என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, February 19, 2011

30 ஈழத் தமிழர்களுக்காகக் கலைஞர் செய்த துரோகம் எங்கள் மேடைகளில் ஓங்கி ஒலிக்கும்.-ராமதாஸ் நேற்று

  
' பாமக இருப்பதுதான் வெற்றிக் கூட்டணி...''- இதுதான் டாக்டர் ராமதாஸின் தேர்தல் கால கோஷம்
ஆனால், இந்தத் தேர்தலில்... மதிமுகவும், மார்க்சிஸ்ட்டும் தொகுதிப் பங்கீட்டில் அதிமுகவுடன் ''டூ'' விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், டாக்டரின் வாக்கு பலிக்குமா? தைலாபுரத்தில் இருந்த அவரிடமே சில கேள்விகளை முன் வைத்தோம்..
' அதிமுக கூட்டணியில் மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் என்று செய்திகள் வருகிறதே ?''
'' கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கும், மார்க்சிஸ்ட்டுக்கும் ஒரேயொரு தொகுதிப் பங்கீடு,பெரும் சிக்கலில் இருந்தது. அந்த ஒரு தொகுதியால் அந்த இரண்டு இயக்கங்களின் கூட்டணியே முறிந்து விட்டது என்று செய்திகள் வந்தன. ஆனால், அந்த இயக்கங்களின் மேலிடத் தலைவர்கள் <உட்கார்ந்து பேசிச் சரி செய்தார்கள். அதுபோலவே எங்கள் கூட்டணியில் இருக்கும் தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலை, எங்கள் கூட்டணித் தலைவர் சரி செய்வார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள், நாற்பதும் எங்கள் கையில்தான் !''
' அதிமுக கூட்டணிக்குள் புதிதாகப் போன வேகத்திலேயே தேவையான தொகுதிகளைப் பெற்று, வேட்பாளர்களையும் அறிவித்து விட்டீர்கள் ! உங்கள் வருகைதான் மதிமுவை அந்தரத்தில் விட்டுவிட்டதாகப் பேசப்படுகிறதே ?''
'' தேர்தல் காலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீடு ஒரே சுற்றுப் பேச்சு வார்த்தையில் முடிந்து விடாது. தொடர்ந்து பேசித்தான் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். நாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தந்து விட்டது என்று சொல்ல முடியாது. சிலவற்றை விட்டுக்கொடுத்துதான் தொகுதிகளைப் பெற்றிருக்கிறோம். எங்கள் கட்சியை அதிமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளுடன் மோதவிட, உளவுத்துறை தனது திருப்பணியை ஆரம்பித்திருக்கிறது. அதை எங்கள் கட்சித் தோழர்கள் நம்ப மாட்டார்கள். பாமகவுக்கும், அதிமுகவுக்கும் ஏற்பட்டிருப்பது இயற்கையான கூட்டணி !
நாங்கள் கூட்டணிக்குள் வருவதற்கு முன்பே மதிமுகவுடன் இணைந்து பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். அந்தத்தோழமைதான் எங்களை ஓரணியில் சேர்த்தது. வைகோ மனம் புண்படும்படியாக எதுவும் நடக்காது. எங்கள் கூட்டணிக்குள் பெரும் புயல் வீசுவதாக எண்ணி, கலைஞர் இரண்டு மூன்று நாட்களுக்கு அற்ப சந்தோஷம் அடைந்துகொள்ளலாம். பாவம், இந்தத்தேர்தலில் அவர் அணிக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது. குறைந்த பட்சம் இந்த அற்ப சந்தோஷமாவது மிஞ்சட்டுமே !''
'' தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுடன் நீங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு மீண்டும் போகப் போவதாகவும், அதனால் காங்கிரஸை விமர்சிக்கும் பேச்சுக்கள் உங்கள் கூட்டணி மேடைகளில் இருக்காது என்றும் வரும் செய்திகள் பற்றி ?''
'' இந்தத் தேர்தலில் ஈழப் பிரச்னை, பிரதான பங்கு வகிக்கும். குறிப்பாக, ஈழத் தமிழர்களுக்காகக் கலைஞர் செய்த துரோகம் எங்கள் மேடைகளில் ஓங்கி ஒலிக்கும். ஈழப்பிரச்னை பற்றி எங்கள் கட்சித் தலைவர்கள் பேசிய கூட்டங்களில், கட்சி பேதமின்றி இளைஞர்கள் பெரும் திரளாகத் திரண்டார்கள் !
தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க நானும் வைகோவும் சென்றபோது பாமக., மதிமுக தொண்டர்கள் எங்களை வரவேற்று பிரம்மாண்டமான நுழைவு வாயில்களை வைத்திருந்தார்கள். திமுகவைப் பற்றி பேசுவதற்கே எங்கள் மேடைகளில் நேரம் போதாது. 77-ம் வருடம் நாடெங்கும் நெருக்கடி நிலை பிரதானமான பிரச்சாரமாக அமைந்தது. தேர்தல்முடிந்து, நாற்பது எம்.பி.க்களை கையில் வைத்திருக்கப்போகும் எங்கள் கூட்டணி ஆதரிக்கும் கட்சியில்தான் மத்தியில் ஆட்சியமைக்க முடியும் ! அந்த வகையில், எங்கள் கூட்டணியின் தலைவர் என்ன சொல்கிறாரோ, அதன்படிதான் நாங்கள் செயல்படுவோம்.''
