என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, April 15, 2011

26 ஆளுங்கட்சிக்கு வாய்ப்பு....எதிர்கட்சிக்கு ஆப்பு

அடடே...வாப்பா...தேர்தல் முடிஞ்சிருச்சு....இனிமே எங்கே வரப்போறேன்னு நினைச்சேன்?
தேர்தல் முடிஞ்சா என்னப்பா? இன்னும் வாக்கு எண்ணிக்கை, ஆட்சியமைப்புன்னு எவ்வளவோ இருக்கே அதுவரை இது தொடரும்...

சரி யாரு ஆட்சியமைப்பாங்கன்னு நினைக்கிறே?....
எனக்கென்னவோ ஆளுங்கட்சிதான் மறுபடியும் வரும்ன்னு தோணுது.....

எப்படி சொல்றே?
எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த  தடவை 78 சதவீதம் வாக்குப்பதிவு நடந்திருக்கு.

அதனால?....
 ஆளுங்கட்சிக்கு வாய்ப்பு....எதிர்கட்சிக்கு ஆப்புன்னு நினைக்கிறேன்....

அதெப்படி சொல்லமுடியும்...தேர்தல் ஆணையம் தகுந்த பாதுகாப்பு கொடுத்ததால நிறைய பேரு பயமில்லாம வாக்களிக்க வந்திருக்கலாம்ல?...
 இருக்கலாம்....அதேநேரம் இந்த தேர்தல்ல ஆளுங்கட்சி நிறையா பணம் கொடுத்திருக்கு ....ஏறக்குறைய ஒருதொகுதில இருக்க மொத்த வாக்களர்களில் பாதி பேருக்கு பணம் கொடுத்துருக்காங்க....பணம் வாங்குன எல்லோரும் ஒட்டு போட வந்திருக்கலாம் இல்லியா....அப்படி பணம் வாங்குன எல்லோரும் பயந்து போயி ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டிருந்தாலே ஆளுங்கட்சி ஜெயிச்சிரும் இல்லியா?அதோடு அரிசி,பருப்பு,உளுந்து, இலவச டி.வி., ஆம்புலன்ஸ் என்று பயனடைந்தவங்க எல்லோரும் வாக்களித்தாலே போதுமே ஆளுங்கட்சி  ஜெயிக்க...

அப்படின்னாஇலவசங்களும்,பணமும்தான் முடிவு பண்ணுது அடுத்த ஆட்சிய.. ஜனநாயகத்துக்கு வேலை இல்லைன்னு சொல்லு....
மக்கள் பணம் வாங்குறத நிறுத்தறவரை ஜனநாயகத்தை பணநாயகம் வீழ்த்திட்டே இருக்கும்.இதுதான் நிதர்சனம்.

இந்த தேர்தல்ல நிறைய இடங்கள்ள 49 ஒ பதிவாயிருக்குன்னு சொல்றாங்களேப்பா....
ஆமாம்...நீலகிரி மாவட்டத்துல கூடலூர் தொகுதிக்கு உட்பட்ட மசினகுடியிலதான் இந்த தடவை 49 ஒ அதிகமா பதிவாகிருக்காம்...

அவங்களுக்கு நிறைய மிரட்டல் வந்திருக்குமே....
வரத்தான் செய்யும்....என் நண்பன் ஒருவன் எங்க ஊர்ல 49 ஒ போடணும்ன்னு சொல்லும்போது அங்கே பூத்ல இருந்த ஏஜெண்டுகள் எல்லோரும் வேணாம்பா...49 ஒ போடாதேப்பான்னு சொன்னாங்களாம்...ஆனா இவன் போட்டுட்டுத்தான் வந்தான்...

