என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, February 01, 2011

52 அரசியல் பக்கங்கள்- ரஹீம் கஸாலி


இனி அடிக்கடி வாசுவும் ராசுவும் அரசியல் நிகழ்வுகளை இங்கே பகிர்ந்து கொள்வார்கள்.


அடடே....வா வாசு எங்கே இந்த பக்கம் கொஞ்ச நாளா ஆளைக்காணோம்?
டெல்லில படிப்பு சம்பந்தமா கொஞ்சம் வேலை இருந்துச்சு ராசு .அதான் அங்கே  போயிட்டு இன்னைக்கு காலைலேதான் வந்தேன்.
அப்படியா? டெல்லில  என்ன விசேசம்? நம்ம சி.எம் கூட டெல்லிக்கு வந்திருந்தாரு  போல?
ஆமாமாம், நேற்று வந்திருக்காருன்னு சொன்னாங்க ....

எதுக்குப்பா அங்கே போயிருப்பாரு ?இலங்கை தமிழனை காப்பாத்துறத பத்தி பேசவா?
அவரு எதுக்குப்பா இலங்கை தமிழர்களை பத்தி பேசணும். அவங்க வந்து தமிழ்நாட்டுல ஓட்டு போடப்போறாங்களா என்ன? அவங்களை காப்பாத்த?

அப்புறம் எதுக்கு போயிருப்பாரு    ஒருவேளை மீனவர் பிரச்சினையை பத்தி போயிருப்பாரோ?
அட நீ வேற விளங்காதவனா இருக்கியே....அதுக்குத்தான் தந்தி அடிச்சுருவாறே?

அப்படின்னா...அதுக்கும்  இல்லையா? வேறெதுக்குதான்  போயிருப்பாரு?
நான் என்னவோ மன்மோகன்,சோனியா மாதிரி கேக்குறே...எனக்கு என்ன தெரியும்? எல்லாம் கூட்டனிய பத்தி பேசத்தான் போயிருப்பாரு.
ஓ...அதுக்குத்தானா? அதையும் போன்ல பேசி முடிச்சிட  வேண்டியதுதானே?
அது சரிவராதே? அப்புறம் அங்கே நடந்த  இன்னொரு கூத்து தெரியுமா?
சொல்லுப்பா...சொல்லுப்பா....

அங்கே போயி வாய வச்சுக்கு சும்மா இருக்காம....பாட்டாளி மக்கள் கட்சி எங்க கூட்டணியில்தான் இருக்குன்னு இவரு பாட்டுக்கு சொல்லிட்டாரு...
இதுல என்னப்பா கூத்திருக்கு?
அவசரப்படாதே....சொல்றேன்.....அவரு அப்படி சொன்னவுடனேயே   ராமதாசு ரொம்ப பிகு செஞ்சுக்கிட்டு  கூட்டணி பத்தி இன்னும் முடிவாகல...எல்லா கட்சியும் எங்கட்ட பேசிக்கு இருக்காங்கன்னு சொல்லிட்டாரு

அதானே....ராமதாசுதான் பெரிய வியாபாரி ஆச்சே? எங்கே பேரம் அதிகமா படியுதோ அங்கேதானே இருப்பாரு....அப்புறம் ராமதாசு இப்படி சொன்னதுல கலைஞர் மூக்கு உடைஞ்சுருக்குமே?
கலைஞர் இதைவிட கேவலத்தை எல்லாம் ராமதாசுட்ட சந்திச்சவரு இதுக்கா அசருவாரு பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.
அதுக்குத்தான் எதையுமே பிளான் பண்ணி செய்யனும்ன்னு சொல்றது.
எப்படி ஜெயலலிதா மாதிரியா?
ஜெயலலிதா அப்படி என்னப்பா பிளான்பண்ணி செஞ்சாங்க?
சமீபத்துல வேதாராண்யம் மீனவரு விஜயக்குமார இலங்கை கடற்படை நாயுங்க சுட்டு கொன்னுருச்சு தெரியமா?
ஆமாம் அதுக்கென்ன? இதுல ஜெயலலிதா  பிளான் எங்கேப்பா இருக்கு. அவங்கதான் சுடசொன்னாங்களா?

