என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, February 28, 2011

35 ங்கொய்யால யார ஏமாத்தப்பாக்குறே?......


மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும்  ஒரு வயதான பணக்கார தம்பதி , அனாதையான தன் பேரனை ஒரு உறவினரிடம் ஒப்படைத்து கூடவே ஐந்து கோடிரூபாய் பணத்தையும் கொடுத்து....

"இவன் வளர்ந்து பெரியவனானதும் இந்த பணத்திலிருந்து உங்களுக்கு விருப்பமானதை கொடுங்க"ன்னு சொல்லிட்டு இறந்து போய்ட்டாங்க...
.அவங்க அப்படி சொன்னதை எழுத்து பூர்வமா எழுதிக்கொடுத்துட்டும் போயிருந்தாங்க....
 
காலம் வேகமாக நகர்ந்தது.
பேரன் வளர்ந்து பெரியவனானதும்,
"எனக்கு தாத்தா கொடுத்த பணத்த கொடுங்க நான் தொழில் ஆரம்பிக்கணும்" என்று கேட்டான். 

அதற்கு அந்த உறவினர் "இந்தாப்பா...உன் தாத்தா கொடுத்த பணம்"ன்னு பத்து லட்ச  ரூபாயை மட்டும் கொடுத்தார்.

உடனே பேரன் "இது அநியாயம் எங்க தாத்தா கொடுத்தது அஞ்சு கோடிரூபா, ஆனா நீங்க எனக்கு கொடுத்தது ரொம்ப கம்மி, எனக்கு அஞ்சு கோடிரூபாயும் வேணும்...இல்லாட்டி நான் வழக்கு போடுவேன்"னு சொன்னான்...

அசராத உறவினர் "நீ என்ன வேண்ணாலும் போட்டுக்க...உங்க தத்தா சாகும்போது என்ன சொல்லிட்டு செத்தாருன்னு தெரியுமா? உங்களுக்கு விருப்பமானதை கொடுங்கன்னு சொல்லிட்டுத்தான் செத்தாரு...அதை எழுதியும் கொடுத்துருக்காருன்னு" சொல்லிட்டாரு.

உடனே பேரன் 'நம்மள இந்தாளு ஏமாத்திட்டாரு  இவரை வேற மாதிரி சந்திக்கனும்'ன்னு நினைச்சுக்கு நேரா போயி அந்த ஊர்ல இருக்க பெரிய மனுசன்ட்ட விசயத்த சொன்னான். 
அந்த பெரிய மனுஷன் ரொம்ப நேர்மையான ஆளு....இந்த பையனுக்கு எப்படியாச்சும் பணத்தை வாங்கி கொடுத்திடனும்ன்னு நினைச்சுக்கு யோசிச்சாரு ...யோசிச்சாரு....ராத்திரி முழுக்க யோசிச்சு ஒரு ஐடியா பண்ணாரு....காலையில அந்த உறவினரை வரச்சொன்னாரு....உறவினரும் ரொம்ப தைரியமா போனாரு...

எல்லா விவரத்தையும் கேட்ட பெரிய மனுஷன்  "இந்த பையனுக்கு நீங்க வச்சுருக்க  நாலு கோடியே தொண்ணூறு லச்சரூபாய கொடுத்துட்டு, இவனுக்கு நீங்க கொடுத்த பத்து லச்சரூபாய வாங்கி நீங்களே வச்சுக்கங்க"ன்னாரு....

உடனே அந்த உறவினர் "அதெப்படிங்க முடியும்...இவனோட தாத்தா உங்களுக்கு விருப்பமானதை  கொடுங்கன்னு எழுதியே கொடுத்துட்டாரே....அப்படி இருக்கையில...எனக்கு எவ்வளவு விருப்பமோ அதைத்தான் கொடுத்துருக்கேன்"னு வாதம் பண்ணினாரு....

பெரிய மனுஷன் விடாமே...."இவனோட தாத்தா உங்கட்ட அஞ்சு கோடிரூபா கொடுத்தாரு...அதில உங்களுக்கு விருப்பமானத கொடுங்கன்னும் சொல்லிருக்காரு...இப்ப நீங்க என்ன பண்ணிருக்கீங்க அந்த பணத்துலேர்ந்து பத்து லச்ச ரூபாய மட்டும் கொடுத்துட்டு மீதிய நீங்க வச்சுக்க விருப்பபட்டுருக்கீங்க.......இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா...மீதி பணத்த நீங்க விருப்பப்பட்டு எடுத்துக்கிட்டீங்க....இவனோட தாத்தா சொன்னபடி உங்களுக்கு விருப்பமான பணத்தை அதாவது நீங்க விருப்பப்பட்டு எடுத்துக்கிட்ட  மீதி பணத்த இவன்கிட்ட கொடுங்க...அவனுக்கு கொடுத்த பணத்த நீங்க வச்சுக்கங்க...நீங்க விரும்பறத கொடுத்துடுங்கன்னுதான்  இவனோட தாத்தா சொல்லிருகாரு....உங்களால எவ்வளவு பணம் கொடுக்க முடியுமோ அதை கொடுங்கன்னு சொல்லலியே....ங்கொய்யால யார ஏமாத்த பாக்குறே"என்று   பேசி உறவினரின் வாயை அடைத்து அந்த பணத்தை பேரனிடம் வாங்கி கொடுத்தார். 