நிறைய பேருக்கு 49 ஒ போட  ஆசைதான் என்றாலும் நமக்கு ஏன் பிரச்சினைன்னு போடாம விட்டுருக்கலாம்தானே...
நிஜம்தான்....அதுக்கு காரணம் 49 ஒ-வை வெளிப்படையா வச்சதுதான்...இனி வரும் தேர்தல்ல வோட்டு போடற மிசின்லையே வேட்பாளர்கள், சின்னங்களுக்கு கீழே 49 -வுக்கும் ஒரு பட்டன் வச்சிட்டா யாரும் பார்க்காத அளவுக்கு 49  போடலாம். இன்னும் நிறைய பேரு தைரியமா வாக்களிப்பாங்க

என்னத்த....இப்பெல்லாம் யாருக்கு ஓட்டு போடறாங்கன்னே  வீடியோ எடுத்துடறாங்கலாம்ல....
நீ ரஜினி ஓட்டுப்போட்டத பத்தி சொல்றேன்னு நினைக்கிறேன்....பொதுவா ஒரு வி ஐ.பி வோட்டு போடவந்தா வீடியோ எடுக்கறது பத்திரிகை காரங்க வழக்கம்....ஆனா,யாருக்கு ஓட்டு போடுறாங்கன்னு தெரியாத அளவுக்கு ஒரு குறிப்பிட்ட தூரத்துலேயே அவங்கள நிறுத்திடுவாங்க...ஆனா இந்தமுறை ரஜினி ஓட்டுப்போடும்போது பக்கத்துல போயி வீடியோ எடுத்திட்டாங்களாம்.அதுல ரஜினி யாருக்கு வோட்டு போட்டாருன்னும் பதிவாகிடுச்சாம்...

இது தப்பாச்சே இதை எப்படி பூத்ல இருந்த ஆபிசருங்க அலோ பண்ணாங்க?....
அதான் தெரியல.....வேறு ஏதும் பிரச்சினை வருமான்னு இனிமே தான் பார்க்கணும்?....

நடிகை திரிஷாவுக்கு கூட ஏதோ பிரச்சினையாமே?....
அது ஒண்ணுமில்லைப்பா...ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு வாக்குசவடியில நடிகை திரிஷா,அவங்க அம்மா, பாட்டின்னு மூணுபேரும் வோட்டு போட போயிருக்காங்க....ஆனால் வரிசையில நிக்காம நேரா பூத்துக்குள்ள போயிட்டாங்களாம்..

அதெப்படி எல்லோரும் வரிசையில நிக்கும்போது இவங்களுக்கு மட்டும் என்னவாம்...நடிகையின்னா  நேரா போயிட இது என்ன ஷூட்டிங்க ஸ்பாட்டா?
அதைத்தான்பா ஒரு வாக்காளர் கேட்டிருக்காரு...ரெண்டு பேருக்கும் கடுமையான வாக்குவாதம் வந்திருச்சாம்.அவங்களுக்குள்ள ஆங்கில புலமையை திட்டுறதுல காட்டிருக்காங்க...அப்புறம் ஆபிசருங்க ஓடிவந்து சமாதான படுத்தி இருக்காங்க...திரிஷா பாட்டிக்கு வயசாகிட்டதால அவங்க வரிசையில ரொம்பநேரம் நிக்கமுடியாதுன்னு அவங்க மட்டும் நேரா போயி ஒட்டுப்போட்டுட்டு கிளம்பிட்டாங்களாம்...திரிஷாவும், அவங்க அம்மாவும் இருபது நிமிடம் வரிசையில நின்னுதான் ஓட்டு போட்டிருக்காங்க...

வோட்டுபோடறதுல பொதுமக்களுக்கு  இருக்கற அக்கறை கூட நம்ம பிரதமருக்கு இல்லையாமே...
வருத்தமாத்தான் இருக்கு என்ன பண்றது? அசாம் மாநிலத்துல திஸ்பூர் என்கிற சட்டமன்ற தொகுதியில தான் நம்ம பிரதமருக்கும் அவங்க மனைவிக்கும் வோட்டு இருக்காம்.கடந்த 11-ஆம் தேதி அங்கே நடந்த தேர்தல்ல இவங்க ரெண்டு பேருமே வாக்களிக்களியாம்.
ஒரு ஓட்டோட மதிப்பு அவருக்கு எங்கே தெரியப்போகுது...அவருதான் நோகாம நொங்கு திங்கறவராச்சே...

