என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, April 30, 2011

23 பதிவுலகில் ஒரு சுனாமி


சிராஜுதீன்.....எனக்கும் இவனுக்குமான நட்பு இன்று நேற்றல்ல....கடந்த இருபத்தைந்து வருடங்களை கடந்த நட்பு....எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்... அதில் இவனும் ஒருவன். நான் எல்லோரிடமும் நட்பாய் இருப்பேன். சிலரிடம் மட்டுமே நெருக்கமாய் இருப்பேன். அப்படி நெருக்கமாய் இருக்கும் சிலரில் இவனும் ஒருவன்.

MCA.,படித்துவிட்டு கடந்த ஐந்து வருடங்களாக  சென்னையில் சாஃப்ட்வேர் இஞ்சினியராக இருக்கிறான். உரையாட  எல்லோருக்கும் தெரியும்...ஆனால் வாதாட ஒரு சிலருக்குத்தான் தெரியும். இவன் உரையாடவும் வாதாடவும் தெரிந்தவன்.

அரசியல், சினிமா,விளையாட்டு, தொழில்நுட்பம் என்று அனைத்து டாபிக்கிலும் பட்டையை கிளப்புவான்.நிறைய விஷயம் தெரிந்தவன். அப்படிப்பட்டவனை கடந்த ஆறு மாதங்களாக பதிவுலகத்திற்கு வருமாறு அழைத்தபடியே இருந்தேன். போடா, காலையிலிருந்து இரவுவரை கம்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து மண்டை காயுது...இதில் பதிவுலகத்திற்கு வந்தால் இன்னும் மணிக்கணக்கில் கம்யூட்டர் முன் உக்கார வேண்டியதுதான்...அப்புறம் குடும்பத்தோடு ஸ்பென்ட் பண்ண முடியாது என்றான்.  இருந்தாலும் நான்  வாடா என்று அழைத்தபடியே இருந்தேன்.

கடந்த இரு வாரத்திற்கு முன்பு நான் சென்னைக்கு வந்து அவன் வீட்டில் தான் ஒருவாரம் தங்கினேன். அப்போது சில பிரபல பதிவர்களை சந்தித்தேன் (அது பற்றி தனியாக ஒரு பதிவு விரைவில் வரும்). இவனின் திறமையை பார்த்து சில பதிவர்கள் நீங்கள் ஏன் பதிவுலகத்திற்கு வரக்கூடாது என்று இவனிடம் கேட்டார்கள். விரைவில் வருகிறேன் என்று சொன்னவன் நேற்று வந்தே விட்டான்.

ஆம் டீக்கடை என்ற வலைப்பூவை ஆரம்பித்து எழுத ஆரம்பித்து விட்டான். ஆரம்பமே...அறிமுகமே கலக்கலாக எழுதியிருக்கான். போய் பார்த்துவிட்டு பின்னூட்டமிட்டு, வாக்குகளை போட்டு, follower-ஆக சேர்ந்து அவனை ஊக்கமும், உற்சாகமும் படுத்துமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இனி தொடர்ந்து பதிவுலகில் ஒரு சுனாமியை ஏற்படுத்துவான் என்று நம்புவோம்.

சிராஜுதீனின் வலைப்பூ முகவரி:

டீக்கடை......

  http://vadaibajji.blogspot.com/

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு


Post Comment

இதையும் படிக்கலாமே:


23 comments:

 1. ஹா ஹா கஸாலி அண்ணனின் கடந்த 4 பதிவுகளின் டைட்டிலைப்பார்கும்போது அண்ணன் ஒரு முடிவோட தான் களம் இறங்கி இருக்கார்னு தோணுது ஹி ஹி

  ReplyDelete
 2. அழைப்புக்கு செவிக்கொடுத்தாயிற்று....
  பதிவுலகில் சிறக்க நானும் கைகொடுக்கிறேன்...

  ReplyDelete
 3. வெரி டேஞ்சரஸ் பெல்லோ இவன கேர் புல்லா தான் ஹாண்டில் பண்ணனும்

  ReplyDelete
 4. நண்பருக்கு நல்லாவே டிரையினிங் கொடுத்திருக்கீங்க..இரண்டாவது பதிவிலேயே அ.தி.மு.க வை போட்டு காய்ச்சராறு

  ReplyDelete
 5. ஒரு நல்ல பதிவர் ஒரு புதிய பதிவரை அறிமுகபடுத்தி இருக்கும் விதம் அருமை...