அய்யய்யோ...நீ என்னப்பா எனக்கு ஆப்பு அடிச்சுருவே போல....அதுல அவங்க பிளான் என்னன்னா....தேர்தல் வருது தெரியும்ல....அதான் வேதாரன்யத்துக்கே நேராப்போயி ஆறுதல் சொன்னாங்க....அதாவது மக்கள்ட்ட நல்ல பேரு எடுத்து ஆட்சிய பிடிச்சிடலாம்ன்னு பிளான்...

இருக்காதுப்பா...அதான் செத்துப்போன மீனவரு விஜயகுமாரு அவங்க கட்சி காரருன்னு சொல்லிட்டாங்களே?
அது உண்மைதான். அப்படி பார்த்தா,  நடிகர் ராமராஜன் கட்சிக்காக ஊரு ஊரா போயி கூட்டம் போட்டவாறு. தீவிர ஆதரவாளரு, அவரு அடிபட்டு மதுரையில அவரு அண்ணன் வீட்டுல  இருக்காரு...வேதாரண்யத்துக்கு போயிட்டு அப்படியே இந்தம்மா அவர பாக்க வரும்ன்னு அவரு குடும்பத்துக்காரங்க  எதிர்பார்த்தாங்கலாம். போகலியே இந்தம்மா....
சரி அத விடு....இந்தம்மா ஆட்சியில ஒருநாள் முதல்வர் மாதிரி  ஒரு வாரம் மந்திரியா இருந்தவரு ஆலங்குடி வெங்கடாச்சலம். இவர  மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு குரூப்பு வெட்டி கொன்னுடுச்சு அவரு குடும்பத்துக்கு ஆறுதலு சொல்ல போகலியே இந்தம்மா...
இப்பவும் தேர்தல் வரலேன்னா இந்தம்மா வேதாரண்யம் எந்த திசையில இருக்குன்னு  கேட்டுருப்பாங்க .

அடேங்கப்பா...இவ்வளவு இருக்கா....நீ சரியான மூளைக்காரன்ப்பா...உனக்கு இருக்க மூளைக்கு நீ இங்கே படிக்க  வேண்டிய ஆளே இல்லப்பா.அமெரிக்காவுல படிக்க  வேண்டிய ஆளு?
எதுக்கு நானும் காலுல ஜி.பி.எஸ். மாட்டிக்கு அலையவா?
அது  என்னப்பா ஜி.பி.எஸ்.
ஜி.பி.எஸ் ன்னா  ஒரு ஆளு இருக்க இடத்தை கண்டிபிக்க உதவும் கருவி.விலங்குக  நடவடிக்கைய கவனிக்க அதுக காலில இதைத்தான் மாட்டிவிடுவாங்க.அதுக்கு எலக்ட்ரானிக் டேக்குன்னு பேரு
அப்படியா அதுக்கும் மனுசனுக்கும் என்ன சம்பந்தம்?
இருக்கு இந்த படத்த பாரு புரியும்.

என்னப்பா இது மனுஷங்க காலில மாட்டியிருக்கு எதுக்குஇப்படி மாட்டிக்கு அலையுறாங்க இது இப்ப வந்துருக்க ஒரு ஸ்டெயிலா?
நல்லா கேட்ட போ.....இது அவங்களா மாட்டிக்கலப்பா....மாட்டிவிட்டுட்டாங்க...

மாட்டிவிட்டுட்டான்களா? யாருப்பா இத பண்ணினது?
இப்ப அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிரி வேலி பல்கலைக் கழக வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள இந்திய மாணவர்களின் காலில் கட்டி அவங்க நடமாட்டத்தை அமெரிக்க குடியேற்றத் துறை கண்காணித்து வருது

அடக்கொடுமையே அவன் நாட்டுக்காரன் நம்ம நாட்டுக்கு வந்தா அவன் காலு தரையில படக்கூடாதுன்னு நம்மாளுங்க சிவப்பு கம்பளம் போடுறாங்க.... அவங்க என்னடான்னா இப்படி பண்றாங்களா? கொடுமையா இருக்கே?
அட இது நமக்கு ஒன்னும் புதுசில்லப்பா. இதுக்கு முன்னாடி வாஜ்பாயி ஆட்சியில மந்திரியா இருந்த ஜார்ஜ் பெர்ணண்டாசுன்னு ஒருத்தர அமெரிக்கா ஏர்போர்ட்டுல அவுத்து பாத்தானுங்க...அப்புறம் அத்வானி, ஷாருக் கானுக்கெல்லாம் இந்த மாதிரி கேவலம் நடந்துருக்குப்பா?

