என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, April 12, 2011

18 மைக் பிடித்த எம்.எல்.ஏ- என்ன கொடுமை சார் இது?


ஒரு நன்றி.....

ஸ்...அப்பாடா.....ஒருவழியாக பிரச்சாரம் ஓய்ந்துவிட்டது. மக்களை பார்த்து நீங்கள்தான் எஜமானர்கள் நல்லதீர்ப்பு தாருங்கள் என்று பிரச்சார வேன்களிலும், பொது மேடைகளிலும், காலில் விழுந்தும், ஹெலிகாப்டரில் பறந்தும் வாக்கு வேட்டையாடியாடிய தலைவர்கள் இதோ ஓய்வு வேண்டி தத்தம் வீடுகளுக்கு திரும்பிவிட்டார்கள். ஆனால், முந்தைய தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இந்த தேர்தல் எவ்வளவோ தேவலை என்றுதான் சொல்லவேண்டும். சுவர் விளம்பரம், பிளக்ஸ் போர்டு, தோரணங்கள் என்று எல்லாமே மிக மிககம்மியாக இருந்தது.  அடிக்கும் வெயிலில் ஏற்கனவே காய்ந்து போயிருந்த நம்மை மூலைக்கு மூலை ஒலிபெருக்கியை கட்டி மேலும் காய வைத்திருப்பார்கள். அதற்காக தேர்தல் கமிசனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
=================================

ஒரு வருத்தம்

நேற்று இறுதி கட்ட பிரச்சாரத்தில் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சிவராஜ்(காங்கிரஸ்) அவர்களை ஆதரித்து நடிகர் வடிவேலுவின் பிரச்சாரத்தை ஏகப்பட்ட பில்டப்புடன் சிறிது நேரம் சன் நியூஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்தது. கடந்த பதினைந்து வருடங்களாக அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்  சிவராஜ் வடிவேலுவிற்காக மைக் பிடித்துக்கொண்டு நின்றது பரிதாபமாக இருந்தது. ஒரு மக்கள் பிரதிநிதி ஒரு காமடி நடிகனுக்கு மைக் பிடித்த கேவலத்தை எங்கே போய் சொல்றது? வருத்தமாக இருக்கிறது.

==================================

ஒரு ஜோக்

ராத்திரி கரண்ட் கட்டானதும் எல்லோரும் சந்தோசமா வெளியே வந்து எட்டி பார்க்கறாங்களே ஏன்?

எந்த வேட்பாளராவது  பணம் கொடுக்க வாராங்களான்னு தான் பார்க்கறாங்க....

========================================

ஒரு வேண்டுகோள்....

 தேர்தலன்று ஒரேயொரு நாள்  நம் கையில் வைக்கப்படும் அந்த கருப்பு மை....அடுத்த 5 வருடங்களில் வளர்ந்து நம் முகத்திற்கு கரியாக மாறிவிடுகிறது. அந்த கரியை அடுத்த தேர்தலில் வேட்பாளர் கொடுக்கும் பணத்தை வைத்து கழுவிக்கொண்டு, மீண்டும் கரி பூசிக்கொள்ள தயாராகிறோம்.

பார்த்து வாக்களியுங்கள் மக்களே.... 


படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


18 comments:

 1. சென்னை போய்ட்டா லும் உங்க கடமை உணர்ச்சி.. ஹி ஹி

  ReplyDelete
 2. அன்பின் கஸாலி

  அருமை அருமை - மைக் பிடித்த எம் எல் ஏ - அய்யோ அய்யோ - ம்ம்ம்ம் - வருத்தமும் ஜோக்கும் பிடிச்சிருக்கு - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  ReplyDelete
 3. நல்லதொரு பகிர்வு

  ReplyDelete
 4. அருமை

  கேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள் பாகம்-1

  http://speedsays.blogspot.com/2011/04/1.html

  ReplyDelete
 5. //ஒரு நன்றி.....
  ஒரு வருத்தம்
  ஒரு ஜோக்
  ஒரு வேண்டுகோள்.... //

  இனி இது உங்களுக்கு...
  ஒரு ஓட்டு....
  ஒரு கமெண்ட் போட்டாச்சு...
  ஹி..ஹி.. பதிவு கலக்கல்.

  ReplyDelete
 6. இன்னும் ஒரு நாள் தான் இருக்கு பார்க்கலாம் கணிப்புகள் எல்லாதிற்கும் என்ன விடை கிடைக்கிறது என்று ..........

  ReplyDelete
 7. நல்ல கருத்துக்கள்...போட்டமில்ல ஒட்டு...

  ReplyDelete
 8. ஆயிரம்....

  ரெண்டாயிரம்....

  நாலாயிரம்.....

  ReplyDelete
 9. பல நிற வண்ணங்கள் கண்ணை உறுத்துகின்றது நண்பரே....

  நல்ல பதிவு

  நல்ல பதிவை விரிவாக எழுதுங்கள்.

  ReplyDelete
 10. நாலு காசு சம்பாதிக்கனும்ன்னா மைக் பிடிக்கிறதுல தப்பேயில்ல:)

  ReplyDelete
 11. நன்றி நண்பரே...

  ReplyDelete
 12. பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html

  ReplyDelete
 13. வருத்தமாத்தான் இருக்கு......!

  ReplyDelete
 14. தமிழக தேர்தல் கடைசி நேர சர்வே முடிவு விவரம்
  தமிழக தேர்தல் கடைசி நேர சர்வே முடிவு விவரம்
  http://athiradenews.blogspot.com/2011/04/blog-post_13.html

  ReplyDelete
 15. //கடந்த பதினைந்து வருடங்களாக அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சிவராஜ் வடிவேலுவிற்காக மைக் பிடித்துக்கொண்டு நின்றது பரிதாபமாக இருந்தது.//ஏதோ.. ஒர்தருக்காவது உபயோகமா இருந்திருக்கிறாரே.. அத பாராட்டுவீங்களா.. அத விட்டுட்டு..

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.