என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, April 11, 2011

45 கலைஞரின் பொன்னர் சங்கர்-விமர்சனம்

 அதிகமாக சினிமா பார்க்கும் பழக்கம் இல்லாத காரணத்தால் எனக்கு விமர்சனம் எழுதி பழக்கமில்லை.  அப்படியே பார்த்தாலும் முதல் வாரம் பார்ப்பதில்லை. ஒரு படத்திற்காவது விமர்சனம் எழுத வேண்டும், அப்படி எழுதும்போது.....  நல்ல கதை, அருமையான திரைக்கதை, மனதை பிழியும் வசனங்கள், நேர்த்தியான இயக்கம், மனதில் நிற்கும் பாடல்கள் இப்படியெல்லாம் எழுதலாம்ன்னு தான் ஆசை........ஆனால் அப்படியெல்லாம் எழுதுவதற்கு  வாய்ப்பே இல்லாமல் இந்த விமர்சனம் எழுதவேண்டியதாகிவிட்டது.
ஏனென்றால், நான் பார்த்தது பொன்னர் சங்கர்.

படத்தோட கதையை வெறும் நூற்றி அறுபது கேரக்டரில் எழுதும் SMS-இல் எழுதினால்கூட இன்னும் ஒரு இருபது எழுத்து மிச்சமிருக்கும். விஜயகுமாரின்   மகளான  குஷ்புவிற்கும், கேப்டன் ராஜின் மகன் பிரகாஷ்ராஜிற்கும் திருமணம் நடக்கவிருக்கும் வேளையில்,  தன் முறைப்பையன் ஜெயராமை சந்திக்கும் குஷ்பு அவரையே திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கோபமடைந்த குஷ்புவின் உடன் பிறப்பு பொன்வண்ணன் அவரை   வீட்டைவிட்டு துரத்துகிறார்.அப்போது குஷ்பு "தனக்கு பிறக்கும்  ரெட்டை குழந்தைகளான ஆண் பையன்களுக்கு  உனக்கு பிறக்கும் இரண்டு பெண்களை திருமணம் செய்து வைப்பேன்"(என்ன ஒரு தீர்க்க தரிசனம்....தனக்கு ரெட்டை குழந்தைதான் பிறக்கும், அதுவும் ஆண் குழந்தைதான் பிறக்கும்...அவரது அண்ணன் பொன்வண்ணனுக்கு பிறக்கப்போவது பெண் குழந்தைகள் தான் என்று கல்யாணம் ஆன மறுநிமிடமே கண்டுபிடித்து விடுகிறாரே....)என்று சபதமேற்கிறார். பிரசாரத்திற்கு கிளம்பியிருக்கும் காமடி பீசுகளை போல நெப்போலியன், ராஜ்கிரண், நாசர், சினேகா, சீதா பொன்னம்பலம் உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து அவரது சபதம்  நிறைவேற பாடுபடுகிறார்கள். அம்புட்டுதாங்க...

கலைஞர் தேர்தல் பிரசார அவசரத்தில் வசனம் எழுதியிருப்பாரோ அல்லது வயசான காலத்தில் எதுக்கு கலைஞரை கஷ்ட படுத்துவானேன்னு இயக்குனர் தியாகராஜன் நினைத்தாரோ என்னவோ......ரொம்பவும் கம்மியான வசனம் தான். (கலைஞரின் கதாநாயகி (தேர்தல் அறிக்கை)யில் கூட அதிக வசனங்கள்). அதிலும் இரு வேடங்களில் நடித்திருக்கும் பிரசாந்த்கள் அதிகமாக வசனத்தை பேச மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு வந்திருப்பார்கள் போல...ஆளுக்கு ஒரு நாலு வார்த்தை பேசிவிட்டு மணிரத்னம் பட ஹீரோக்களுக்கு செமத்தியான போட்டியை கொடுக்கிறார்கள்.

இளையராஜா இருந்தும் பாடல்கள் இனிக்கவில்லை.
முன்பெல்லாம் கலைஞர் படம் பார்த்தால்...அந்த பாத்திரத்தோடு ஒன்றி  உணர்ச்சி பிழம்பாக இருப்பார்களாம்.
இப்போது சீரியசான காட்சிகளை கூட காமடியாக எடுத்துக்கொண்டு தியேட்டரில் ஆடியன்ஸ் சிரிக்கிறார்கள்.
இது கலைஞரின் தோல்வியா? இயக்குனரின் தோல்வியா? அல்லது காலம் மாறிவிட்டதா என்று  தெரியவில்லை.

