என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, February 22, 2011

37 வலைச்சரமும் நானும்


கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில் ஒரு புதன் கிழமை..மதியம் என் மின்னஞ்சலை திறந்தபோது வலைச்சரம் சார்பில் அய்யா சீனா அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல். வரும் வாரம் வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பை தாங்கள் ஏற்கமுடியா என்று.....
கரும்பு தின்ன கூலியா? வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பு  என்பது பதிவர்களுக்கான கவுரவம், ஒரு அங்கீகாரம் என்றும் சொல்லலாம். அப்படிப்பட்ட வலைச்சரத்தில் நானும் ஒருவாரம் ஆசிரியரா?.பெரிய பெரிய பதிவுலக ஜாம்பவான்கள் அலங்கரித்த பொறுப்பில் நானுமா?என்று இன்ப அதிர்ச்சி.  இருக்கும்  நான்கு நாள் அவகாசத்தில் அனைத்து பதிவர்களையும் பட்டியலிட முடியுமா என்று பலத்த யோசனை.
நம்ம தளத்தில் மொக்கை போட்டுக்கொண்டு இருந்தேன். வலைச்சரத்திற்கு ஆசிரியரானால் பொறுப்பும்,கவனமும் வந்துவிடும்....கூடவே பயமும்.அதனால் நீண்ட யோசனைக்கு பிறகு, இரவு அய்யா சீனா அவர்களுக்கு ஒரு ஒப்புதலை தட்டிவிட்டுவிட்டு அடுத்த நாள் காலை பரபரவென்று பதிவர்களை பட்டியலிட ஆரம்பித்துவிட்டேன். ஒரு வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்து முந்தைய  சில ஆசிரியர்களின் அறிமுக நடையை பார்வையிட்டேன். அதில் ஒரு சிலர் நான் நினைத்தது போலவே அறிமுகம் செய்திருந்தார்கள். அதன் பிறகு எனக்கொரு யோசனை. பதிவர்களின் புகைப்படத்துடன் அறிமுகம் செய்யலாமே என்று. நான் பட்டியலிட்டு வைத்திருந்த பதிவர்களின் தளங்களுக்கு சென்று புரபைலில் இருக்கும் போட்டோக்களை சேகரிக்க ஆரம்பித்தேன். சிலர் முகம் காட்டியிருந்தார்கள். சிலர் முகம் காட்ட விருப்ப படாமல் சம்பந்தமில்லாத போட்டோக்களை வைத்திருந்தார்கள். அவர்கள் சம்பந்த்தப்பட்ட பேஸ்புக்கில் சிலரது புகைப்படங்களை எடுத்தேன். மறந்தும் கூட யாரிடமும் புகைப்படம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பவில்லை, ஒரு நண்பரை தவிர.....அவர் தனது புரபைலில் போட்டோ ஏதும் வைக்காமல் வெறும் பெயரை மட்டும் வைத்திருந்தார்.அவருக்கு மட்டும் மின்னஞ்சல் அனுப்பி போட்டோ கேட்டேன். அதற்க்கு அவர், மன்னிக்க வேண்டும் நண்பா...நான் இப்போது முகம் காட்டவிரும்பவில்லை.என் முகத்திற்கு பதில் இதைவைத்து கொள்ளுங்கள்  என்று பூவின் படத்தை அனுப்பியிருந்தார். அப்படியே எல்லாவற்றையும் தொகுத்து தயார்நிலை வைத்திருந்தேன்.முதநாள் அறிமுகங்களை வெளியிட்டுவிட்டு மிகுந்த பதட்டத்துடன் இருந்தேன்.பதிவர்கள் என்ன சொல்வார்களோவென்று.....அப்படி  சொன்னால்...புகைப்படங்களுடன் கூடிய அறிமுகமுறையை மாற்றிவிட்டு வேறொரு முறையில் அறிமுகம் செய்யலாமென்றும் நினைத்திருந்தேன். ஆனால், எதிர்பார்த்ததைவிட அந்த முறைக்கு வரவேற்ப்பு நன்றாக இருந்தது. குறிப்பாக சீனா அய்யா அவர்களே ...வித்தியாசமான முறையில் அறிமுகங்கள் - நன்று நன்று..என்று பின்னூட்டமிட்டிருந்தார். அடுத்தடுத்த நாட்களிலும் அதே முறையை பின் பற்றி அறிமுகங்களை  வெளியிட்டு  என் பணியை முடித்துவிட்டேன். நிறைய நண்பர்களை அறிமுகம் செய்யமுடிய வில்லையே என்ற வருத்தமிருந்தாலும் எனக்கு கொடுக்கப்பட்ட பணியை செவ்வனே செய்து திரு சீனா அய்யா அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன் என்று திருப்தி கிடைத்தது. கடைசி நாள் இரவு என்னை வழியனுப்பும் இடுகையில் சீனா ஐயா அவர்கள்,