'' எட்டு வருடங்களுக்குப் பிறகு ஜெயலலிதாவை சந்தித்திருக்கிறீர்கள் ! எப்படியிருக்கிறது அவருடைய அணுகு முறை ?''
''அன்புச் சகோதரியை சந்தித்தது, மகிழ்ச்சியான தருணம். 45 நிமிடங்கள் அரசியல் நிலவரம், சமூகப்பிரச்னைகள் குறித்துப் பேசினோம்.ஈழத்தமிழர்கள் பற்றித்தான் அவர் நிறைய நேரம் பேசினார். அந்தப் பேச்சில், கலைஞரைப் போல எதுகை-மோனை வசனம் எல்லாம் இல்லை. உண்மையான இரக்கம் இருந்தது. அவரிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்தன !''
'' நீங்கள் போட்டியிடும் தொகுதிகளில் உங்கள் வேட்பாளர்களைத் தோற்கடிக்க , திமுக அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் சபதம் போட்டிருக்கிறார்களாமே ?''
'' இதில் என்ன வியப்பு இருக்கிறது ! நாங்கள் திமுக-வோடு கூட்டணி வைத்திருந்தபோதும் அதைத்தானே செய்தார்கள். அதையும் தாண்டித் தானே எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள் ! பணமும், பலமும் அவர்களிடம் இருக்கிறது ! அதை வைத்து எதையும் செய்வார்கள், எப்படியும் செய்தி பரப்புவார்கள் ! ஆனால், மக்கள் நம்ப மாட்டார்கள் !''
''புதியவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் பழைய எம்.பி.களுக்கே திரும்பவும் ஸீட் கொடுத்திருக்கிறீர்களே ?''
எங்கள் எம்.பி.க்கள் எல்லோருமே பிரதமராலும், சோனியா காந்தியாலும், சபாநாயகராலும் பாராட்டப் பெற்றவர்கள். தொகுதி மக்களாலும் பாராட்டைப் பெற்றவர்கள். அதெல்லாம் நாடாளுமன்றக் குறிப்பிலேயே இடம் பெற்றிருக்கிறது. நான் சில இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அரசியல் பயிற்சி கொடுத்து, லண்டனில் இருக்கும் '' எகனாமிக் ஸ்கூல்'' மற்றும் ஹார்வர்ட் பல்கலைகழகத்துக்குப் பயிற்சிக்கு அனுப்பி வைத்தேன். அங்கே அவர்கள் பயிற்சியை முடித்துவிட்டு, அடுத்த கட்டப் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள்தான் 2011 சட்டமன்றத் தேர்தலில் எங்கள் ஸ்டார் வேட்பாளர்கள் !''
'' உங்கள் அன்புத் தம்பி திருமாவளவன், சிதம்பரத்தில் உங்கள் கட்சியை எதிர்த்து களம் காண்கிறாரே? ''
''வட மாவட்டங்களில் அண்மைக் காலமாக எந்த மோதலும், கலவரமும் இல்லாத ஒரு சூழ்நிலையை நானும் அவரும் சேர்ந்து ஏற்படுத்தினோம். இணைந்திருந்த எங்கள் கைகளை, கலைஞர் சூழ்ச்சி செய்து பிரித்து விட்டார். நான் தம்பியை எங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைத்தேன். அவரும் வந்து பேசினார். நான்கு முறை தனியாகப் பேசினோம். எந்த உடன்பாடும் வரவில்லை. பிறகு ஸ்டாலின் அனுப்பி வைத்ததாக என்னை திருமாவும், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் சந்தித்தார்கள். நான் அவர்களிடம், ''எங்களைக் கூட்டணியில் இடம்பெறச் செய்ய, திமுக தரப்பிலிருந்து ஒரு மாவட்டச் செயலாளர்கூட என்னை அழைக்கவில்லை ! நீங்கள் நட்பின் அடிப்படையில் அழைக்கிறீர்கள் ! நட்பு வேறு., அரசியல் வேறு...'' என்று சொல்லி விட்டேன். அதன்பிறகு வேலூரில் நான், வைகோ,நெடுமாறன், மகேந்திரன் அனைவரும் திருமாவளவனிடம் பேசினோம். ''சரி., உங்கள் கூட்டணியில் இருக்கிறேன்...'' என்று திருமாவளவன் சொன்னார்.
அப்படிச் சொன்னவர், சிறுத்தைகளின் செயற்குழுவைக் கூட்டி முடித்த பிறகு என்னிடம் பேசினார். அப்போது, ''நம்முடைய இயக்கத்தில் பலர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சியிருக்கிறது திமுக அரசு. அதனால், நூற்றுக்கு நூறு சதவிகிதம் திமுக-வில் இருக்கக்கூடாது என்று என் தோழர்கள் சொன்னார்கள். இருந்தாலும், நான்தான் ஒன்றரை மணிநேரம் பேசி அவர்களை திமுக கூட்டணியில் இருக்க சம்மதிக்க வைத்தேன் !'' என்று சொன்னார். எதனால் இந்த மாற்றம் என்று புரியவில்லை ! தம்பிக்கு என்ன நெருக்கடி என்றும் தெரியவில்லை ! ஆனால், நட்புக்காக நான் கூட்டணி தர்மத்தை விட்டுக்கொடுக்க முடியாது ! சிதம்பரத்தில் திருமாவளவன் போட்டியிட்டால், நாங்கள் அவரை ஜெயிக்க விடமாட்டோம்.
 -ஜூனியர் விகடன் ( 08- 04- 2009)