படத்திற்கு பிளஸ் என்று பார்த்தால் கலை இயக்குனரின் கைவண்ணம் தான். செட் டிசைனை அருமையாக போட்டிருக்கிறார்.
இன்னொரு பிளஸ்....சரித்திர படங்களென்றால் மூணு மணிநேரம் ஓடுமோ என்று நினைத்து நெளிந்தவர்களை ஆறுதல் படுத்தும் விதமாக இரண்டுமணி நேரம் பத்து நிமிடத்தோடு படம் முடிந்தது.

கொங்கு மண்டலத்தில் கட்சி ரொம்ப வீக்காக இருக்கிறது என்பதை அறிந்த கலைஞர் அந்த பகுதி ஹீரோக்களான பொன்னர்  சங்கர் கதையை தூசி தட்டி, தியாகராஜன் பணத்தில்  புத்திசாலித்தனமாக பிரச்சாரம் செய்துள்ளார்.
ஆங்காங்கே 'பதவிக்காக யாரிடமும் அடிமையாக இருக்க மாட்டோம், வளைந்து கொடுக்க மாட்டோம்., மாநில சுய ஆட்சி' என்று காங்கிரசிற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மொத்தத்தில்  1950,60-ஆம் ஆண்டுகளில் அதாவது கடந்த  நூற்றாண்டில்   திரைக்கதை வசனம் எழுதி கலைஞர் சம்பாதித்த  பெயரை...இப்போது இந்த நூற்றாண்டில்  அவரே கெடுத்து கொள்கிறார் என்று அழுத்தமாக சொல்லும் கலைஞர் படங்களில் இதுவும் ஒன்று.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க்= அதற்க்கு இந்தவார ஆனந்த விகடனை பார்த்துக்கங்க...

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்: அவங்க என்ன போடுவாங்கன்னு எனக்கு என்ன தெரியும்?
Post Comment

இதையும் படிக்கலாமே:


45 comments:

 1. >>இது கலைஞரின் தோல்வியா? இயக்குனரின் தோல்வியா? அல்லது காலம் மாறிவிட்டதா என்று தெரியவில்லை.


  சரித்திரக்கதையை சினிமாவுக்கு ஏற்றபடி திரைக்கதை அமைக்கும்போது ஏற்படும் தடுமாற்றம் இது.. நாளை மணிரத்னம் கூட பொன்னியின் செல்வனில் சறுக்குவார்

  ReplyDelete
 2. >>எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க்= அதற்க்கு இந்தவார ஆனந்த விகடனை பார்த்துக்கங்க...

  எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க்: அவங்க என்ன போடுவாங்கன்னு எனக்கு என்ன தெரியும்?

  ஹி ஹி என்னை நக்கல் அடிக்கலைன்னா அண்ணனுக்கு தூக்கம் வராது போல..

  ReplyDelete
 3. நாங்களே பாக்காம சும்மா இருக்கோம்.. அதுக்குள்ள என்ன அவசரம்..?

  கேபிள் சங்கர்

  ReplyDelete
 4. //நல்ல கதை, அருமையான திரைக்கதை, மனதை பிழியும் வசனங்கள், நேர்த்தியான இயக்கம், மனதில் நிற்கும் பாடல்கள் இப்படியெல்லாம் எழுதலாம்ன்னு தான் ஆசை........ஆனால் அதற்க்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. காரணம் நான் பார்த்தது பொன்னர் சங்கர்.//பாவம்யா நீங்க...

  ReplyDelete
 5. //நல்ல கதை, அருமையான திரைக்கதை, மனதை பிழியும் வசனங்கள், நேர்த்தியான இயக்கம், மனதில் நிற்கும் பாடல்கள் இப்படியெல்லாம் எழுதலாம்ன்னு தான் ஆசை........ஆனால் அதற்க்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
  காரணம் நான் பார்த்தது பொன்னர் சங்கர்.// அடப்பாவமே..கஸாலி நிலைமை இப்படியா ஆகணும்..

