என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, April 19, 2011

25 தேர்தலில் ஜெயலலிதா வென்றால் ...அல்லது தோற்றால்....


நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஒரு வேளை  அண்ணா.தி.மு.க.ஜெயித்தால்.....

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் கருணாநிதியின் பாசிச ஆட்சியை அகற்றி மீண்டும் அனைத்திந்திய அண்ணா.திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியமைக்க வாய்ப்பளித்துள்ளார்கள்.நான் பிரச்சாரத்திற்க்காக போகும் இடமெல்லாம் மக்கள் வெள்ளமென திரண்டு அன்பு சகோதரியான எனக்கு ஆதரவு தெரிவித்த போதே எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஸ்பெக்ட்ரம், மணல்கொள்ளை, கேபிள் டி.வி .ஆதிக்கம், அரிசி கடத்தல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று கருணாநிதியின் கொடுங்கோல்  ஆட்சியில் சிக்கித்தவித்த மக்களுக்கு ஒரு விடிவு என் மூலம் ஏற்பட்டிருக்கிறது...இவ்வளவு பெரிய வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.மிரட்டலுக்கு அஞ்சாமல் மிகவும் நியாயமாக தேர்தல் நடக்க அவர்கள்தான் காரணம். எங்களுக்கு வாக்களித்த  மக்களுக்கு நன்றி.....கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி....
அண்ணா நாமம் வாழ்க......புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க...


ஒருவேளை தோற்றால்.....

ஸ்பெக்ட்ரம் மூலம் கொள்ளையடித்த பணத்தை கொண்டு செயற்கையான  ஒரு வெற்றியை பணம் கொடுத்து வாங்கியுள்ளார்கள் கருணாநிதியும், அவர் கட்சியினரும். தமிழ்நாடு முழுவதும் ஒரு வோட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று பத்தாயிரம் கோடி ரூபாயை வாரி இறைத்திருக்கிறார்கள். எங்களுக்கு சாதகமாக நடப்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டு தி.மு.க-விற்கு சாதகமாக நடந்து கொண்ட தேர்தல் கமிசனுக்கு என் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே இருந்த ஒரு மாதத்தில், நிறைய இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டுள்ளது. ஒரு மாத இடைவெளி இருந்த போதே சுதாரித்து இருக்கணும்.தேர்தல் ஆணையத்தை நம்பி மோசம் போயிட்டோம் முக்கியமாக  தேர்தல் முடிந்து சில நாட்களில் மு.க அழகிரிஅமெரிக்காவிற்கு ரகசியமாக சென்று வாக்குப்பதிவு எந்திரத்தில் எங்களுக்கு விழுந்த ஓட்டுக்களை உதய சூரியன் சின்னத்தில் மாற்றும் வசதியுள்ள புதிய நவீன ரிமோட்டை அங்குள்ள வல்லுனர்கள் மூலம் தயாரித்து எடுத்து  வந்துள்ள தகவல் எனக்கு சுப்ரமணியம்சாமி மூலம் கிடைத்தது.அந்த நவீன ரிமோட் மூலம்  வீட்டிலிருந்த படியே எல்லா வாக்குகளையும் தி.மு.க சின்னத்தில் திருப்பி விட்டிருக்கிறார் அழகிரி .அதற்காக சுமார் ரெண்டாயிரம் கோடி ரூபாயை ஹவாலா மூலம் கை மாற்றியுள்ளார்.மேலும்,விஜயகாந்த் குடித்துவிட்டு செய்த பிரச்சாரமே எங்களுக்கு எதிராக மாறிவிட்டது.எதற்கும் கலங்காமல் களப்பணி ஆற்றுங்கள்...உள்ளாட்சி தேர்தலில் வெற்றி நமதே... தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் முடிவில் தர்மமே வெல்லும். ஜெயிற்றால் கோட்டை..தோற்றால் கொடநாடு என்னும் எனது கொள்கையின் படி இப்போது கொடநாடு செல்கிறேன்.
அண்ணா நாமம் வாழ்க......புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க...

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


25 comments:

 1. நம்ம அரசியல் தலைவர்கள் பற்றி நல்லா தெரிஞ்சி வச்சிரிக்கிங்க...

  இதெல்லாம் அரசியல்ல சகஜம்..

  ReplyDelete
 2. அம்மான்னா அம்மாதான் பாரு தோத்தாலும் பேசுவாங்க ஜெயிச்சாலும் பேசுவாங்க...........ஆனா கொடநாட மட்டும் விடமாட்டாங்க ஹிஹி!

  ReplyDelete
 3. இரண்டில் ஒன்றுதான் நடக்கும். இதைதவிர பெரிசாக வேறு என்ன இங்கு நடந்துவிடப்போகிறது? ஜெயித்தால் கோட்டை தோற்றால் கொட நாடு.