டிஸ்கி 1: இந்த கதையோட நீதியை சொல்வதற்கு நான்ஒன்றும் ஜட்ஜ் கிடையாது...ஆகவே நீதி சொல்வதற்கு நமீதாவை தொடர்பு கொண்டிருக்கிறேன். நான் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறேன் மச்சான். சீக்கிரம் வந்து சொல்றேன் என்று பரந்த மனசுடன்   கூறிவிட்டதால் காத்திருங்கள் நண்பர்களே....நிச்சயம் ஒரு நாள் நமீதா நீதி வெல்லும்....சே.... நமீதா நீதி சொல்லும்.

டிஸ்கி 2: இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாமல் நமீதா படம் போட்டிருக்கேன்னு யாரும் சொல்ல முடியாது ....அதான் முதல் டிஸ்கில நமீதாவ பத்தி சொல்லியாச்சே?
கழுகின் பார்வையில் இன்று

ஊடகங்கள் ஒரு விரிவான பார்வை......!
Post Comment

இதையும் படிக்கலாமே:


35 comments:

 1. தொடர்ந்து ரெண்டாவது மொத வடை!!

  ReplyDelete
 2. கதை சூப்பர்,
  நமீதா சூப்பரோ சூப்பர்.

  மரியாதைராமன் கதை மாதிரி இருந்தது!

  ReplyDelete
 3. ஆமா பதிவுக்கும் நாமே படத்துக்கும் என்ன பாஸ் சம்பந்தம்?
  சங்கத்திட்ட அனுமதி வாங்கியாச்சா?

  ReplyDelete
 4. வால்பையன் said...

  கதை சூப்பர்,
  நமீதா சூப்பரோ சூப்பர்.

  மரியாதைராமன் கதை மாதிரி இருந்தது!///////////////
  மரியாதை ராமன் கதைதான்....என்றோ படித்தது ....கருவை மட்டும் வைத்துகொண்டு
  இன்று அதை என் ஸ்டைலில் எழுதியிருக்கேன். வருகைக்கு நன்றி வால் சார்

  ReplyDelete
 5. ////இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாமல் நமீதா படம் போட்டிருக்கேன்னு யாரும் சொல்ல முடித்து....அதான் முதல் டிஸ்கில நமீதாவ பத்தி சொல்லியாச்சே?///

  ஒரு சாப்பாட்டில எல்லாம் இருந்தாத் தான் சுவைங்கோ....

  ReplyDelete
 6. டைட்டிலைப்பார்த்ததும் பயந்துட்டேன்...#நீதி- பதிவு எப்படி போட்டாலும் டைட்டில் அட்ராக்‌ஷனா வைக்கனும்.

  ReplyDelete
 7. ராம்சாமியின் அனுமதி இல்லாமல் நமீதா படத்தையோ ,...யூஸ் பண்ணக்கூடாதுன்னு தெரியாம இப்படி மாட்டிக்கிட்டீங்களே.. சங்கத்துல இருந்து நோட்டீஸ் வந்தா என்ன பண்ணுவீங்க?

  ReplyDelete
 8. நமீதா படம் போட்டு, நீதி சொன்ன கஸாலிக்கு ஓ போடுங்கப்பா!

  ReplyDelete
 9. இது என்னைப்போன்ற நமீதா ரசிகர்களுக்கு இழைத்த அநீதி... ஏன் ரெண்டு படம் போடல?

  ReplyDelete
 10. தல...

  நீதி கதைல நீதியை விட “மீதி” எல்லாம் எம்புட்டு பெருசா இருக்கு?

  ReplyDelete
 11. டிஸ்கில போட்டிருந்தாலும் நமீய பத்தி கேப்பம் நாம..
  நாம கேக்காட்டி அப்புறம் நமீ'ய கண்டுக்க யார் இருக்கா?

  ReplyDelete
 12. தெனாலிராமன் கதை மாதிரி இருக்கே.....?

