என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, April 28, 2011

24 அப்படின்னா நம்ம பிரதமர் மன்மோகன் சிங் ஒரு நக்சலைட்டா?எதுக்குப்பா சோகமா இருக்கே?

நான் பார்த்ததுக்கு இருந்த மளிகை கடை  வேலைய விட்டு தூக்கி விட்டுட்டாருப்பா என் முதலாளி

நீ நல்ல வேலைக்காரனாச்சே உன்னை எதுக்கு தூக்குனாறு?

அது ஒண்ணுமில்லை. இந்த மாசம் சம்பளம் கொஞ்சம் கூட்டிக்கேட்டேன் அதனால......

சம்பளம் அதிகமா  கேக்கும் அளவுக்கு என்னத்த சாதிச்சுட்டே நீ?

என்னப்பா இப்படி கேட்டுட்டே.... நாளு ஒண்ணுக்கு அம்பது கிலோ சீனி பொட்டலம் போட்டுருக்கேன்..மல்லி,மிளகாயின்னு வித்திருக்கேன். காலையில கரக்ட் டைமுக்கு கடைய திறந்துருக்கேன்...அப்புறம் கூட்டி பெருக்கியிருக்கேன்...

அடேங்கப்பா இவ்வளவு செஞ்சிருக்கியா? அதுசரி உன்னை மளிகை கடையில வேலைக்கு வச்சதே இந்த வேலையை செய்றதுக்குத்தானே?
அப்புறம் எதுக்கு உனக்கு சம்பளம் கொடுத்து வேலைக்கு வச்சுக்கிட்டாங்கன்னு நினைக்கிறே?

என்னப்பா நீயும் எங்க முதலாளி மாதிரியே கேக்கறே?

வேறெப்படி கேக்கமுடியும்?

இப்படி கேட்டுத்தான் என் முதலாளி எங்கிட்ட மாட்டிக்கிட்டாரு?

மாட்டிக்கிட்டாரா எப்படி?

நான் சம்பளம் அதிகமா  கேட்டதுக்கு அவரு இதுக்குத்தான் உனக்கு சம்பளம் கொடுத்து வேலைக்கு வச்சிருக்கேன்..இதெல்லாம் உன் வேலைன்னாரு..அதுக்கு நான், ரோடு போட்டோம்,மேம்பாலம்   கட்டினோம், பஸ் வசதி செஞ்சு தந்தோம், குடிநீர் வசதி செஞ்சுதந்தோம்னு நம்ம முதலமச்சர்லே இருந்து மந்திரி, எம்.எல்.ஏ., வரைக்கும் வரைக்கும் சாதனை செஞ்சோம் ன்னு வோட்டுக்கேட்டாங்களே.நாமளும் அவங்க பெரிய சாதனை செஞ்சதா பல்ல இளிச்சுக்கு இவங்களுக்கு வோட்டு போட்டோமே... அதுக்குத்தானே நம்ம வோட்டு போட்டு இவங்கள பதவியில உட்கார வச்சோம்...அப்புறம் எதுக்கு சாதனை, புடலங்காயின்னு சொல்லணும்...அவங்க அப்படி செஞ்சது சாதனைன்னா நான் பொட்டலம் போட்டதும், சீனி வித்ததும் சாதனை தானே....அப்படின்னா அவங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமானு கேட்டேன்...உடனே அதுக்கு என் முதலாளி நீ ரொம்ப புத்திசாலியா இருக்கே...உனக்கு இங்கே வேலை இல்லேன்னு சொல்லி அனுப்பிட்டாரு...

நியாயமாத்தான் கேட்டுருக்கே..பரவாயில்லை விடு...நீ என்ன கலக்டர் வேலையா பார்த்தே....கவலைப்பட...

என்ன இருந்தாலும்..இப்ப எனக்கு வேலை இல்லையேப்பா?

ஒரு ஜன்னல மூடினா ஒரு ஜன்னல திறப்பான்னு சொல்லுவாங்க....கவலைய விடுப்பா...இப்படி மூஞ்சிய உம்முன்னு வச்சிருக்கத யாராவது பார்த்தா 49 ஓ போட்டவன்னு தப்பா நினைக்கப்போறாங்க...


ஏப்பா 49-O  போட்டவன் மூஞ்சிய உம்முன்னு வச்சிருக்கணும்...