அதென்னப்பா நோகாம நொங்கு  திங்கறது?
வேறென்ன அவரு எங்கே தேர்தல்ல போட்டியிட்டாரு...ஒவ்வொரு தடவையும் ராஜ்யசபா எம்.பி.யாத்தானே இருக்காரு...மக்கள்ட்ட வோட்டு வாங்கியா ஜெயிக்கறாரு....அதான் அவருக்கு ஒரு வோட்டோட மதிப்பு தெரியல...

சரிவிடு....நம்ம நாட்டோட நிலைமை அப்படி....ஜெயலலிதா என்னவோ சொல்லிருக்காங்க போல...
ம்....தேர்தல் கமிஷனின் சிறப்பான நடவடிக்கைகளால், தமிழக சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒரு சில சம்பவங்களை தவிர அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. தேர்தல் கமிஷனுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க., ஆட்சியின் மீது பொதுமக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். ஓட்டுகளின் மூலம் அமைதி புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர் என்று சொல்லிருக்காங்க....
பார்க்கலாம்....ஒருவேளை தோற்றாலும் இதைதான் சொல்றங்களா? அல்லது தேர்தல் கமிசன் மேல குற்றசாட்டு வைக்கிறாங்களான்னு....

அப்புறம் காங்கிரசிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜனை தங்கபாலு நீக்கிட்டாராமே?
அதைவிடுப்பா...அவங்க கதை எப்போதுமே காமெடிதான்.தேர்தல் முடிஞ்சாலும் காமெடி தொடருது....சரிப்பா நான் கிளம்பறேன்..இன்னொரு நாளைக்கு பார்ப்போம்.


படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


26 comments:

 1. அருமை,எனோட்டு உங்களுக்கே

  ReplyDelete
 2. பணம் வாங்கிட்டு ஓட்டு போட்ட எவனும் அது சரியில்லை இது சரியில்லைன்னு அடுத்த அஞ்சு வருசத்தில எப்பவாச்சும் வாய் திறந்தான்னா பல்லை உடைக்கணும்.

  ReplyDelete
 3. எங்க நம்ம பக்கம் ஆள காணோம்

  ReplyDelete
 4. அதிர்ச்சித் தகவல்: கேரளாவுக்கு ஐ.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம்!

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_15.html

  ReplyDelete
 5. மம்மி தோத்துட்டா, பெட்டியை மாத்திட்டாங்க-ன்னு சொல்வாங்க!

  ReplyDelete
 6. முழு அரசியலும் இங்கே பிரிதிபலிக்கிறது...

  ReplyDelete
 7. பிரதமர் போன்ற பெருந்தலைவர்கள் ஓட்டு அளித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்...
  பிரதமர் ஓட்டு போடாதது வேதனைதான்...


  காங்கிரஸில் காமெடிகள் தொடர்கிறது..

  தொகுப்பு அருமை...

  ReplyDelete
 8. அய்யோ அய்யோ மாப்ள இங்கயும் கொசுத்தொல்ல வந்திருச்சே யப்பா!

  ReplyDelete
 9. நிச்சயம் திமுக வெற்றி பெரும்.. யாரும் கவனிக்காத ஒரு விஷயம் இருக்கிறது இந்த தேர்தலில்..

  உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் 1996 முதல் 2001 வரை கலைஞர் ஆட்சி மிக நன்றாக இருந்தது.. ஊழல் என்று எதுவும் இல்லை.. உள்கட்டமைப்பு அருமையாக இருந்தது.. பாலங்கள், கிராமத்தில் சிமென்ட் சாலை, தொழில் சாலைகள், சிங்கார சென்னை .. நல்லதொரு நிர்வாகம் என்று நல்ல ஆட்சியை கொடுத்தார். அந்த ஆட்சியில் தான் சென்னையில் டைடெல் பார்க் வந்தது.. OMR சாலை முழுவது கணினி அலுவலகங்கள்.. வேலை வாய்ப்பு என்று பல நல்ல விஷயங்கள் நடந்தது..