  ReplyDelete
 6. விமர்சனம் நல்லாதான் இருக்கு.. தொடர்ந்து எழுதுங்க..

  ReplyDelete
 7. விமர்சனம் சூப்பரு அப்படியே சிபிய வார்னதும் சூப்பரு ஹிஹி!

  ReplyDelete
 8. "(என்ன ஒரு தீர்க்க தரிசனம்....தனக்கு ரெட்டை குழந்தைதான் பிறக்கும், அதுவும் ஆண் குழந்தைதான் பிறக்கும்...//

  இது என்ன பாஸ் ஆச்சர்யம்? திமுகவுக்கு வோட்டு போட்டா குசுபு மாதிரி பொறக்குமாம்ல? அம்மணி சொல்லியிருக்கு தெரியுமா?

  ReplyDelete
 9. சினிமா விமர்சனமும் உங்களுக்கு நன்றாக கைவருகிறது. தொடர்ந்து எழுதுவீர்களா?

  ReplyDelete
 10. விமர்சனத்தின் ஆரம்பம் அட்டகாசம்...

  ReplyDelete
 11. //ஆளுக்கு ஒரு நாலு வார்த்தை பேசிவிட்டு மணிரத்னம் பட ஹீரோக்களுக்கு செமத்தியான போட்டியை கொடுக்கிறார்கள்.//


  இது சூப்பரு...

  ReplyDelete
 12. "கொங்கு மண்டலத்தில் கட்சி ரொம்ப வீக்காக இருக்கிறது என்பதை அறிந்த கலைஞர் அந்த பகுதி ஹீரோக்களான பொன்னர் சங்கர் கதையை தூசி தட்டி, தியாகராஜன் பணத்தில் புத்திசாலித்தனமாக பிரச்சாரம் செய்துள்ளார்".
  ஹி..ஹி.. இது விமர்சனமா இல்ல புலனாய்வான்னு தெரியலை...

  ReplyDelete
 13. இப்போதைக்கு ஓட்டு மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்... விரிவான பின்னூட்டங்களை பின்னிரவில் வந்து போடுகிறேன்...

  ReplyDelete
 14. /ஆளுக்கு ஒரு நாலு வார்த்தை பேசிவிட்டு மணிரத்னம் பட ஹீரோக்களுக்கு செமத்தியான போட்டியை கொடுக்கிறார்கள்.//
  சூப்பர்.

  //எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க்= அதற்க்கு இந்தவார ஆனந்த விகடனை பார்த்துக்கங்க...

  எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க்: அவங்க என்ன போடுவாங்கன்னு எனக்கு என்ன தெரியும்?//

  உச்சகட்ட ரவுசு. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா ரெண்டு பிரஷாந்த் "நடிச்சி" இருக்காங்கன்னு சொன்னதுதான் மனசை உறுத்துது.

  ReplyDelete
 15. //Philosophy Prabhakaran said... 16
  இப்போதைக்கு ஓட்டு மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்... விரிவான பின்னூட்டங்களை பின்னிரவில் வந்து போடுகிறேன்.//


  இரண்டாவது முறை படம் பார்த்தாலாவது பிரசாந்த் ரெண்டு வரி எக்ஸ்ட்ரா பேசுவறோன்னு பாக்க கெளம்பிட்டீங்க. வாழ்த்துகள்!!

  ReplyDelete
 16. நல்லாவே இருக்கு விமர்சனம்!
  ஓட்டுப் போட்டாச்சு!

  ReplyDelete
 17. மொத்தத்தில் 1950,60-ஆம் ஆண்டுகளில் அதாவது கடந்த நூற்றாண்டில் திரைக்கதை வசனம் எழுதி கலைஞர் சம்பாதித்த பெயரை...இப்போது இந்த நூற்றாண்டில் அவரே கெடுத்து கொள்கிறார் என்று அழுத்தமாக சொல்லும் கலைஞர் படங்களில் இதுவும் ஒன்று.


  .......அவ்வ்வ்வவ்......

  ReplyDelete
 18. ஹி...ஹி..ஹி.. ரொம்ப சிம்பிளா நச்சுனு சொல்லீட்டீங்க தல...!!

