என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, February 08, 2011

29 ஐயோ...நமக்கு எதுக்குங்க சிலை?

எங்கெங்கு காணினும் சிலைகளடா என்று சொல்லுமளவிற்கு அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது சிலைகள்.

இன்றைய இந்தியாவில் கோவில், பள்ளிக்கூடம், டாஸ்மாக் இல்லாத ஊர்கள் கூட உண்டு.
ஆனால், சிலைகள் இல்லாத இடங்களே இல்லை.

அந்தகாலத்து மன்னர்களில் ஆரம்பித்து சுதந்திர போராட்ட வீரர்கள், தேசத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், ஜாதிக்கட்சி தலைவர்கள், மற்றும் சினிமா நடிகர்களுக்கு கூட சிலைகள் உண்டு.
நெஞ்சில் நிறுத்தவேண்டிய தலைவர்களை சிலைகளாக்கி நடுவீதியில் நிறுத்தி காக்கா
, குருவிகளுக்கு கக்கூசாக்கி இருக்கிறார்கள்.
இவர்களின் பிறந்தநாளுக்கு,இறந்தநாளுக்கு, இன்னபிற விசேஷ நாட்களில் ஒரு மாலை போடுவதுடன் சரி.அதன் பிறகு அந்த சிலைகளை கண்டுகொள்வதே இல்லை.

வேறு எதற்கு இந்த சிலைகளை இங்கு பயன் படுத்துகிறார்கள் என்று பார்த்தோமேயானால்....
ஒரு கட்சியினர்மீது இன்னொரு கட்சியினர் காழ்ப்புணர்ச்சியை காட்டுவதற்கும், ஒரு ஜாதியினர் இன்னொரு ஜாதியினர் மீது காட்டும் துவேஷங்களுக்காகவும் இன்று சிலைகள் பயன்படுத்தப்படுகிறது. இன்று தென் மாவட்டங்களில் நடக்கும் ஜாதிசண்டைகளுக்கு இந்த சிலைகள் பெரும் பங்களிப்பு ஆற்றுகிறது என்பது மறைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை. இந்த ஜாதித்தலைவரின் சிலைக்கு செருப்புமாலை போட்டிருக்கிறார்கள், அந்தகட்சித்தலைவரின் சிலையை சேதப்படுத்தி இருக்கிறார்கள் என்று சொல்லாமல் பொழுது விடிவதேயில்லை. இதனால், பரஸ்பரம் ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டு சாவதும்,வீடு,கடை, பொது சொத்துக்களை நாசப்படுத்துவதும் நடக்கிறது.

ஏறக்குறைய பெருவாரியான நாடுகளில் சிலைகள் உண்டு. அங்கெல்லாம் ஒரு அடையாளமாகத்தான் சிலைகளை பயன்படுத்துகிறார்கள். இப்படியல்ல....


நான் சொல்வதெல்லாம்.....
இப்படி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இந்த சிலைகள் தேவையா?
ஆம்..தேவைதான் என்றால் இந்த சிலைகளுக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அப்போதுதான் நாடு அமைதியாக இருக்கும்.

அதற்கு என்ன செய்யவேண்டும்?....
சிலைகளுக்கு இரு காவல்காரர்களை நியமித்தால் காவல்காரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு அடுத்த நாட்டிடம் காவல்காரர்களை கடன் வாங்க வேண்டியிருக்கும்.
அந்தந்த ஊரிலிருக்கும் எல்லா சிலைகளையும் ஒரே இடத்தில் வைத்து, சுற்றிலும் சுவர் எழுப்பி அங்கு இரு போலீஸ்காரர்களை காவலுக்கு நியமிக்கலாம்.
அல்லது அனைத்து சிலைகளையும் கன்னியாகுமரியில் இருக்கும் திருவள்ளுவர் சிலை போல உயரமாக யார் கைக்கும் எட்டாதபடி வைக்கலாம்.
அல்லது, சிலைகளை கண்காணிக்க அந்த சிலைகளுக்கு எதிரில் ஒரு வீடியோ கேமரா வைத்துவிடலாம்.
இப்படி செய்வதன் மூலம் சிலைகளை சேதப்படுத்த முடியாமல் காக்கலாம். மனித உயிர்களையும், பொது சொத்துக்களையும் காக்கலாம்.
நான் சொல்வது அபத்தமாக இருந்தாலும்கூட நாடு அமைதியாக இருக்கவேண்டுமே...வேறு என்ன செய்வது?

