என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, April 18, 2011

22 காங்கிரசை கலைத்து விடுங்கள் சொக்கத்தங்கமே......


டந்த சிலநாட்களாக காங்கிரசில் அசிங்கங்களும்,அபத்தங்களும் அரங்கேறி வருகிறது. இத்தாலி தங்கம் சோனியா, கொலம்பியா நாட்டு(வருங்கால) மருமகன் ராகுல் அவர்களின் மேற்பார்வையில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகளும், சித்து விளையாட்டும் செய்திருந்தார் தங்கபாலு.

இதோ இப்போது எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் போன்றோரை கட்சியிலிருந்து நீக்கி அடுத்த காமெடிக்கு அடிபோட்டிருக்கிறார் அண்ணன் தங்கபாலு.

ஆனால், சேர்ந்தே இருப்பது எது? என்ற திருவிளையாடல் பாணி கேள்விக்கு எல்லோரும் பட்டென்று பதில் சொல்வது காங்கிரசும், கோஷ்டி பூசலும் என்றுதான். இது இன்றில்லை தொன்றுதொட்டு தொடர்கிறது.
காமராஜர் காலத்திலேயே....இல்லை இல்லை...அதற்க்கு முன்பு தீரர் சத்தியமூர்த்தி காலத்திலேயே சத்தியமூர்த்தி, ராஜாஜி என்று பல கோஷ்டிகள் இருந்து ஒருவருக்கொருவர் காலை வாரிக்கொண்டு இருந்தார்கள். இப்போது காமராஜர் உயிரோடு வந்தால் கூட சத்தியமூர்த்தி பவன் கோஷ்டி பூசலில் சிக்கி வேஷ்டி இழப்பது நிச்சயம்.
இப்போது விசயத்திற்கு வருவோம்....
ஒரு மாநிலதலைமை ஒரு வேட்பாளரை அறிவித்து விட்டால்.....அல்லது ஒருவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் கொடும்பாவி கொளுத்துவது, எதிர்ப்பு தெரிவிப்பது என்று இருக்கிறார்கள்.  மாநில தலைமை சொல்லும் எதையுமே நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், அன்னை சோனியா சொன்னால்தான் ஏற்றுக்கொள்வோம் என்று அடம்பிடித்தால் என்ன செய்வது?....சாப்பிடுவது,தூங்குவது, ஒன்னுக்கு,ரெண்டுக்கு போவது தவிர மற்ற எதையுமே சோனியா சொல்லாமல் செய்யக்கூடாது என்பது காங்கிரசின் எழுதப்படாத சட்டம், சுயமாக சிந்திக்கும் திறமையை இழந்தவர்கள் காங்கிரசார். சோனியாவின் ஒப்புதல் இல்லாமலா இதையெல்லாம்  தங்கபாலு செய்திருப்பார்? எல்லாவற்றையையுமே சோனியாதான் சொல்லவேண்டுமென்றால் அப்புறம் மாநில தலைமை எதுக்கு?மாநில தலைவர் எதற்கு?


கோஷ்டி தலைவர்களிலிருந்து சத்தியமூர்த்தி பவன் வாட்ச்மேன் வரை யாருமே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மதிப்பதில்லை. அது தங்கபாலு என்றில்லை....வேறு யாராக இருந்தாலும்.....இப்படிப்பட்ட மண்குதிரைகளை நம்பி 1967-இல் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிப்பது என்பது இன்னும் பல நூற்றாண்டு கடந்தாலும் கனவே....பேசாமல் காந்தி சொன்னது போல காங்கிரசை கலைக்கும் வேலையை இந்திய அளவில் செய்யாவிட்டால் கூட தமிழக அளவிலாவது செய்து விடவும். ஆம்...தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டியை கலைத்துவிட்டு உங்கள் நேரடி பார்வையில் வைத்து கொள்ளுங்கள் சொக்கத்தங்கமே...சத்திய மூர்த்தி பவனை ஏதாவது கல்யாண மண்டபமாகவோ, சினிமா தியேட்டராகவோ மாற்றினால் வாடகையாவது கிடைக்கும்.
வரும்தேர்தல்களில் தி.மு.க., அல்லது அண்ணா.தி.மு.க-விற்கு ஆதரவளிப்பதன் மூலம் காமராஜர் ஆட்சியை கழகங்கள் மூலம் கண்டு களியுங்கள்...இதைத்தவிர வேறு நிரந்தர வழியில்லை.
 

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


22 comments:

 1. நானும் வந்துடேன்.ஓட்டை போட்டுட்டேன்.

  ReplyDelete
 2. தலைவா...

  ஏற்கனவே சத்தியமூர்த்தி பவன் ஒரு பஜனை கூடம் தான்...

  சத்தியமூர்த்தி பவன்ல வச்சு தான் காங்கிரஸ்காரங்க எல்லாரையும் திருமா க்ரூப் சாத்தி எடுத்தாங்க.. தமிழ்நாட்டுல காங்கிரஸ ஒரு புல் பூண்டு இல்லாத அளவுக்கு பண்ணிடுவோம்னு சொல்லி மியாவ், மியாவ்னு கத்தினாரு குருமா...

  இப்போ, அவங்க கூட்டணியில சீட்டு வாங்கிட்டு நிக்கறாரு...