  ReplyDelete
 19. வந்தேன் வாக்களித்து சென்றேன்

  ReplyDelete
 20. //படத்தோட கதையை வெறும் நூற்றி அறுபது கேரக்டரில் எழுதும் SMS-இல் எழுதினால்கூட இன்னும் ஒரு இருபது எழுத்து மிச்சமிருக்கும். //

  உங்கள் விமர்சனத்தில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இது தான்...

  வயசான காலத்துல தமிழ்நாட்டை ஆட்டைய போட்டோமா போனோமான்னு இல்லாம, இந்த வேலையெல்லாம் இவருக்கு எதுக்கு?

  ReplyDelete
 21. ///////ஒரு படத்திற்காவது விமர்சனம் எழுத வேண்டும், அப்படி எழுதும்போது..... நல்ல கதை, அருமையான திரைக்கதை, மனதை பிழியும் வசனங்கள், நேர்த்தியான இயக்கம், மனதில் நிற்கும் பாடல்கள் இப்படியெல்லாம் எழுதலாம்ன்னு தான் ஆசை........////////

  அப்படின்னா நீங்க 1985-ல வந்த படங்களைத்தான் பாக்கனும்.......

  ReplyDelete
 22. ///////ஆனால் அதற்க்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
  காரணம் நான் பார்த்தது பொன்னர் சங்கர்.
  ////////

  இளைஞன் பாத்திருந்தீங்கன்னா தெரியும், இந்தளவுக்குக் கூட தேத்தி இருக்க முடியாது.......!

  ReplyDelete
 23. ///////ஆனால் அதற்க்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
  காரணம் நான் பார்த்தது பொன்னர் சங்கர்.
  ////////

  இளைஞன் பாத்திருந்தீங்கன்னா தெரியும், இந்தளவுக்குக் கூட தேத்தி இருக்க முடியாது.......!

  ReplyDelete
 24. உங்களுக்கு ரொம்ப தில்லுதாங்க

  ReplyDelete
 25. ///////"(என்ன ஒரு தீர்க்க தரிசனம்....தனக்கு ரெட்டை குழந்தைதான் பிறக்கும், அதுவும் ஆண் குழந்தைதான் பிறக்கும்...அவரது அண்ணன் பொன்வண்ணனுக்கு பிறக்கப்போவது பெண் குழந்தைகள் தான் என்று கல்யாணம் ஆன மறுநிமிடமே கண்டுபிடித்து விடுகிறாரே....)//////////

  இதெல்லாம் ஓவரா தெரியல....? ஏதோ படம் எடுத்திருக்காய்ங்கன்னா பாத்துட்டு போக வேண்டியதுதானே?

  ReplyDelete
 26. ////////பிரசாரத்திற்கு கிளம்பியிருக்கும் காமடி பீசுகளை போல நெப்போலியன், ராஜ்கிரண், நாசர், சினேகா, சீதா பொன்னம்பலம் உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து அவரது சபதம் நிறைவேற பாடுபடுகிறார்கள். ////////

  இவிங்களுக்கு இனி தலைவர் வாய்ப்பு கொடுத்தாத்தான் உண்டு.... பாவம் வேற என்ன பண்றது?

  ReplyDelete
 27. //////அதிலும் இரு வேடங்களில் நடித்திருக்கும் பிரசாந்த்கள் அதிகமாக வசனத்தை பேச மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு வந்திருப்பார்கள் போல...///////

  யோவ் இந்த பிரசாந்து ஸ்க்ரீன்ல வர்ரதே தாங்க முடியல, அதுல வேற வசனம் கம்மியா பேசிட்டாருன்னு சலிச்சுக்கிறீங்க?

  ReplyDelete
 28. வைகை said... 11

  "(என்ன ஒரு தீர்க்க தரிசனம்....தனக்கு ரெட்டை குழந்தைதான் பிறக்கும், அதுவும் ஆண் குழந்தைதான் பிறக்கும்...//

  இது என்ன பாஸ் ஆச்சர்யம்? திமுகவுக்கு வோட்டு போட்டா குசுபு மாதிரி பொறக்குமாம்ல? அம்மணி சொல்லியிருக்கு தெரியுமா?
  ////////////////////////////////////////
  ஆப்படியா அப்போ குஸ்பு சொன்னா பளிசிடுமா ......
  கொழு கொழு குழந்தை வேண்டுபவர்கள் பார்த்து குத்தவும் (தி.மு.க.)