டிஸ்கி: இது ஒரு மீள்பதிவு


Post Comment

இதையும் படிக்கலாமே:


29 comments:

 1. // டிஸ்கி: இது ஒரு மீள்பதிவு //

  தொடர்ந்து மீள் பதிவா வருதே... நேரமில்லையா சரக்கு இல்லையா...

  ReplyDelete
 2. Philosophy Prabhakaran said...
  தொடர்ந்து மீள் பதிவா வருதே... நேரமில்லையா சரக்கு இல்லையா...அப்படியெல்லாம் இல்லை நண்பா....இரு நாட்களாக என் கம்ப்யூட்டரில் கொஞ்சம் தட்டச்சு பிரச்சினை இருக்கிறது. அதான்

  ReplyDelete
 3. என்னங்க சிலைய பத்தி இப்படி சொல்லிபுட்டீங்க. இத வச்சி தான் நாங்க அரசியலே பண்ணிட்டு இருக்கோம் - இப்படிக்கு அரசியல் வியாதிகளில் ஒருவர்!

  ReplyDelete
 4. மீள் பதிவு அதிகம் போடுவதற்கு, உங்களுக்கு ஒரு சிலை வைக்கப் போறாங்களாம்! :-))))

  ReplyDelete
 5. salaams 2 u sako.
  //அதற்கு என்ன செய்யவேண்டும்?....//--தூத்துக்குடி குருஸ் ஃபர்னாந்து சிலையை பார்த்தது இல்லையா? அங்கே இருக்கிறது இதற்கெல்லாம் விடை.

  ReplyDelete
 6. மீள் பதிவு அதிகம் போடுவதற்கு, உங்களுக்கு ஒரு சிலை வைக்கப் போறாங்களாம்! :-))))

  ReplyDelete
 7. //தொடர்ந்து மீள் பதிவா வருதே... நேரமில்லையா சரக்கு இல்லையா.//

  சரக்குன்னா என்னா பாஸ்??ஹிஹி

  ReplyDelete
 8. உங்கள் ஆதங்கம் புரிகிறது. என்னால் முடிந்ததை செய்கிறேன் (எனக்கு சிலை வைக்காமல் பார்த்துகொள்கிறேன் )

  ReplyDelete
 9. மீள்பதிவுன்னாலும் நல்லா தான் இருக்கு... எந்த காலத்துக்கும் பொருந்தும் வகையில்...

  //இன்றைய இந்தியாவில் கோவில், பள்ளிக்கூடம், டாஸ்மாக் இல்லாத ஊர்கள் கூட உண்டு.
  ஆனால், சிலைகள் இல்லாத இடங்களே இல்லை. //

  இதை முழுமையாக ஒப்புக்கொள்ள முடியவில்லை... ஏனெனில், கோவில், பள்ளிகள் இல்லாத ஊரில் கூட டாஸ்மாக் விற்பனை படு ஜோர் என்ற வகையில் “தல”யின் செயல்பாடு தள்ளாடுகிறது....

  ReplyDelete
 10. //Chitra said... 5
  மீள் பதிவு அதிகம் போடுவதற்கு, உங்களுக்கு ஒரு சிலை வைக்கப் போறாங்களாம்! :-)))//

  *******

  ஹா...ஹா...ஹா...

  சித்ரா....மிகவும் ரசித்தேன்...

  ReplyDelete
 11. சிலை வைக்கும் செலவைவிட அதை சேதப்படாமல் பாதுகாக்கும் செலவு அதிகம்...

  ReplyDelete
 12. எனக்கு ஒரு சந்தேகம். சிலையை சேதப்படுத்தும் முன் காமிராவை சேதபடுத்தி விட்டால் என்ன செய்வது?