  அந்த தைரியத்தில் தான் 2001 தேர்தலில் கூட்டணி அமைப்பதில் கோட்டை விட்டார்.. அம்மா பெரிய கூட்டணி அமைத்தார்.. வைகோவை அம்மா பக்கமே தள்ளி விட்டார்.. நல்ல நிர்வாகம் செய்ததும்.. பொற்கால ஆட்சி என்ற விளம்பரமும் தன்னை சுலபமாக வெற்றி பெற வைக்கும் என்று சற்று ஓவர் கான்பிடென்ட்ல் இருந்தார்.. முடிவுகள் பார்த்ததும் திமுக அதிர்ச்சியடைந்தது.. அப்போதுதான் இரண்டு விஷயங்கள் புரிந்தது..

  1. கூட்டணி பலம் கொஞ்சம் இருக்க வேண்டும்..
  2. என்னதான் நல்ல நிர்வாகம் கொடுத்தாலும் - உள்கட்டமைப்பு, சாலைகள், வேலை வாய்ப்பு, பாலம் எல்லாம் செய்தாலும் (மீன் பிடிக்க கற்று கொடுத்தல்) , மக்களை நேரடியாக சென்றடைவது போல எதாவது செய்தால் மட்டுமே (மீனையே நேரடியாக சமைத்து கொடுத்தல்) வேலைக்காகது - (இது தான் mgr formula ... இலவச வேட்டி சேலை.. இலவச சத்துணவு.. இலவச தையல் எந்திரம்..) நேரடியாக எனக்கு கிடைத்தது என்ன என்பது தான் வாக்களிக்கும் மக்களின் கேள்வி.. சிமெண்ட் ரோடு போட்ட , என் வயிறுக்கு சோறு போட்டியா ??? பாலம் சரி , எனக்கு நேரடியா என்ன பண்ண என்ற மக்களின் மனநிலை..

  ReplyDelete
 10. 2001 தோல்விக்கு பின் கலைஞருக்கு பிடிபட்ட இந்த இரண்டு விஷயங்கள் தான் 2006 ல் அவர் அமைத்த கூட்டணி , மற்றும் கதாநாயகனான தேர்தல் அறிக்கை.. அது நன்றாக வேலை செய்தது..

  இரு வேடம் அணிய ஆரம்பித்தார் - நிர்வாகத்தில் கருணாநிதி, மக்களை நேரடியாக குளிரவைப்பதில் எம் ஜி ஆர் .. அது 2006 - 2011 ஆட்சியில் நன்றாக தெரிந்தது

  2011 தேர்தலில் கூட்டணியும் விட்டுவிடவில்லை.. எதிரணிக்கு சமமான கூட்டணி அமைத்தார் ... அதே போல தான் கொடுத்த இலவசங்களை , மானியங்களை வெகு சிரத்தையாக பெரும்பான்மை மக்களிடம் கொண்டு சேர்த்தார்..

  இதுவே இன்று அவரை வெற்றி பெற வைக்க போகிறது.. !
  இந்த விஷயம் பிடிபட அவருக்கு 22 வருடங்கள் ஆகியுள்ளது..
  2006 ல் வைகோ ஒரு எக்ஸ்ட்ரா கோச் என்று நினைத்து அவர் சென்ற பொது இவர் அலட்டிக்கொள்ளவில்லை . ௨௦௧௧ல் வைகோ ஒரு தேவை இல்லாத சுமை என்று அம்மா திட்டமிட்டு வெளியேற்றினார் .. இரண்டுமே ஓவர் கன்பிடேன்ட்ல் வந்த வினை.. கலைஞ்சர் சென்ற முறை 2001 ல அதன் நஷ்டத்தை அறுவடை செய்தார்.. அம்மா 2011 ல் செய்வார்.