  ReplyDelete
 13. டிஸ்கில போட்டிருந்தாலும் question கேக்கனும்னு நம்ம சி பி சொல்லி இருக்காரு,
  ஆமா அது சி பி யா இல்ல எஸ் பி'யா?
  ஐயோ பாவம்...அவரே கொன்பியூஸ் ஆகிட்டாரு

  ReplyDelete
 14. சூப்பர் கதை,சூப்பர் படம்,சூப்பர் டிஸ்கி!

  ReplyDelete
 15. ///////சி.பி.செந்தில்குமார் said... 9
  ராம்சாமியின் அனுமதி இல்லாமல் நமீதா படத்தையோ ,...யூஸ் பண்ணக்கூடாதுன்னு தெரியாம இப்படி மாட்டிக்கிட்டீங்களே.. சங்கத்துல இருந்து நோட்டீஸ் வந்தா என்ன பண்ணுவீங்க?////////

  படத்துக்கு மட்டும்தாங்க நான் காப்பி ரைட்ஸ் வெச்சிருக்கேன்... ஒருத்தரு நமீதாவையே..... சரி விடுங்க..... எல்லாரும் பொறாம படுறாங்கன்னு வருத்தப்படுவாரு....!

  ReplyDelete
 16. அடங்கொனியா

  பதிவர்களுக்கும் பதியவர்களுக்கும் புரியும் வண்ணம்
  கணிணி மொழியில் மிகவும் புகழ்பெற்ற மொழிகள் (எனக்கு நன்கு தெரிந்த மொழிகளில்) சி மற்றும் சி ++ பற்றி சிறிய விளக்கம் கொடுத்துள்ளேன், நிச்சயம் பயன்படும்

  கணிணி நிரல் சி & சி ++ விளக்கம் (C vs C ++)
  http://speedsays.blogspot.com/2011/02/c-vs-c.html

  --

  ReplyDelete
 17. /////வைகை said...
  இது என்னைப்போன்ற நமீதா ரசிகர்களுக்கு இழைத்த அநீதி... ஏன் ரெண்டு படம் போடல?///////

  கண்ணா ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா........?

  ReplyDelete
 18. நமீதா கலாச்சாரம் உங்களையும் விடலயா..
  வந்தாச்சி..
  படிச்சாச்சி..
  கிளம்பியாச்சி..

  ReplyDelete
 19. ..நமீதா நீதி வெல்லும்....சே.... நமீதா நீதி சொல்லும்...

  நமீதா சொல்றாங்களோ இல்லையோ அவுங்க படம் சொல்லுது...

  ReplyDelete
 20. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

  ReplyDelete
 21. நான்கூட இந்தக்கதையை தெனாலி ராமன் கதைத்தொகுப்பில் படித்த ஞாபகம்.

  ReplyDelete
 22. அட நல்லாருக்கே நமீதாவுக்காக படிச்சேன்

  ReplyDelete
 23. சிபிய பாத்து இன்னும் எத்தன பேரு இப்படி ஆகப்போராங்கலோ தெரியலையே சொக்கநாதா!

  ReplyDelete
 24. என்ன மேரிக்கி பச்ச புள்ளைங்க ,கை புள்ளைங்க வர்ற இடம் தலீவா. இப்டிகி படங்கள வேற போட்டு பூச்சாண்டி காட்றீங்களே !
  நா பயந்துகினேன் தெரியுமா??

  ReplyDelete
 25. கதை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ம்ம்ம் என்னடா நமீதா படம் பார்த்தேன் டிஸ்கி போட்டு சமாளிக்குறீங்க....

  ReplyDelete
 26. //என்ன மேரிக்கி பச்ச புள்ளைங்க ,கை புள்ளைங்க வர்ற இடம் தலீவா. இப்டிகி படங்கள வேற போட்டு பூச்சாண்டி காட்றீங்களே !
  நா பயந்துகினேன் தெரியுமா??//

  இதான் எனது கருத்துங்கோ....:))

  ReplyDelete
 27. வாழ்க.. நமீதா புகழ்...

  ReplyDelete
 28. ஓ.. இதுல கதை கூட இருக்கா..

  ReplyDelete
 29. /////எவ்வளவு நாள் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானம் இருக்கிறதோ அதுவரை இந்த உலகில்
  வாழ்ந்து விட்டு போவோம்/////

  விவரம் அறிய...

  http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_28.html

  ReplyDelete
 30. கவிதை வீதிக்கு தாங்கள் இன்னும் வரவில்லை..

  ReplyDelete
 31. உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.!!! கண்டிப்பாக எழுதணும் ஆமாம் சொல்லிபுட்டன்..

  http://kooranpathivu.blogspot.com/2011/02/blog-post_28.html

  ReplyDelete
 32. இதுல நமீதா படம் எதுக்கு?

  ReplyDelete
 33. நமிதா முன்னேற்ற கழகம் .......

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.