  //அண்ணா நாமம் வாழ்க......புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க...//

  சிரிப்பாய் வருகிறது.

  சீக்கிரம் "தி.மு.க. ஜெயித்தால் அல்லது தோற்றால் "போட்டுவிடுங்கள். இல்லை என்றால் சதீஷ் போட்டு தாக்கி விடுவார்! :))

  ReplyDelete
 4. ராவண ஆட்சி ஒழிந்து ஆவண ஆட்சி மலரப்போகுது

  ReplyDelete
 5. //ராவண ஆட்சி ஒழிந்து ஆவண ஆட்சி மலரப்போகுது//


  இரண்டினாலும் மக்களுக்கு நிம்மதியில்லாமல் இருக்க போகிறார்கள்...

  ReplyDelete
 6. "இந்த தேர்தலில் டி.ஆர். போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தால்".. அப்டின்னு ஒரு பதிவு போட தோணலையா? இந்த பாவம் உங்கள சும்மா விடாது.

  ReplyDelete
 7. பார்க்கலாம் உங்க ஆர்வம் புரியுது

  ReplyDelete
 8. கண்டிப்பாக ரெண்டில் ஒரு அறிக்கையை அம்மா வெளியிடத்தான் போகிறார். ஆனால் இந்த இரண்டில் ஒன்று எது என்பது தான் சஸ்பென்ஸ்.

  ReplyDelete
 9. ஜெயித்தால் கோட்டை தோற்றால் கொட நாடு --- அம்மா பற்றி கரெக்டா தெரிஞ்சு வச்சிருக்கன்கப்பா?

  ReplyDelete
 10. அம்மா இதுவும் சொல்லுவாங்க இதுக்கு மேலயும் சொல்லுவாங்க

  ReplyDelete
 11. ஸ்பெக்ட்ரம் மூலம் கொள்ளையடித்த பணத்தை கொண்டு செயற்கையான ஒரு வெற்றியை பணம் கொடுத்து வாங்கியுள்ளார்கள் கருணாநிதியும், அவர் கட்சியினரும். தமிழ்நாடு முழுவதும் ஒரு வோட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று பத்தாயிரம் கோடி ரூபாயை வாரி இறைத்திருக்கிறார்கள்//
  போன பணம் திரும்பி வராது சங்குதான்

  ReplyDelete
 12. //கேப்டன் விஜயகாந்த் - சிறு குறிப்புகள்

  http://speedsays.blogspot.com/2011/04/blog-post_19.html

  ReplyDelete
 13. ஜெயித்தால் கொடநாடு, தோற்றால் தமிழ்நாடு.. சே.. சே.. த்தூ த்தூ.. வேற ஒண்ணுமில்ல டங்கு சிலிப்பு....!

  ReplyDelete
 14. I also write this type of post . . Visit www.kingraja.co.nr

  ReplyDelete
 15. //////! சிவகுமார் ! said...
  "இந்த தேர்தலில் டி.ஆர். போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தால்".. அப்டின்னு ஒரு பதிவு போட தோணலையா? இந்த பாவம் உங்கள சும்மா விடாது.///////

  தமிழ்நாட்டு மானத்த நான் தான் காப்பதனும் போல.....!

  ReplyDelete
 16. இதை அம்மாவிற்கு பாக்ஸ் செய்யவும் அறிக்கை தயாரிக்கு நேரம் மிச்சமாகும் அப்படியே இருக்குப்பா

  ReplyDelete
 17. இதே மாதிரி “தல”க்கும் ஒரு / இரு அறிக்கை ரெடி பண்ணுங்க...

  ReplyDelete
 18. உண்மையை அப்படியே சொல்லி இருக்கீங்க நண்பரே... அய்யா என்ன சொல்வாருன்னு சொல்லவே இல்லையே?

  ReplyDelete
 19. ரசித்தேன் .......................

  ReplyDelete
 20. மு.க அழகிரிஅமெரிக்காவிற்கு ரகசியமாக ...... வசதியுள்ள புதிய நவீன ரிமோட்டை அங்குள்ள வல்லுனர்கள் மூலம் தயாரித்து எடுத்து வந்துள்ள தகவல் .......................... இது மிக மிக மிகை

  ReplyDelete
 21. சகோ என்னமா யோசிக்கிறீங்க.. தோற்றாலும், ஜெயித்தாலும் ஒரு காரணம் வைச்சிருக்காங்க. எல்லே...

  ஹி..ஹி...

  ReplyDelete
 22. அதே அதே...ஹிஹி நகைச்சுவை ஆனால் அதுதான் உண்மை பாஸ்!!

  ReplyDelete
 23. அம்மாக்கு அறிக்கை எழுத ஒரு ஆள் கிடைச்சிடுச்சு டோய்!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.