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற நண்பர் ரஹீம் கஸாலி, தான் ஏற்ற பொறுப்பினைச் சரிவர நிறைவேற்றி, மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு, இதுவரை ஐநூற்று ஐம்பது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். ஐம்பத்தெட்டு பதிவர்களையும் அவர்களது சிறந்த இடுகைகளையும் அறிமுகப் படுத்தி உள்ளார்.

அறிமுகப்படுத்தும் போது, புது விதமாக, பதிவர்களது புகைப்படத்தினையும், பெயரினையும், வலைப்பூவின் பெயரினையும், பிடித்த இடுக்கைகளின் பெயர்களையும் வெளியிட்டு புதுமை படைத்துள்ளார்.

நண்பர் ரஹீம் கஸாலியினை, நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.
 என்று குறிப்பிட்டிருந்தார். அவருக்கு என் நன்றி....மேலும்...எனக்கு ஆதரவளித்து பின்னூட்டமிட்ட, வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...

நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்த வலைச்சரத்தில்  நாட்கள் போதவில்லை என்பதால் இனி வரும் வாரங்களில், வாரத்திற்கு ஒருமுறை சில பதிவர்களை என் தளத்திலேயே அறிமுகம் செய்யலாமென்று இருக்கிறேன். அதற்கும் ஆதரவு தருவீகள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன். அட....சொல்ல மறந்துட்டேங்க....இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியராக நம்ம பிலாசபி பிரபாகரன் கலக்குறார். அவர் புதிய பதிவர்களை தேடிப்பிடித்து அறிமுகம்
செய்து ஆதரவளிப்பதில் அவருக்கு நிகர் அவரே...அவரின் முயற்ச்சிக்கும் நான் ஆதரவளிப்போம் நண்பர்களே....


Post Comment

இதையும் படிக்கலாமே:


37 comments:

 1. அருமையாக இருந்தது உங்க வாரம் பாராட்டுக்கள்.நான் இன்னும் பார்வையிட பாக்கியும் இருக்கிறது.நிறைய ப்ளாக் சென்று வாசிக்க ஆசையிருந்தும் நேரம் போதவில்லை.

  ReplyDelete
 2. நிறைய புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியிருந்தீர்கள் வாழ்த்துக்கள்...

  நீங்கள் கஷ்டப்பட்டது பயனுள்ளதாக இருந்தது...

  ReplyDelete
 3. புகைப்படத்துடன் பதிவர்களை அறிமுகப்படுத்திய உங்கள் முயற்சி.. அருமை.. நிறைய பேரை தெரிந்துகொள்ள முடிந்தது. தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாகவே செய்துள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வலைச்சரத்தில் உங்கள் பணி மிகவும் நிறைவாகத்தா ன்.. இருந்தது..

  அறிமுகம் செய்த விதம்.. அவர்க ளது புகைப்படம் என எல்லாம் அருமை.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. ///////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

  என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...

  ReplyDelete
 6. உங்க உழைப்புக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 7. சற்றே வித்தியாசமான மனம் கவ்ர்ந்த வாரமாக அமைந்தது, மகிழ்ச்சியும்,பாராட்டுகளும்.

  ReplyDelete
 8. எடுத்த பணியை சிறப்புடன் முடித்து விட்டீர்கள் வாழ்த்துகள்

  ReplyDelete
 9. நிறைய புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியிருந்தீர்கள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. see.,
  http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_22.html

  ReplyDelete
 11. வெகு சிறப்பாக செய்திருந்தீர்கள் சகோதரம்..

  ReplyDelete
 12. தங்களின் சிரமம் அறிந்ததே காரணம் எனத படம் மூஞ்சிப் புத்தக நண்பர்களுக்கே தெரியாது அப்படியிரக்கையில் அதற்குள் வந்து நுழைந்து எப்படித் தேடிப் பிடித்திர்கள் என்பது அதிசயமல்லவா ?

  ReplyDelete
 13. நிறைய புதியவர்களை புகப்படத்துடன் அருமையாக அறிமுகப்படுத்தி இருந்தீர்கள். மிகவும் வித்யாசமாகவும் நன்றாககவும் இருந்தது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. அருமையாக இருந்தது ரஹீம். இன்னும் அறிமுகங்கள் தொடரட்டும்.