இத நம்ம அரசாங்கம் தட்டி கேக்காதா?
அவங்க சும்மா கொரலு கொடுக்கறமாதிரி கொடுத்துட்டு ஒபாமாவுக்கு கால் கழுவி விடற வேலைய பாக்க ஆரம்பிச்சுடுவாங்க...
சரி நீதான் ஒரு வலைப்பதிவு வச்சுருக்கேல....அதுலயாவது இத பத்தி எழுதுப்பா...
எழுதிட்டா போச்சு

வலைப்பதிவுன்னதும் ஞாபகத்துக்கு இப்போ மீனவருக்காக என்னவோ பண்ணிட்டு இருக்காங்களாமே?

ஆமாப்பா... மீனவருக்காக டிவிட்டர்ல பெரிய புரட்சி ஒன்னு உருவாகி தினமும் ஆயிரக்கணக்குல ட்வீட் வந்துக்கு  இருக்கு.அரசாங்கம் காதுக்கு அது எட்டி   இனிமேலாவது இதுக்கு ஓட்டுப்பொறுக்கி ஆட்சியாளர்கள் எதாவது ஆக்சன் எடுக்கறாங்கலான்னு பாப்போம்

நல்லதுப்பா...உன்கிட்ட பேசுனதுல நிறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன்.அடிக்கடி வாப்பா.
இத படிக்கறவங்க என்ன எப்படி வரவேற்கறாங்கன்னு தெரிஞ்சுக்குத்தான் நான் அடிக்கடி வர்றதும், வராததும் இருக்கு...
அப்படியா, அவங்க உன்னை வரவேற்க்கிற விஷயத்த நீ எப்படி தெரிஞ்சுக்குவே?
எல்லாம் இந்த பதிவுக்கு விழற ஓட்டையும் பின்னூட்டத்தையும் வச்சுத்தான். சரி கிளம்பறேன்.Post Comment

இதையும் படிக்கலாமே:


52 comments:

 1. இந்த வாசுவோட இன்னொரு பெயர் மானிட்டர் மூர்த்தின்னும் ராசுவோட இன்னொரு பெயர் குவாட்டர் கோயிந்தன்னும் பேசிக்கிறாங்களே... அது உண்மையாண்ணே...? #doubt

  ReplyDelete
 2. Philosophy Prabhakaran said...

  இந்த வாசுவோட இன்னொரு பெயர் மானிட்டர் மூர்த்தின்னும் ராசுவோட இன்னொரு பெயர் குவாட்டர் கோயிந்தன்னும் பேசிக்கிறாங்களே... அது உண்மையாண்ணே...? #doubt
  நண்பா அது விக்கியோட வலைப்பதிவில்.....இது நம்ம பதிவு

  ReplyDelete
 3. கலக்கீரீங்க பாஸ்..

  ReplyDelete
 4. இங்கு அதே கருவியை பெயிலில் வரும் கைதிகளுக்கு மாட்டிவிடுவார்கள்! நம் மாணவர்களின் நிலை பரிதாபம்!

  ReplyDelete
 5. நருக்குனு 4 VOTE போட்டாச்சு

  ReplyDelete
 6. கலக்குங்க கலக்குங்க...

  ReplyDelete
 7. //இங்கு அதே கருவியை பெயிலில் வரும் கைதிகளுக்கு மாட்டிவிடுவார்கள்! நம் மாணவர்களின் நிலை பரிதாபம்//

  என்னாண்ணே நம்மளபத்தி ஏதோ சொல்லியிருக்கீங்க...

  ReplyDelete
 8. புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து நிறைய அரசியல் பக்கங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்....

  ReplyDelete
 9. அருமை அருமை

  தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 10. சரிதான் கலக்குங்க

  ReplyDelete
 11. நேத்து நைட் நியூஸ் பார்த்தப்ப இதைப்[பத்தி ஒரு பதிவு போடலாம்னு நினைச்சேன்.. நீங்க முந்திக்கிட்டீங்க.. ம் ம் நல்லாருக்கு மேட்டர்

  ReplyDelete
 12. Philosophy Prabhakaran said...