  ReplyDelete
 11. ஆளுங்கட்சிக்கு ஆப்பு.. எதிர்க்கட்சிக்கு cm job

  ReplyDelete
 12. டைட்டிலுக்காகவே இந்தப்பதிவு 1200 ஹிட்ஸ் சர்வசாதாரணமா எட்டிடும்னு நினைக்கிறேன்

  ReplyDelete
 13. காங்கிரசை கருவறுப்போம் போராட்டத்தில் தங்கபாலுவும் இணைந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்

  ReplyDelete
 14. "காங்கிரசை கருவறுப்போம் போராட்டத்தில் தங்கபாலுவும் இணைந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்"


  :-)))))))))))))))))))))))

  ReplyDelete
 15. தி.மு.க கூட்டணி கட்சிதான் வெற்றி பெறும்.

  ReplyDelete
 16. ரஜினி தன் ஓட்டை வரிசையில் நின்னுதான் போட்டாரா?நடிகை விஷயத்தில் கேள்விகேட்ட வாக்காளர் போல் ரஜினி விஷயத்தில் யாரும் கேள்விகேக்க தையிரியம் இல்லையா? நடிகைகள்னா மட்டும்தான் இவங்களுக்கு ரோஷம் பொத்துகிட்டு வருமாக்கும்.

  ReplyDelete
 17. மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் வந்து வாக்களித்து இருப்பது ஆளும் கட்சிமீது இருக்கும் கோபத்தால் என்றுதான் நான் நினைக்கின்றேன் கீழை. அ.கதிர்வேல் சிங்கப்பூர்

  ReplyDelete
 18. //jeyippom said... 17

  மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் வந்து வாக்களித்து இருப்பது ஆளும் கட்சிமீது இருக்கும் கோபத்தால் என்றுதான் நான் நினைக்கின்றேன் கீழை. அ.கதிர்வேல் சிங்கப்பூர்//

  உண்மையில் நீங்கள் சொல்வது போல் கோபம் இருந்திருந்தால் வாக்காளர் கூட்டம் வீட்டிலேயே முடங்க்யிருக்கும் நண்பரே!! இது பணம் வாங்கிவிட்டோமே என்பதற்காக வந்த கூட்டமே ( இம்முறை பெண்கள் அதிகம் வாக்களிதிருக்கிரார்கள் என்பதை கவனத்தில் கொள்க! )

  ReplyDelete
 19. நானும் அப்படித்தான் நினைக்கிறேன் பார்ப்போம்

  ReplyDelete
 20. போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html

  ReplyDelete
 21. என்னதான் நடக்கும்,நடக்கட்டுமே!
  இருட்டினில் மீதி மறையட்டுமே!

  ReplyDelete
 22. கலந்துரையாடல் பாணியில் தேர்தல் அலசல் அபாரம் ! பெயர்தான் `அரசர் குளத்தான்' , விஷயங்களைத் தருவதிலோ `தகவல் கடலான்' . இது எப்படி இருக்கு ?

  ReplyDelete
 23. அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

  ReplyDelete
 24. //அப்புறம் காங்கிரசிலிருந்து எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜனை தங்கபாலு நீக்கிட்டாராமே?//தங்கபாலு ஒரு தடவ முடிவு செஞ்சிட்டா அவர் பேச்சை யாருமே கேக்க மாட்டாங்க..

  ReplyDelete
 25. மனமார்ந்த பாராட்ட்குகள்....

  ReplyDelete
 26. ஆளுங்கட்சிக்கே வெற்றி வாய்ப்பா....நம்பவே முடியவில்லை. முடிவுகளுக்காக இன்னும் சில வாரங்கள் பொறுத்திருக்க வேண்டிய நிலமை.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.