என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, February 03, 2011

28 ஹைய்யா .....நான் கோடீஸ்வரன் ஆகிட்டேன்

ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி வழக்கம்போல என்னோட மின்னஞ்சலை திறந்தேன். அறிமுகமில்லாத புது ஐ.டி-லேர்ந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்துச்சு .
திறந்து என்னன்னு பார்த்தால்...எனக்கு மூச்சே நின்னுடும் போல இருந்துச்சு. யூ.கே-லாட்டரி நியூ இயர் புரோமோல நீங்க 10 கோடி பிரிட்டிஷ் பவுண்டு ஜெயிச்சுருக்கீங்க. உங்கள் முகவரி, நாடு, தொலைபேசி என்னை அனுப்பவும்ன்னு.....அதுல எழுதியிருந்துச்சு.....எனக்கு என்ன பண்ணுறதுன்னு ஒண்ணுமே விளங்கல.....என்ன எழவுடா இது நம்ம ஏழையா இருக்க விஷயத்தை லண்டன்ல யாரு சொல்லிருப்பான்னு ஒரே குழப்பம். 
அநாதை சொத்து கித்தை நம்ம பேருல யாரும் எழுதி வச்சுட்டாங்கலான்னு வேறு  யோசனை. பித்து புடிச்சவன்மாதிரி இருந்தேன். பின்னே என்னங்க.....நம்ம ஊரு காசுக்கு எழுநூறு கோடி ரூவா தேறும். அதை வச்சுக்கு எந்திரன் மாதிரி மூணு நாலு படம் எடுக்கலாம்.நம்ம ஒரு கட்சிய ஆரம்பிச்சு வர்ற தேர்தல்ல நல்ல பதிவர்கள் பத்து பேர வேட்பாளரா நிறுத்தலாம் என்ற ரீதியில    என்னன்னவோ யோசனைலாம் வந்துச்சு.

இருந்தாலும் உழைக்காம வர்ற காசு நிக்காதுல்லன்னு துணிஞ்சு ஒரு முடிவெடுத்தேன். 


அய்யா பில்கேட்சுக்கு,
ரஹீம் கஸாலி எழுதிக்கொள்வது,
எனக்கு ஒரு எழுநூறு கோடி ரூபா பணம் வந்துச்சு....அவ்வளவு பணத்தை வச்சுக்கு நான் என்னபன்றது? அதே நேரம் இந்த பணத்தை வச்சுக்கற அளவுக்கு என் நாடும் என் வீடும் பாதுகாப்பானதா இல்லை...அதனால....உங்க அறக்கட்டளையில இந்த பணத்த சேர்த்து உலகம் முழுக்க எவ்வளவோ ஏழைங்க இருக்காங்கல்ல அவங்களுக்கு பிரிச்சுக்கொடுத்துடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
னு

ஒரு மெயில் அனுப்பி, அவரோட பதிலுக்காக காத்திருக்கேன். 
என்ன நான் சொல்றது நமக்கு எதுக்கு அவ்வளவு பணம்....நான் சொல்லுறதை நீங்க  நம்பமாட்டீங்கன்னு எனக்குத்தெரியும். . அதுக்குத்தாங்க எனக்கு வந்த மின்னஞ்சலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வச்சிருக்கேன். பார்த்துக்கங்க.....


                                 (படத்தின் மீது கிளிக் பண்ணி படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)

பார்த்துட்டீங்கதானே.....இப்பவாவது என்னை நம்புவீங்கன்னு நினைக்கிறேன். எனக்கு யாரும் கொடைவள்ளல், பாரி வள்ளல்ன்னு பட்டம் கிட்டம் கொடுத்திட வேண்டாம்.அப்படி கொடுக்கறதா இருந்தா  எனக்கு இந்த பணத்தை மின்னஞ்சலில் அனுப்புனாரு பாருங்க அந்த முகம் தெரியா கோடீஸ்வரன். அவருக்கு கொடுங்க.......


டிஸ்கி-1: இந்த பதிவுக்கு எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க இந்த நாதாரிங்கன்னு தான் தலைப்பு வைக்கலாம்ன்னு இருந்தேன்.ஆனால் ஒரு கேச்சிங்கா இருக்கட்டுமேன்னு இப்படி வச்சுட்டேன்

டிஸ்கி-2: இதைப்போல யாருக்கும்மின்னஞ்சல் வந்தால் ஏமாந்துவிடவேண்டாம்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


28 comments:

 1. தானிக்கு தீனி சரியா போச்சு.. ( அஞ்சாஅங்கிளாஸ் படிக்கறப்ப இந்த வார்த்தையை யூஸ் பண்ணூனேன்..# நீதி நான் அஞ்சாங்கிளாஸ் வரை படிச்சிருக்கேன்

  ReplyDelete
 2. வழக்கமா எல்லாருக்கும் வர்ற ஏமாத்து மெயில்தான்.. டைட்டிலும்.. எழுதுன நடையும் ஓக்கே

  ReplyDelete
 3. அப்புறம் சீரியஸ்.. அந்த ட்வீட் 2 அனுப்புங்க..