  இந்த வாசுவோட இன்னொரு பெயர் மானிட்டர் மூர்த்தின்னும் ராசுவோட இன்னொரு பெயர் குவாட்டர் கோயிந்தன்னும் பேசிக்கிறாங்களே... அது உண்மையாண்ணே...? #doubt

  ட்விட்டர்லயே குடி இருந்ந்தா இப்படித்தான்.. பிரபா... ரஹீம் கசாலி தன்னோட பாணில சொல்றார்.
  இது குமுதம்ல வர்ற அரட்டை மாதிரி.. விகடன்ல வர்ற அனு அக்கா ஆண்ட்டி மாதிரி..

  ReplyDelete
 13. வலைஞன்ல ஒரு போஸ்ட் போட்டிருக்கீங்க போல.. எப்படி ரெண்டையும் ஒரே டைம்ல மெயிண்ட்டெயின் பண்ண முடியுது.. சொல்லிக்குடுத்தா நாங்களும் தெரிஞ்சுக்குவோமே..

  ReplyDelete
 14. சி.பி.செந்தில்குமார் said...

  இது குமுதம்ல வர்ற அரட்டை மாதிரி.. விகடன்ல வர்ற அனு அக்கா ஆண்ட்டி மாதிரி..
  ஆஹா....வசிஷ்டர் வாயில் பிரம்மரிஷி பட்டம். ரொம்ப நன்றி அண்ணாச்சி

  ReplyDelete
 15. அனைத்து விஷயங்களையும்ஒரே இடத்தில்.. சூப்பர்...

  ReplyDelete
 16. நல்ல தொகுப்பு..
  டீக்கடை பென்ச் மாதிரி இருக்கு..
  அருமை..

  ReplyDelete
 17. பதிவின் தரம் மெருகேறிக்கொண்டே இருக்கிறது

  ReplyDelete
 18. அவசரப்படாதே....சொல்றேன்.....அவரு அப்படி சொன்னவுடனேயே ராமதாசு ரொம்ப பிகு செஞ்சுக்கிட்டு கூட்டணி பத்தி இன்னும் முடிவாகல...எல்லா கட்சியும் எங்கட்ட பேசிக்கு இருக்காங்கன்னு சொல்லிட்டாரு//
  அல்வா கொடுத்துட்டாரு ராமதாசு

  ReplyDelete
 19. ஆர்.கே.சதீஷ்குமார்@
  ஆஹா...வாங்க நண்பா....ரொம்ப நாளா நம்ம கடைப்பக்கம் ஆளே காணலியே? மானிட்டர் மூர்த்தி உங்கள ரொம்பத்தான் பாதிச்சிருப்பார் போல....ஆனா அது விக்கியின் கேரக்டர். நம்ம பதிவு பேரு அரசியல் பக்கங்கள் (வாசு-ராசு).

  ReplyDelete
 20. இது ரொம்ப அருமையா இருக்கு. இதை டெய்லி போடாமா வாரம் ஒரு முறை பிழிஞ்சு ஜூஸ் மாதிரி கொடுங்க. தினம் நியூஸ் பார்க்காத வர்களுக்கு கூட அரசியல் நிலைமை தெரிந்து கொள்ள ஆர்வம் வரும். வாழ்த்துகள் தல!!

  ReplyDelete
 21. அரசியலுக்கு வந்தாச்சா சரி நான் நிறுத்திடுறேன்.......ஹிஹி!!!!!!!!

  ReplyDelete
 22. இது ரொம்ப அருமையா இருக்கு. இதை டெய்லி போடாமா வாரம் ஒரு முறை பிழிஞ்சு ஜூஸ் மாதிரி கொடுங்க. தினம் நியூஸ் பார்க்காத வர்களுக்கு கூட அரசியல் நிலைமை தெரிந்து கொள்ள ஆர்வம் வரும். வாழ்த்துகள் தல!!

  ReplyDelete
 23. அடக்கொடுமையே அவன் நாட்டுக்காரன் நம்ம நாட்டுக்கு வந்தா அவன் காலு தரையில படக்கூடாதுன்னு நம்மாளுங்க சிவப்பு கம்பளம் போடுறாங்க.... அவங்க என்னடான்னா இப்படி பண்றாங்களா? கொடுமையா இருக்கே?