இந்த தேர்தல்ல மொத்தம் 24 ஆயிரத்து 591 பேர் 49-ஒ-க்குபோட்டிருக்காங்க... இந்த நிலையில் 49-ஒ-வுக்கு வாக்களித்தவர்களை கியூ பிரிவு போலீசார் தேடிப்பிடித்து விசாரிக்கிறார்களாம்.

எதுக்குப்பா?

இவர்களுக்கு நக்சலைட் அமைப்புகளுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் விசாரிப்பதா சொல்றாங்க? இதற்காக 49-ஒ வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். இது அடிப்படை உரிமைகளை மீறுவது போன்றதாகும். இந்த தனிப்பட்ட விவரங்களை கியூ பிரிவு போலீஸாருக்கு தேர்தல் அதிகாரிகளே கொடுக்கறாங்களாம்.

அப்படி கொடுக்கறதுக்கு சட்டத்துல இடம் இருக்கா?

சட்டத்துல இடம் இருக்கிறதா தெரியல...இவர்கள் தேர்தல் கமிஷனுக்குத்தான் இது போன்ற விவரங்களை தரணுமே  தவிர, வேறு யாருக்கும் கொடுப்பதுக்கு  விதிமுறையில் இடமில்லை. அதோடு  இந்த விவரங்களை தர்றதுக்கு  மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்குகூட  தேர்தல் கமிஷன் உத்தரவும் தரல.

அப்படி இருந்தும் வாங்குறாங்கன்னா இது ஆபத்தாச்சே?

ஆபத்துதான்...அடுத்த தேர்தல்ல 49 ஒ போடுறதுக்கு தைரியமா  யாரும் முன்வர மாட்டாங்க..அதுக்கு ஒரே வழி நாம முன்னாடியே பேசிகிட்டே மாதிரி வோட்டு போடற மிசின்ல 49-ஒ போடறதுக்குன்னு தனியா ஒரு பட்டன் வச்சாத்தான் உண்டு...நல்ல வேளையா,  கியூ பிராஞ்ச் போலீசார் துன்புறுத்தினால் இவர்கள் இனிமேல் 49 ஓ-வுக்கு வாக்களிக்க அச்சப்படுவார்கள். இது மறைமுகமாக 49-ஓ உரிமையை தடை செய்வது போன்றதாகும்.எனவே 49-ஓ-வுக்கு வாக்களித்த வாக்காளர்களின் விவரங்களை போலீசார் சேகரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் அவர்களை துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் அப்படின்னு ஒருத்தர் கோர்டுக்கு போயி ஸ்டே வாங்கிட்டாரு.

அதுசரி  49-ஒ போட்டவங்க இப்ப அவருக்குத்தான் பெரிய ஓ போடணும். ஆமா எனக்கொரு சந்தேகம் ...49-ஒ போட்டதுக்கும் நக்சலைட்களுக்கும் என்ன சம்பந்தம்?

ம.க.இ.க-ன்னு ஒரு அமைப்பு தேர்தல புறக்கணிங்கன்னு  ஏற்கனவே சொல்லி துண்டு பிரசுரமெல்லாம் விட்டாங்க....அவங்க சொல்லித்தான் இவங்க தேர்தல புறக்கணிச்சாங்களா அல்லது 49-ஒ போட்டாங்களான்னு   சந்தேகப்படுறாங்கலாம்.

அப்படின்னா நம்ம பிரதமர் மன்மோகன்சிங் கூட யாருக்கும் வோட்டு போடாம தேர்தல புறக்கணிச்சாரே...அவரு  யாரு  சொல்லி வோட்டு போடாம இருந்தாரு... அப்படின்னா அவரும் நக்சலைட்டா?

அதை கியூ பிராஞ்ச்தான் சொல்லணும்.
சரிப்பா நான் கிளம்பறேன். மறுபடியும் சந்திப்போம்

டிஸ்கி: இன்று வரவேண்டிய புலன் விசாரணை தொடர்கதை வரும் ஞாயிறு வரும். மன்னிக்கவும்
 

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


24 comments:

 1. அண்ணே அவரு ஓட்டு போடல அதவாது 49 O போடல ஹிஹி!

  ReplyDelete
 2. >>>
  டிஸ்கி: இன்று வரவேண்டிய புலன் விசாரணை தொடர்கதை வரும் ஞாயிறு வரும். மன்னிக்கவும்

  பதிவுல இருந்த காமெடிக்கு 80 மார்க். டிஸ்கி காமெடிக்கு 90 மார்க் ஹி ஹி

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. நல்ல வேளை காந்தி சுதந்திரம் கிடைச்ச உடனே போய் சேந்துட்டாரு இல்லைன்னா அவரைகூட நக்சல்ன்னு சொல்லி பிடிச்சி போட்டிருப்பாங்க ....