  ReplyDelete
 4. >>>டிஸ்கில >>>>.வழக்கமா அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட விஷயமா இருக்குமோன்னு நீங்க படிக்காம போயிட்டீங்கன்னா அதான் இப்ப இருக்க தலைப்பை வச்சுட்டேன்.

  இந்த லைன்ஸ் தேவை இல்லைன்னு தோணுது..

  ReplyDelete
 5. அப்ப நான் ஏற்கனவே கோடீஸ்வரன் ஆயிட்டேன்.

  ReplyDelete
 6. இன்னும் இவங்க இதை நிறுத்தலையா?

  ReplyDelete
 7. நமக்கும் இந்த மாதிரி டுபாக்கூர் மெயில்,எஸ் எம் எஸ் வந்திருக்கும். ஆரம்பத்தை பார்த்தவுடனே டெலீட் தான்.

  ReplyDelete
 8. நான் பல முறை கோடீஸ்வரன் ஆகிவிட்டேன்.... ஆனால் என் பேங்க் பேலஸ் தான் ஏறமாட்டங்குது...

  ReplyDelete
 9. ஏனுங்க.....

  நீங்க பில் கேட்ஸுக்கு கடுதாசி எளுதுனதுக்கு பதிலா நம்ம “ஆட்டையாம்பட்டி ராசா”க்கு எளுதி இருந்தீங்கன்னா, வந்து ஆட்டைய போட்டுட்டு போயிருப்பாரு இல்ல....

  ReplyDelete
 10. எனக்கு இதுவரைக்கும் வந்திருக்கு மெயில் மற்றும். எஸ் .எம்.எஸ். பரிசுதொகையை கூட்டினால் அது ஒரு லச்சத்தி எழுபதையைரம் கோடியை விட இருபது கோடி அதிகம் ................

  ReplyDelete
 11. இது பத்தி நிறைய பதிவு வந்திருச்சு..பட் ரசனையா எழுதி இருக்கீங்க

  ReplyDelete
 12. எனக்கு தினசரி இரண்டு மெயில் வருது இது மாதிரி

  ReplyDelete
 13. எஸ்.எம்.எஸ் ல கூட கொலையா கொல்றானுக

  ReplyDelete
 14. ஒரு விசயம் வரும் மெயில்களுக்கு
  ரிப்ளே கூட அனுப்ப வேண்டாம்
  உங்கள் IP அவர்களுக்கு கிடைத்துவிடும்
  வெறும் IP வைத்தே உங்கள் Broadband Address யை என்னாலேயே எடுக்க முடியும்

  ReplyDelete
 15. 70 ஆயிரம் கோடிஎத்தன பேருக்குதான் குடுப்பனுங்க

  ReplyDelete
 16. ஹைய்யோ , ஹைய்யோ ............ எனக்கு இது வரைக்கும் சுமார் 2100 கோடிகள் 6 மெயில் மூலமா கிடைச்சது , நான் எல்லா பணத்தையும் பதிவுலக நண்பர்களுக்கே பிரிச்சு குடுத்துட்டேன்

  ReplyDelete
 17. அப்ப நீங்க மு ன்னால் கோடி ஸ்வர்ன்னு அழைக்கலாம்..
  வா ழ் உங்கள் கொடை உள்ளம்
  ஒரு கேள்வி..

  உண்மையா கிடைத்தால் என க்கும்ஒரு பங்கு...?
  டீலா நோடீலா?

  ReplyDelete
 18. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ

  எனக்கும் இந்த மாதிரி,எஸ் எம் எஸ் மெயில் வந்தது.
  ஆனால் பில்கேட்சுக்கு அனுப்பவும் தோனல
  பதிவுல போடவும் தோனல. உங்கள் எழுத்து
  நடை அருமை.


  //Speed Master said...
  ஒரு விசயம் வரும் மெயில்களுக்கு
  ரிப்ளே கூட அனுப்ப வேண்டாம
  உங்கள் IP அவர்களுக்கு கிடைத்துவிடும்
  வெறும் IP வைத்தே உங்கள் Broadband Address யை என்னாலேயே எடுக்க முடியும்//

  சகோ பயனுள்ள பின்னூட்டம.

  ReplyDelete
 19. அப்படினா நா நாலஞ்சு முறை கோடிஸ்வரனாகிவிட்டேன்

  ReplyDelete
 20. நல்ல மனம் வாழ்க...

  ReplyDelete
 21. எனக்கு வந்த மெய்ளையும் பார்வோர்ட் பண்றேன்....கமிசன் மட்டும் அனுப்புங்க..

  ReplyDelete
 22. இருந்தாலும் உங்களுக்கு நல்ல மனசுங்க

  ReplyDelete
 23. எனக்கும் அதே தேதியில் இந்த மெயில் வந்தது.

  ReplyDelete
 24. உங்க நல்ல மனசுக்கு ஆண்டவன் இன்னும் பல மெயில்களா அனுப்புவாரு பாருங்க ஹி ஹி!!

  ReplyDelete
 25. பில்கேட்ஸ்க்கே அள்ளிக் கொடுத்த வள்ளல்..வாழ்க..வாழ்க.

  ReplyDelete
 26. இந்த மாதிரி மெயில்களை நாங்க ஒப்பன் பண்ணாமலே டெலீட் பண்ணிடுவோம்...

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.