  ReplyDelete
 6. அறிமுகப் பகிர்வுக்கு நன்றி தலைவா..!!நானும் இதோ பின்தொடர்கிறேன்.

  ReplyDelete
 7. பார்த்துட்டோம் சுனாமியை கருதும்போட்டுட்டோம்..ஓட்டு அது வந்து அதுவந்து.. வரட்டாஆஆஆ

  ReplyDelete
 8. கூர் பெயரை கொண்ட பதிவர்...நான்கு ஐந்து வலைத்தளம் வைத்திருப்பது அனைவருக்கும் தெரியும்...ஆனால் அவர் ஒரு பெண் பெயரில் எழுதி வருகிறார்...அவரே பெண் பெயரில் எழுதிவிட்டு ...அந்த பெண் தன்னை காதலிப்பதாக கதைவிட்டு கொண்டு இருக்கிறார்...இதையெல்லாம் பதிவர்கள் நம்பி கொண்டு இருக்கிறார்கள் தான் பிரபலம் ஆவதற்கு பெண் பெயரில் எழுதும் கூர் பதிவரை என்ன செய்வது

  அந்த பெண் பெயர் வலைத்தளம்

  http://avanidamnaan.blogspot.com/

  ReplyDelete
 9. அண்ணன் அஞ்சா சிங்கத்துக்கு நம்ம மேல என்ன கோபம்னு தெரியல... பட் இந்த டீலிங் எனக்கு புடிச்சு இருக்கு...

  ReplyDelete
 10. சகோ, உங்கள் நண்பரின் தளத்தை நேற்றே தரிசித்தேன், ஆனால் பின்னூட்டமிட நேரம் இடங் கொடுக்கவில்லை. முதல் பதிவே, அசத்தலாக கொடுத்திருந்தார்.

  அவரைப் பற்றிய அறிமுகம் அருமை.
  உங்களின் இம் நல்ல முயற்சிக்கு நன்றிகள்.
  உங்கள் சகோவிற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. //அப்போது சில பிரபல பதிவர்களை சந்தித்தேன்//

  ரொம்ப நன்றிங்கோ...

  ReplyDelete
 12. //அஞ்சா சிங்கம் said...

  வெரி டேஞ்சரஸ் பெல்லோ இவன கேர் புல்லா தான் ஹாண்டில் பண்ணனும்//

  அஞ்சாசிங்கமே.. கடவுள் இருக்காரா? இல்லையா? சிராஜுதீன் கேள்விக்கு பதில் சொல்ல மீண்டும் அழைக்கிறோம். மொதல்ல இருந்து ஆரம்பிப்போம்.

  ReplyDelete
 13. சும்மா கெடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையா நல்லா இருந்த மனுசனை ப்ளாக் பக்கம் கொண்டாந்துட்டீரு.. தேர இழுத்து தெருவுல வுட்ட மாரி! பாவம்யா அவரு! இனிமே ஓட்டு, ஹிட்ஸ், மொறவாசல்னு சித்தம் கலங்கி நிக்கப் போறாரு...

  சிராஜு... எதுக்கும் கொஞ்சம் உஷாராவே இருங்க! ஓட்டு, பின்னூட்ட அரசியல்ல இருந்து ஒதுங்கி நின்னாக்க காலவெள்ளத்தில் கரையேறி எதுத்து நிக்கலாம், இல்லன்னா கும்மிக் கும்பல்ல ஒருத்தரா மாறி, காணாம போயிடுவீங்க. உஷாருய்யா உஷாரு.

  நெஞ்சார்ந்த பிரியங்களுடன்,
  ராஜாராமன்.

  ReplyDelete
 14. சுனாமியா?பினாமியான்னு நாங்க மார்க் போடறோம்.முதல்ல அவரை அடிச்சு ஆடச் சொல்லுங்க:)

  ReplyDelete
 15. உங்கள் நண்பரின் வலையுலக பயணம் சிறக்க நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 16. உங்கள் வித்தைகள் அனைத்தையும் அவருக்கும் கற்றுக்கொடுங்கள்.

  ReplyDelete
 17. நாங்களும் ஆதரவளிக்கிறோம்.

  ReplyDelete
 18. மோதிரக்கையால் குட்டு உங்கள் நண்பருக்கு. வாழ்த்துக்கள்.சென்று பார்த்து க்டமையை முடிச்சிட்டோம்ல!
  உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.