  இப்படிக்கு
  இலவசமாக ஐடியா கொடுப்போர் சங்கம்

  ReplyDelete
 13. //மாணவன் said... 8
  //தொடர்ந்து மீள் பதிவா வருதே... நேரமில்லையா சரக்கு இல்லையா.//

  சரக்குன்னா என்னா பாஸ்??ஹிஹி

  ஓன்னுந்தெரியாத பாப்பா பத்துமணிக்கு போட்டாளாம் இழுத்து தாப்பா

  ReplyDelete
 14. அங்கே விலை.. இங்கே சிலையா? ஆஹா

  ReplyDelete
 15. மீள் பதிவுங்கறது கொழுந்தியா மாதிரி.. அதை மனைவி ஊருக்கு போயிருக்கறப்ப ஒரு அவசரத்துக்கு ஜாலியா பாத்துக்குலாம். அதையே ரெகுலர் பண்ணக்கூடாது.. ஹி ஹி ஹி ( சும்மா ஜாலிக்கு.. நான் கூட சில சமயம் டைப் பண்ண போர் அடிச்சா மீள் பதிவு போடுவேன்)

  ReplyDelete
 16. வலைஞன்க்கு ஒரு லிங்க் குடுங்க.. அப்பத்தான் இங்கே வர்றவங்க அங்கேயும் வருவாங்க

  ReplyDelete
 17. சிலைகளை காக்க ஒரு வாரியம் அமைத்துவிட்டால் அரசியல் வியாதிகள் கொஞ்சம் சம்பாதிக்கலாம் ............

  ReplyDelete
 18. மனித உயிருக்கே பாதுகாப்பில்லை சிலைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கனுமா? இல்லை சிலைகள் வைக்க அனுமதிகொடுக்கனுமா?

  ReplyDelete
 19. சிலை பரமாரிப்பை காண்ட்ராக்ட் விட்டுடலாம், பயபுள்ளைக ஏதோ நாலு காசு பார்ப்பானுங்கள்ல?

  ReplyDelete
 20. /////சி.பி.செந்தில்குமார் said... 16
  மீள் பதிவுங்கறது கொழுந்தியா மாதிரி.. அதை மனைவி ஊருக்கு போயிருக்கறப்ப ஒரு அவசரத்துக்கு ஜாலியா பாத்துக்குலாம். அதையே ரெகுலர் பண்ணக்கூடாது.. ஹி ஹி ஹி ( சும்மா ஜாலிக்கு.. நான் கூட சில சமயம் டைப் பண்ண போர் அடிச்சா மீள் பதிவு போடுவேன்)/////

  வெளங்கிரும்........

  ReplyDelete
 21. சிலைகளுக்கு காவல் என்ற மேட்டரைச்சொல்லி அவங்களுக்கு புதுசா சம்பாதிக்க வழி சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 22. பாவம் காக்காய், குருவி எல்லாம் அப்புறம் எங்க போவும்? புளூ கிராஸின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்!:-)

  ReplyDelete
 23. சிலைகள் வைப்பது அந்த சிலைக்குரிய நபரை பெருமைபடுத்துவதாக இருக்கும் ஆனால் அதுவே சில சமயங்களில் பிரச்சனைக்குரிய விஷயமாக மாறி விடுகிறது...
  நாட்டின் சட்டத்தை இயற்றிய சட்டமாமேதை அம்பேத்கார் சிலைகள்நாடு முழுவதும் இரும்பு கூண்டுக்குள் அடைக்கப்பட்டு விட்டது...சிலைகளை அவமதிப்பு செய்யவது தவறான முறை என்பதை மக்கள் உணர வேண்டும் அப்போதுதான் சிலைகளாய் இருக்கும் தலைவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்

  ReplyDelete
 24. மீள் பதிவெல்லாம் வேண்டாம் உங்க மனசுல தோணுவதை எழுதுங்க

  ReplyDelete
 25. சிலைகள் பயமுறுத்தும்படி போகின்றன...இது ஒரு சம்பிரதாயம் ஆகி விட்டதால் இந்த நிலை

  ReplyDelete
 26. சிலைகளைக் காக்க நல்ல யோசனைகள்தான்!இதுக்காக உங்களுக்கு ஒரு சிலை வைக்க வேண்டியதுதான்!

  ReplyDelete
 27. கலக்கல்!மீள் பதிவுக்கு நன்றி

  ReplyDelete
 28. அடப்பாவிகளா..நான் வருமுன் கடையே காலி ஆயிடிச்சா!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.