  ...இந்த எண்ணம் ரொம்ப தப்புங்க... இங்கு படிக்க வருகிற அனைவருக்கும் இப்படி செய்வதில்லை... தங்கள் விசா status தவறாக பயன் படுத்தியவர்கள் என்று விசாரணைக்கு பின், தெரிந்தவர்களுக்கு மட்டுமே இப்படி செய்யப்பட்டு இருக்கிறது. ஜெயிலில் வைப்பதற்கு மாற்றாக என்று கூட வைத்து கொள்ளலாம். தவறாக குறிப்பிட்டு இருக்கீங்க என்று தெரியப்படுத்தி கொள்றேங்க.... தவறு செய்யாத அமெரிக்கர்கள், இந்தியா வரும் போது, எதற்கு தண்டனை கொடுக்க வேண்டும்? இங்கு தவறு செய்யாத இந்தியர்களாகிய மற்ற மாணவர்களுக்கு , காலில் மாட்டி கொள்ளும், அந்த நிலைமை இல்லையே.

  ReplyDelete
 24. நல்லா கிராமத்து ஆளுக்கு புரிகிற மாதிரி நன்றாக எழிய தமிழில் எழுதியுள்ளீர்கள்.. நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் என்றும்

  ReplyDelete
 25. குறிப்பிட்டமைக்கு நன்றி சித்ரா மேடம் ......
  நேற்று வந்த செய்தியின் அடிப்படையில் தான் இது தொகுக்க பட்டுள்ளது. அதே நேரம் மாணவர்கள் தவறு செய்திருந்தாலும், படிக்க வேண்டும் என்ற உந்துதலின் காரணமாகத்தான் அவர்கள் தவறு செய்துள்ளார்களே தவிர வேறு உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. மாணவர்களின் எதிர்காலம் கருதி அமெரிக்க அரசு கொஞ்சம் விட்டுக்கொடுத்திருக்கலாம் என்பது என் கருத்து.

  ReplyDelete
 26. நல்ல தொகுப்பு..வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. தொடர்ந்து கலக்குங்க!ஒட்டுப் போட்டுக்கிட்டே இருக்கேன்!

  ReplyDelete
 28. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  என்ன கொடும சார் இது?
  எதை சொல்றீங்க பன்னிகுட்டி சார். நான் அரசியல் பதிவு போட்டதையா?

  ReplyDelete
 29. பதிவின் நீளம் அதிகரித்திருப்பது பாராட்டுக்குரியது, நிறைய விஷயங்கள் பற்றிய உங்களது கருத்துக்களையும் தெரிந்துக்கொள்ள முடிந்தது.. பகிர்வுக்கு நன்றிகள்..

  ReplyDelete
 30. சொந்த செயல் பரவாஇல்லையே.....நல்ல செய்திகள் தான்

  ReplyDelete
 31. //இது ரொம்ப அருமையா இருக்கு. இதை டெய்லி போடாமா வாரம் ஒரு முறை பிழிஞ்சு ஜூஸ் மாதிரி கொடுங்க.//

  ReplyDelete
 32. //////ரஹீம் கஸாலி said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  என்ன கொடும சார் இது?
  எதை சொல்றீங்க பன்னிகுட்டி சார். நான் அரசியல் பதிவு போட்டதையா?/////

  அரசியலை சொன்னேங்கோ..... அது என்னாங்கோ சாரு...?

  ReplyDelete
 33. //////ரஹீம் கஸாலி said...
  குறிப்பிட்டமைக்கு நன்றி சித்ரா மேடம் ......
  நேற்று வந்த செய்தியின் அடிப்படையில் தான் இது தொகுக்க பட்டுள்ளது. அதே நேரம் மாணவர்கள் தவறு செய்திருந்தாலும், படிக்க வேண்டும் என்ற உந்துதலின் காரணமாகத்தான் அவர்கள் தவறு செய்துள்ளார்களே தவிர வேறு உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. மாணவர்களின் எதிர்காலம் கருதி அமெரிக்க அரசு கொஞ்சம் விட்டுக்கொடுத்திருக்கலாம் என்பது என் கருத்து.///////