  ReplyDelete
 5. அண்ணே! எம் மாமே பன்னிக்குட்டிய ரொம்ப நாளா காணோம! எங்கயாச்சும் பார்த்தேளா? சிநேகிதனை..... சிநேகிதனை ரகசிய சிநேகிதனை.......

  ReplyDelete
 6. ம.க.இ.க வின் இரகசிய உறுப்பினர் மன்மோகன் சிங்க. சோனியா அதிர்ச்சி ...

  ReplyDelete
 7. நான் லேட்டுன்னு நினைக்கிறேன்...

  ReplyDelete
 8. வந்துட்டேன்.. அண்ணாச்சி இந்த உலகத்துல என்ன வெல்லாம் நடக்குதுப்பா ரொம்ப பயங்கரம்..


  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

  ReplyDelete
 9. இறுதியில் கேட்ட கேள்வி நெத்தி அடி ...

  ReplyDelete
 10. நானும் வந்துட்டேன் தலைவரே....பிரதமர் ஒட்டு போட சோனியாவிடம் அனுமதி கிடைக்கவில்லை என்பதே உண்மை...

  ReplyDelete
 11. ////// விக்கி உலகம் said...
  அண்ணே அவரு ஓட்டு போடல அதவாது 49 O போடல ஹிஹி!
  ////////

  ஹி...ஹி.....!

  ReplyDelete
 12. நான், ரோடு போட்டோம்,மேம்பாலம் கட்டினோம், பஸ் வசதி செஞ்சு தந்தோம், குடிநீர் வசதி செஞ்சுதந்தோம்னு நம்ம முதலமச்சர்லே இருந்து மந்திரி, எம்.எல்.ஏ., வரைக்கும் வரைக்கும் சாதனை செஞ்சோம் ன்னு வோட்டுக்கேட்டாங்களே.நாமளும் அவங்க பெரிய சாதனை செஞ்சதா பல்ல இளிச்சுக்கு இவங்களுக்கு வோட்டு போட்டோமே..//

  பதிவின் டாப்....டாபிக்,
  காமெடிக் கிக்..இங்கே தான் இருக்கிறது.
  ஹா...ஹா...

  ReplyDelete
 13. இவர்களுக்கு நக்சலைட் அமைப்புகளுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் விசாரிப்பதா சொல்றாங்க? //

  அவ்.............முடியல சகோ

  ReplyDelete
 14. வரப் போகும் தேர்தல் முடிவுகளையும் 49 ஓ இனையும் வைத்து, ஒரு டைம்மிங் காமெடி, அருமை சகோ.

  ReplyDelete
 15. நல்ல வேல நான் 49 ஓ போடல

  சந்தைக்கு புதுசு...


  http://speedsays.blogspot.com/2011/04/blog-post_28.html

  ReplyDelete
 16. நீ ரொம்ப புத்திசாலியா இருக்கே...உனக்கு இங்கே வேலை இல்லேன்னு சொல்லி அனுப்பிட்டாரு...

  ReplyDelete
 17. இனி 49ஓ ஓட்டு மேசினில் இருந்தால்தான் நல்லது. மன்மோஹன் சிங்கை நக்சல்னு சொல்லாதீங்க. தோழர்கள் கோவிச்சுக்கப்போறாங்க

  ReplyDelete
 18. ரொம்பவும் நக்கல்தான். 49 - O பயன்படுத்தியவர்கள் எல்லாம் நக்சலைட்டுகளா ? என்று கேட்பதே கேனத்தனமாக இல்லை?

  ReplyDelete
 19. ஆஹா..... நம்ம பன்னிகுட்டி வந்தாச்சி ! எல்லாரும் சேந்து ஒரு பெர்ரிய "ஒ " போடுங்க!

  ReplyDelete
 20. அதான் 49-O' போட்டவங்களுக்கு விசாரணை இல்லைன்னு சொல்லிட்டாங்களே!! திரும்ப அதுக்கு ஒரு பதிவா??

  ReplyDelete
 21. அது யாருங்க திருமதி பன்னிகுட்டி? பன்னிகுட்டியின் ரவுசையே தாங்க முடியல.. இப்ப இதுவேறையா!!

  ReplyDelete
 22. //இன்று வரவேண்டிய புலன் விசாரணை தொடர்கதை வரும் ஞாயிறு வரும்.// நன்றி!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.