  ReplyDelete
 15. உங்கள் தளத்தில் என்னைப் போன்ற புதிய பதிவர்களை அறிமுகப்படுத்துஇ ஊக்கு விக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.(எத்தனை தடவை...)

  ReplyDelete
 16. வலைசரத்தில் நீங்கள் சிறப்பாகவே பணியாற்றி உள்ளீர்கள். அது சரி இப்படி எழுதி தள்ளுகிறீர்களே உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?

  ReplyDelete
 17. நல்ல அனுபவமா தொகுத்து இருக்கீங்க

  ReplyDelete
 18. என்னையும் அறிமுகபடுத்தி இருந்தீங்க நன்றி

  ReplyDelete
 19. ம்.. அழகு உங்கள் உணர்வும் ஆக்கமும். தொடர்ந்து அறிமுகப்படுத்துங்கள்

  ReplyDelete
 20. நன்றாக பல பதிவர்களை அறிமுகப்படுத்தி இருந்தீர்கள். பாராட்டுக்கள்!

  ReplyDelete
 21. ஏற்றுக்கொண்ட பணியை மிகச்சிறப்பாகச் செய்து முடித்து விட்டீர்கள்!
  உங்கள் பதிவிலும் அறிமுகப்படுத்துவது என்பது ஒரு நல்ல,புதிய யோசனை!

  ReplyDelete
 22. நிரைவான பணி. சிறப்பாக செய்திருந்தீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. என்னை அறிமுகப்படுத்தி என் புகைப்படத்தையும் போட்டதற்கு நன்றி! :))

  ReplyDelete
 24. உங்கள் முயற்சிகளைப் பாராட்டுகிறேன், நன்றி நண்பரே...!

  ReplyDelete
 25. உங்கள் பங்களிப்பு மிகச்சிறந்ததாக இருந்தது.மிண்டும் நன்றி

  ReplyDelete
 26. செய்வன திருந்தச்செய் அதை செப்பனே செய்தீர்கள்

  பாரட்டுக்கள்

  ReplyDelete
 27. வித்தியாசமான முறையில் அறிமுகப்படித்தி இருந்தீஙக், ஆனால் சேஅக்ரித்து போடுவது மிகக்கடினமே.மிகவும் பொருப்பு + பொருமை தேவை இல்லையா?
  நீங்களே உஙக்ள் வலையில் அறிமுகப்படுத்துவதும் நல்ல முயற்சிதான்.

  ReplyDelete
 28. நான் சொல்ல நினைத்ததை எல்லோரும் முந்திக்கொண்டார்கள், என்னை அறிமுகப்படுத்த வில்லையே என்ற வருத்தத்துடன், வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 29. என்னையும் அறிமுகபடுத்தி இருந்தீங்க நன்றிவலைச்சரத்தில் உங்கள் பணி மிகவும் நிறைவாகத்தா ன்.. இருந்தது..

  ReplyDelete
 30. அருமையான பணி பாஸ்...என் அறிமுகத்துக்கும் நன்றிகள்..

  ReplyDelete
 31. வலைச்சரத்தில் வலம்வந்த சரித்திரத்தை,
  சிறப்புடன் விளக்கினீர்கள்.
  நிச்சயமாக, அங்கே வெற்றிச் சரித்திரம்
  படைத்துவிட்டீர்கள் என்பது
  மறுப்பதற்கல்ல. வித்தையாச முறையைப்
  பயன்படுத்தியதையும் அழகாய்
  எடுத்துரைத்திர்கள்.
  தங்கள் அனுபவங்கள் இனிமையானவை.

  ReplyDelete
 32. நன்றி உங்களுக்கு - என்னையும்
  வலைச்சரத்தில் அறிமுகம்
  செய்து வைத்ததற்கு!

  ReplyDelete
 33. பல பதிவர்களை அறிமுகப்படுத்தி இருந்தீர்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 34. // புதிய பதிவர்களை தேடிப்பிடித்து அறிமுகம் செய்து ஆதரவளிப்பதில் அவருக்கு நிகர் அவரே... //

  உங்களை விடவா நண்பா...

  ReplyDelete
 35. எனக்கு இதுவரை சீனா அய்யா பின்னூட்டமே போடவில்லையே... ஒருவேளை பிடிக்கவில்லையோ...

  ReplyDelete
 36. உங்களின் வாழ்த்துக்களுக்கும், வாக்குகளுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.