  ReplyDelete
 29. ஆனாலும் உமக்கு தில்லு ரொம்பத்தான்.. தகிரியமா போய் படத்த பார்த்திருக்கிறீரே!!! ஆனந்த விகடன் , குமுதம் என்னாத்துக்கு??? எங்க கலைஞர் டீவியில் இன்னும் ஒரு மாசத்துக்கு நம்பர் 1 ..

  ReplyDelete
 30. படத்தோட பாதில துக்கம் வந்துட்டு

  ReplyDelete
 31. இந்த படத்த பார்த்தாலும் ஒன்னு தான், பாக்கலேன்னாலும் ஒன்னு தான்.

  ReplyDelete
 32. வழக்கம்போல இலவச டிக்கெட் கிடைக்குமா நண்பரே...

  ReplyDelete
 33. பா.ம.க வேட்பாளர் படங்கள் & விவரங்கள்  இங்கே காண்க:


  http://pmkmla.blogspot.com/


  http://pmkmla.blogspot.com/2011/03/2011.html


  http://arulgreen.blogspot.com/

  ReplyDelete
 34. //////அதிலும் இரு வேடங்களில் நடித்திருக்கும் பிரசாந்த்கள் அதிகமாக வசனத்தை பேச மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு வந்திருப்பார்கள் போல...///////

  யோவ் இந்த பிரசாந்து ஸ்க்ரீன்ல வர்ரதே தாங்க முடியல, அதுல வேற வசனம் கம்மியா பேசிட்டாருன்னு சலிச்சுக்கிறீங்க?


  hiiiiiiiiii..........................................

  ReplyDelete
 35. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல விமர்சனம் படித்த திருப்தி அன்புடன் கீழை.எ.கதிர்வேல்

  ReplyDelete
 36. "'படத்துல ஓபனிங்லாம் நல்லா தான் இருக்குது....ஆனா பினிஷிங் சரி இல்லையேபா"...நு கூட சொல்ல முடியல....படம் அவ்வளவு கேவலமா இருக்கு....

  ReplyDelete
 37. கலைஞருக்கு
  பாவம் தமிழக மக்கள் அழுதுவிடுவார்கள் என
  எடுத்துச்சொல்ல தைரியம் உள்ளவர்கள் யாரும்
  தமிழ் சினிமா உலகில் இல்லை
  காலம் மாறிவிட்டது என்று புரிந்து கொள்ளுகிற
  நிலையிலும் கலைஞர் இல்லை
  எனவே படம் அப்படித்தான் இருக்கும்
  ஆனால் உங்கள் விமர்சனம் அருமை
  தாராளமாக தொடர்ந்து எழுதலாம்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 38. அண்ணன் கலகிடிங்கரியாஸ்மலேசியா

  ReplyDelete
 39. அன்பின் கஸாலி - எப்படி விமரசனம் எத்தனை பேர் எழுதினாலும் நாங்கள் 10 `15 நாட்கள் கழித்து சென்று பார்ப்ப்போம். எங்கள் வீட்டிற்கு அருகில் - கூட்டமே இல்லாத அரங்கில் - சாவகாசமாக சென்று பொழுது போக்கிப் பார்த்துவருவோம்.

  ReplyDelete
 40. காரணம் நான் பார்த்தது பொன்னர் சங்கர்.//

  வணக்கம் சகோ ட்ரெயிலரையே காமெடியுடன் ஆரம்பித்திருக்கிறீர்களே;-))

  ReplyDelete
 41. விமர்சனத்தில் கதை வசனம் பற்றிய விமர்சிப்பிற்கே முதன்மையளித்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.

  தொழில் நுட்பம், பாடல் வரிகள், இசை பற்றியும் கொஞ்சம் அலசியிருக்கலாம். பதிவு நீண்டு விடும் என்பதால் சுருக்கினீர்களே தெரியாது.

  உங்களின் முதல் முயற்சியில் கை தேர்ந்த ஒரு விமர்சகனின் பார்வை தெரிகிறது. வாழ்த்துக்கள் சகோ.

  தாமதமான வரவிற்கு மன்னிக்கவும்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.