பவேண்டும்..
  வைகோ என்ற தேச துரோகி ஒழிந்து விட்டான்..அவனைப்பற்றி பொருட்படுத்த தேவை இல்லை..

  ReplyDelete
 5. ஹா ஹா ஹா. செம காமெடி அண்ணே. இந்த கதை நடிகர் விஜய்க்கு அப்படியே பொருந்தும்.

  ReplyDelete
 6. நல்லா இருக்கே கதை, செமயா மேட்ச் ஆகுது

  ReplyDelete
 7. ஆனால், இந்த கதைக்கும் ஜெயலலிதாவின் வெற்றியில் நடிகர் விஜய்க்கும் பங்கிருக்கிறது என்று நேற்று சீமான் சொன்னதற்கும் சம்பந்தமில்லை. /// ஹஹாஹா நல்ல ஒரு எடுத்துக்காட்டு ....

  ReplyDelete
 8. பினிஷிங் டச் பினிஷிங் டச் என்பது இது தானா சூப்பர்

  ReplyDelete
 9. ஸலாம் சகோ.கஸாலி,
  பட்டவர்த்தனமான அரசியல் நகைச்சுவை. அருமையான ஒப்பீடு.

  ReplyDelete
 10. சம்மதம் இல்லை என சொல்லும் போதே டவுட்டா இருக்குதே! இந்த கதையை தேடி கண்டு பிடிச்சிங்களோ!

  ReplyDelete
 11. ம்ம்ம்ம்.....ரைட்டு!

  ReplyDelete
 12. இந்த மாதிரி டெக்னிக் பதிவு போடுவது எப்படி ? என சொல்லித்தரவும் ஹி ஹி

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.