  ReplyDelete
 3. வந்தேன் வாக்களித்து சென்றேன்


  கலைஞர் கருணாநிதி பற்றி சிறு குறிப்புகள்
  http://speedsays.blogspot.com/2011/04/blog-post_18.html

  ReplyDelete
 4. என் தங்கமே.....செய்து விடு இதை மோட்சம்(தியேட்டர் அல்லத) உண்டு உனக்கு!

  ReplyDelete
 5. எலக்சன் ரிசல்ட் மட்டும் வரட்டும் இன்னும் நிறைய காமெடி இருக்கு.... அவசரப்பட்டு கலைச்சுப்புடாதீங்க..........!

  ReplyDelete
 6. //சத்திய மூர்த்தி பவனை ஏதாவது கல்யாண மண்டபமாகவோ, திருமண மண்டபமாகவோ மாற்றினால் வாடகையாவது கிடைக்கும்.//
  அருமையான ஆலோசனை!
  (கல்யாணம் வேறு,திருமணம் வேறா?)

  ReplyDelete
 7. பல விஷயங்களை அலசி இருக்கிறீர்கள். காமெடிக்கு புகழ் பெற்ற காங்கிரஸில் இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ, பொறுத்திருந்து பார்ப்போம்.

  இன்னொரு முக்கியமான விஷயம் என்னென்ன இப்படி மாநில தலைவர் மேல இவ்வளவு காண்டா இருக்காங்க்ன்னா அப்ப அந்த தலைவர பற்றி தெரிஞ்சு அவர மாத்தலாமா அல்லது அவர கொஞ்சம் அடக்கி வாசிக்க வைக்கலாமா என்று சோனியாஜி யோசிக்கலாம்.

  ReplyDelete
 8. //கடந்த சிலநாட்களாக காங்கிரசில் அசிங்கங்களும்,அபத்தங்களும் அரங்கேறி வருகிறது//

  கடந்த "சில" நாட்களாக மட்டும்தானா??

  ReplyDelete
 9. இந்த காங்கிரஸ்காரங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்.

  ReplyDelete
 10. ஒரு பதிவு போடறதுக்கு நல்ல தலைப்பு கிடைச்சது.உங்களுக்குப் போனா போவட்டுமுன்னு சமர்ப்பணம்...

  காங்கிரஸ் ரெண்டான்னா சீமானுக்கு கொண்டாட்டம்:)

  ReplyDelete
 11. உண்மைதான்...

  தமிழகத்தில் காங்கிரஸ் காங்கிரஸாக இல்லை....

  ReplyDelete
 12. எனது முதலிரவு அனுபவங்கள்...

  http://kavithaiveedhi.blogspot.com/2011/04/blog-post_18.html

  ReplyDelete
 13. ??????? ????????? ?????????? ???? ???? ???????????

  ReplyDelete
 14. ஆணியே புடுங்க வேண்டாம்..இந்த கூட்டத்தை அப்படியே ஒரு ஃப்ளைட்ல அள்ளிட்டு போய் கடல்ல கொட்டிரணும்

  ReplyDelete
 15. //சத்திய மூர்த்தி பவனை ஏதாவது கல்யாண மண்டபமாகவோ, சினிமா தியேட்டராகவோ மாற்றினால் வாடகையாவது கிடைக்கும்.// அருமையான யோசனை கஸாலி!

  ReplyDelete
 16. ////சத்திய மூர்த்தி பவனை ஏதாவது கல்யாண மண்டபமாகவோ, சினிமா தியேட்டராகவோ மாற்றினால் வாடகையாவது கிடைக்கும்.////

  அந்த ராசி யாரையும் விடாது. கல்யாணம் எல்லாம் கலாட்டாவுலதான் முடியும். பொண்ணு வீட்டுக்காரனும் மாப்ள வீட்டுக்காரனும் அடிசிகிட்டு சாவு வானுங்க. சாப்பாட்டு பந்தியிலேயே ரகளை ஆயிடும். வேணாம் சாமீ. வேணும்னா அத நவீன மின்சார மயானமா மாதிப்புடலாம். யாராவது சோனியா காண்டிக்கு தந்தி அடிக்கலாம்.

  ReplyDelete
 17. தேர்தல் அறிக்கையே தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடுகிறார்கள் ...இவர்களுக்கு ஆட்சிக்கு வருவதற்கு உழைப்பதற்கு விருப்பமில்லை அதனாலேயே எவரையாவது பிடித்து கொண்டு பதவியில் ஒட்டிக் கொள்கிறார்கள் .இந்த முறை காங்கிரஸ்காரர்கள் சிலரும் மந்திரிகளுக்கு ஈடாக சொத்து சேர்த்திருக்கிறார்கள் .

  ReplyDelete
 18. காங்கிரசை கலைத்து விட்டால் நாட்டில் காமெடிக்கு பஞ்சம் வந்து விடுமே?
  அப்புறம் எப்படி கலாய்ப்பு பதிவுகள் எழுதுவது தங்கமே...

  ReplyDelete
 19. //எல்லாவற்றையையுமே சோனியாதான் சொல்லவேண்டுமென்றால் அப்புறம் மாநில தலைமை எதுக்கு?மாநில தலைவர் எதற்கு?//


  அது தானே...

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.