வலைச்சரத்தில் என் இன்றைய அறிமுகங்கள்......

அப்படியே அங்கேயும் போயி பார்த்துட்டு வாங்க பாஸ்....


Post Comment

இதையும் படிக்கலாமே:


30 comments:

 1. எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

  ReplyDelete
 2. கடுப்பாயிருக்கு அதால கருத்திட விரும்பல சகோதரா வாக்கு மட்டும் தான்..(அரசியல்வாதிகள் மேல)

  ReplyDelete
 3. இந்தாளு ஒரு மனுசப்பிறவின்னு பேட்டி வேற எடுக்குறாங்க ஹி ஹி!

  ReplyDelete
 4. பார்ரா! கலைஞர் மதிக்கலன்னதும் ஈழப் பிரச்சினையா?

  ReplyDelete
 5. ஹா..ஹா..இவரு உங்ககிட்ட மாட்டிக்கிட்டு படற பாடு இருக்கே..ஒரே தமாசு...

  ReplyDelete
 6. ஹா..ஹா..இவரு உங்ககிட்ட மாட்டிக்கிட்டு படற பாடு இருக்கே..ஒரே தமாசு...

  ReplyDelete
 7. நேற்று நீங்க லீவா?

  நறுக்குனு நாலு ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..

  ReplyDelete
 8. அட போங்க நண்பா நீங்களும் காமடி பண்ணிக்கிட்டு

  ReplyDelete
 9. இவங்களுக்கு வேற வேல இல்ல பாஸ்..மாறி மாறி பிட்டு போடுவாங்க..

  ReplyDelete
 10. விருங்க நண்பா, ராமதாஸ் பாவம் :-))

  ReplyDelete
 11. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா

  ReplyDelete
 12. ஹி ஹி.. அவர் ஒரு சிறந்த மனிதர்..

  ReplyDelete
 13. சார் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்தமாதிரி தேவை இல்லாத பதிவுகளை எல்லாம் வெளியீடாதீர்கள். நேரமாவது மிச்சமாகும். என் ஓட்டு உங்களுக்குத்தான் (இந்த பதிவுக்கு)

  ReplyDelete
 14. அவர் இப்படித்ததான் தெரிஞ்சிபோச்சி..
  என்ன பண்றது..
  சுய நல வாதிகள்..