  அவர்கள் படிப்பதற்காக சென்றார்களா என்பது சந்தேகமே! இது அமெரிக்காவிற்குள் நுழைய ஒரு குறுக்குவழியாகவே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. குறிப்பாக ஆந்திராவில் இது போன்ற விஷயங்கள் சகஜம். அமெரிக்கா செல்லும் அளவுக்கு விபரம் உள்ளவர்கள் இது போன்ற பல்கலைக் கழகங்களில் சென்று மாட்டிக் கொள்வார்கள் என்று நம்ப முடியவில்லை!

  ReplyDelete
 34. நண்பா, கலக்குறீங்க நண்பா ! இன்னும் உங்ககிட்ட நான் நிறைய எதிர்பார்க்கிறேன்......

  ReplyDelete
 35. சார் தொடர்ந்து கலக்குங்க...
  அருமையா தொடர்ச்சியா அனைத்தும் வழங்கிய விதம் அருமையோ அருமை

  ReplyDelete
 36. நன்றாக உள்ளது கஸாலி சார்,தொடருங்கள் ...

  ReplyDelete
 37. may i come inஇந்த ஆட்டத்திலே நானும் கலந்துக்கலாமா...

  ReplyDelete
 38. புதுசு புதுசா பல டெக்னிக் எல்லாம் பதிவில் புகுத்தி அசத்துறீங்க. நல்லா இருக்கு, உங்கள் டெக்னிக்கும் பகிர்ந்து கொண்ட செய்திகளும்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 39. //அட நீ வேற விளங்காதவனா இருக்கியே///என்னய்யா.... என் பேரு அடிபடுது?

  ReplyDelete
 40. கால்ல பெரிய வீடியோ கேமிர கட்டலையேனு சந்தோஷப்படுங்க

  ReplyDelete
 41. அரசியல் தில்லாலங்கடிகளை அழகாய்
  உறிச்சி - உறிச்சி வச்சிட்டீங்க, சூப்பர்!
  -கலையன்பன்.

  (இது பாடல் பற்றிய தேடல்!)
  ஒரு ஊரில் ஊமை ராஜா!

  ReplyDelete
 42. அடேங்கப்பா...இவ்வளவு இருக்கா....நீ சரியான மூளைக்காரன்ப்பா...பதிவுக்கான ஃபொர்மேட் சூப்பர்...தொடருங்கள்..நீங்களும் பிகு மேட்டரை எழுதியிருக்கீங்களா..இப்போதான் அதை வலையேற்றிட்டு வர்றேன்!!!

  ReplyDelete
 43. "ஓ...அதுக்குத்தானா? அதையும் போன்ல பேசி முடிச்சிட வேண்டியதுதானே?"
  சி.எம்: போன்ல பேசின ரெகார்ட் பண்ணி லைவ் ஷோ போடுறாங்க தம்பி அதான் நேர பார்த்து மேட்டர் முடிசிடலமுனு டெல்லி வந்துட்டேன்

  ReplyDelete
 44. ///நேற்று வந்த செய்தியின் அடிப்படையில் தான் இது தொகுக்க பட்டுள்ளது. அதே நேரம் மாணவர்கள் தவறு செய்திருந்தாலும், படிக்க வேண்டும் என்ற உந்துதலின் காரணமாகத்தான் அவர்கள் தவறு செய்துள்ளார்களே தவிர வேறு உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.////


  .......படிப்பது என்பது அவர்கள் உள்நோக்கம் இல்லை என்பது, விசாரணையில் தெரிய வந்துள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன். படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த பல்கலைகழகத்தை நிச்சயமாக தேர்ந்து எடுக்க வழியே இல்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

  ReplyDelete
 45. தவறுக்கு வருந்துகிறேன் சித்ரா மேடம்.இனிமேல் எந்த ஒரு செய்தியையும் முதலில் வரும் தகவல் அடிப்படியில் கோர்க்க கூடாது என்பதையும் அறிந்துகொண்ட்ன். மேலதிக தகவலுக்கு நன்றி மேடம்

  ReplyDelete
 46. அருமை.தொடருங்கள்.நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 47. சரியாக சொன்னீர்கள்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.