என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, April 23, 2011

25 கேபிள் சங்கரை மேற்கோள் காட்டி பதிவர்களை பெருமைபடுத்திய அரசு

 
இந்த வாரம் வெளிவந்த குமுதம் அரசு பதில்களில் இடையார்பாளையம்  வி.பி.ஆலாலசுந்தரம் என்னும்  வாசகர் கேட்ட 'நண்பனுக்கும்,நெருங்கிய நண்பனுக்கும் என்ன வித்யாசம்?' என்ற கேள்விக்கு
அரசு கூறிய பதில்:
 
நாம் உடம்பு சரியில்லாமல் ஹாஸ்பிட்டல்ல இருந்தால் நண்பன் என்றால், 'உடம்பு எப்படி இருக்கு?' என்று கேட்பான். நெருங்கிய நண்பன் என்றால்...'டே  நர்ஸ் எப்படி இருக்கா?'என்று கேட்பான்.கேபிள்சங்கரின் கொத்துபரோட்டாவில் படித்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 60 வருடங்களை கடந்தும் இன்றும் இளமையாக தமிழில் நம்பர்-1 வார இதழாக வெளிவந்து கொண்டிருக்கும், வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் ஒரு நாளை தன் வசப்படுத்தியிருக்கும் இதழான குமுதம், ஒரு வாசகரின் கேள்விக்கு பொருத்தமாக  கேபிளின் பதிவிலிருந்து ஒன்றை மேற்கோள் காட்டியிருப்பது பதிவர்களாகிய நமக்கெல்லாம் பெருமைதானே.... 

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


25 comments:

 1. அன்பிம் கஸாலி

  பதிவர் கேபிள் சங்கருக்குப் பாராட்டுகளும் நல்வாழ்த்துக்ளும். தகவல் பகிர்வினிற்கு நன்றி - நட்புடன் சீனா

  ReplyDelete
 2. அன்பிம் கஸாலி

  பதிவர் கேபிள் சங்கருக்குப் பாராட்டுகளும் நல்வாழ்த்துக்ளும். தகவல் பகிர்வினிற்கு நன்றி - நட்புடன் சீனா

  ReplyDelete
 3. பதிவு ரெண்டு தடவை போட்ட மாதிரி இருக்கு..என்னன்னு பாருங்க!

  ReplyDelete
 4. நண்பேண்டா... அவன் தான் நண்பேன்டா... நன்றி சகோ மற்றும் கேபிள் ஜீ....

  ReplyDelete
 5. மேலே அடக்கமா கைகட்டி நிக்குறாரே அவர்தான் கேபிளா?...

  //பதிவு ரெண்டு தடவை போட்ட மாதிரி இருக்கு..என்னன்னு பாருங்க!//

  ரிபீட்டு...

  ReplyDelete
 6. கேபிள் சங்கர் எனும் புது பதிவரை அறிமுகம் செய்ததற்கு நன்றி காசாளி.

  கே.ஆர்.பி. செந்தில் எனும் இன்னொரு புதிய பதிவர் உங்க பதிவு ரிப்பீட் ஆகுதுன்னு சொல்றார். என்னன்னு பாருங்க.

  ReplyDelete
 7. பதிவு ரிபீட் ஆகுதுங்க.. அதை பாருங்க

  ReplyDelete
 8. சரி அவரு ஏன் கை கட்டி நிக்கிறார் . கஞ்சா வித்து மாட்டிகிட்டாரா?

  ReplyDelete
 9. பரவட்டும் பதிவர்கள் புகழ் பாரெங்கும்!

  ReplyDelete
 10. ம்ம்ம்...ரைட்டு...நல்லதே நடக்கட்டும்

  ReplyDelete
 11. வலை உலகிற்குப் பெருமை.பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 12. சகோ, கஸாலி எப்போதுமே பரபரப்பூட்டும், டபுள் மீனிங் தலைப்பு வைப்பதில் வல்லவர் என்பதற்கு இப் பதிவும் ஓர் சான்று.

  பெருமைப்படுத்திய அரசு: அரசாங்கம்
  பெருமைப்படுத்திய அரசு: குமுதம் அரசு..

  ஹி...ஹி...

  ReplyDelete
 13. தகவலுக்கு நன்றிகள் சகோ, வாழ்த்துக்கள் சகோ கேபிள் சங்கர் அவர்களுக்கு.

  ReplyDelete
 14. // பரவட்டும் பதிவர்கள் புகழ் பாரெங்கும் //

  அதெல்லாம் எல்லா பாருலயும் பரவிட்டு தானுங்க இருக்கு...
  WebRep
  Overall rating

  ReplyDelete
 15. கேபிள் சாருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. நிச்சயம் பதிவுலகம் ஒரு பெரும் சக்தியே .. சகோ. ஏன் உங்கள் பதிவு இரண்டு முறை தெரிகின்றது. தயவு செய்து சரி செய்யவும்..... கண்களை உருட்டுகின்றது.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.