  வந்தாச்சி..
  படிச்சாச்சி..
  வாக்களித்து ஆயிற்று..
  அப்படியே கிளம்பியாயிற்று..

  ReplyDelete
 15. இவங்க எப்பவும் திருந்த மாட்டாங்க பாஸ்

  ReplyDelete
 16. ???? ?????????? ???????? ?????? ?????? ??????? ??? ?????????????? ?????.....

  ReplyDelete
 17. இந்த நாதாரியின் பேட்டியை போட்டு எங்கள் நேரத்தை ஏன் வீணாக்குகிறீர் மக்கா.....

  ReplyDelete
 18. இரண்டு வருஷத்துக்கு முன்னால் பேசியது, தீபாவளி எண்ணேய் குளியலில் வழிந்திருக்கும் போல..

  ஹா..ஹா..

  ReplyDelete
 19. ' இதில் என்ன வியப்பு இருக்கிறது ! நாங்கள் திமுக-வோடு கூட்டணி வைத்திருந்தபோதும் அதைத்தானே செய்தார்கள். அதையும் தாண்டித் தானே எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள் ! பணமும், பலமும் அவர்களிடம் இருக்கிறது ! அதை வைத்து எதையும் செய்வார்கள், எப்படியும் செய்தி பரப்புவார்கள் ! ஆனால், மக்கள் நம்ப மாட்டார்கள் !''
  //

  ஹி..ஹி ..இப்ப கலைஞர் கூட கூட்டணி போட்டிக்கிட்டாரே.. இதை மக்கள் நம்புவாங்க என்று நம்புவோம்..

  ( சே.. பேசாம, கேரளாவுக்கு அடிமாடா போயிருக்கலாம்.. ஹி..ஹி யாரு?.. நாமதான் பாஸ்..)

  ஆமா.. மக்கள் , மக்கள் என்று கூவிகிறார்களே.. அவர்கள் எங்கதான் இருக்காங்க?..

  ReplyDelete
 20. //( சே.. பேசாம, கேரளாவுக்கு அடிமாடா போயிருக்கலாம்.. ஹி..ஹி யாரு?.. நாமதான் பாஸ்..)
  //

  நானும் இதை ஆமோதிக்கிறேன் யுவர் ஆனர்..

  ReplyDelete
 21. ராம்தாஸ் ஒரு பச்சோந்தி

  ReplyDelete
 22. ஆமா டாக்டர் இப்ப எந்த கட்சியில் இருக்காருன்னு அவருக்கு சரி தெரியுமா?

  ReplyDelete
 23. நண்பரே அஸ்ஸலாமு அலைக்கும் என்னையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தவற்றிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  நன்றி ! நன்றி ! நன்றி !

  பதிவுலகில் விடி வெள்ளியாக திகழும் உங்களின் சேவைகள் தொடரட்டும் நேரம் கிடைக்கும் சமயத்தில் நானும் உங்கள் தளத்தில் வந்து கலந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 24. பாவங்க அவரோட கட்சிக்காரங்க யாரை திட்டுவது யாரை ஆதரிப்பது என தெரியாம தேர்தல் வருகின்ற முதல் மாதம் வரை ரொம்ப கஷ்டப்படுவாங்க ... அதுக்காக மத்தவங்களெல்லாம் யோக்கியம் என்றும் சொல்ல முடியாது. அரசியல்னு வந்துட்டா... .... .....

  ReplyDelete
 25. ithai eppadi parattuvathu unmmaiyil thamizha vakkalarkal marathikkararkal ena enni irukkalam pathivirkku parattugal

  ReplyDelete
 26. இப்பது எல்லாம் கொள்கை பார்த்து கூட்டணி வைப்பதில்லை கொள்ளை அடிப்பது மட்டுமே எமது வேலை இது தன் இன்றைய அரசியலார் .
  இதைத்தான் இளங்கோவடிகள் அரசியல் பிழைத்தர்க்கு அறம் கூற்றாவதும் என்றாரோ ?

  ReplyDelete
 27. அரசியல்ல இதெல்லாம்...

  ReplyDelete
 28. அதுதான் அரசியல் என்ற வெங்காயம் சார் .

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.