என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, November 15, 2010

11 அரசியலில் யாருக்கு என்ன விருது கொடுக்கலாம்-ஒரு பரிந்துரை


சந்தில் சிந்து பாடும் விருது


நான் சமீபத்தில் ஆங்கில டி.வி.க்கு அளித்த பேட்டிக்கு பிறகு மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டது. நான் கேட்டு கொள்வதற்கு இணங்க ராசாவை நீக்க சொல்லி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஜனாதிபதிக்கு தந்தி அனுப்பினார்கள். இதனால் தான் ராசா ராஜினாமா செய்துள்ளார் என்று கூறும் செல்வி ஜெயலலிதாவுக்கு....

சிறந்த பல்டியடிப்பவர் விருது


ராசா குற்றவாளியில்லை அதனால் ராஜினாமா பண்ண தேவையில்லை என்று கூறிவிட்டு, இப்போது பாராளுமன்றம் சிறந்தமுறையில் நடைபெறவேண்டி தம்பி ராசா ராஜினாமா செய்துள்ளார் என்று கூறும் கலைஞர் கருணாநிதிக்கு.....


சிறந்த பதிலடியாளர்  விருது


காங்கிரசுக்கு ஆதரவளிக்க தயார் என்று ஜெயலலிதா கூறியும் கூட்டணியில் இடமில்லை என்று கூறிய குலாம்நபி ஆசாத்துக்கு....
.
சிறந்த பேய்முழி முழிப்பவர்கள் விருது..


ஒருவேளை ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அண்ணா தி.மு.க-வோடு காங்கிரெஸ் கூட்டு வைத்துக்கொண்டால் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கும் வைகோ, கம்யூனிஸ்டுகளுக்கு......சிறந்த அடங்கவே மாட்டேண்டா விருது


ராசா வகித்த பதவியை திமுக அமைச்சர்களுக்குகொடுக்கக்கூடாது என்று போர்க்கொடி தூக்கியிருக்கும் EVKS. இளங்கோவனுக்கு

சிறந்த ஏமாளி விருது...


தன் சொந்த தம்பியும், அவரது மகனும் காங்கிரசில் சேர்வதை தடுக்க முடியாமல் ஏமாந்து போயிருக்கும் ராமதாசுக்கு....


சிறந்த மீடியா வெளிச்சம் பட்டவர் விருது


கடந்த ஒரு வாரமாக இந்தியாவிலிருக்கும் அனைத்து மீடியாவுமே வரிந்து கட்டிக்கொண்டு இவரை காட்டியதால் அ. ராசாவுக்கு....

மற்றவர்களுக்கான விருதுகள் பின்னர் அறிவிக்கப்படும். விருது பெற தகுதியானவர்களை நீங்களும் பரிந்துரைக்கலாம்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


11 comments:

 1. சிறந்த அடங்கவே மாட்டேண்டா விருது

  ஹிஹிஹி

  ReplyDelete
 2. சிறந்த ஏமாந்தவர் விருது . அப்பாவி பொது மக்கள்

  ReplyDelete
 3. ஆஹா...பின்னுறீங்க...

  ReplyDelete
 4. சந்தில் சிந்து பாடும் விருது...நினைத்து நினைத்து சிரிக்கிறேன் ஓட்டு போட்டாச்சி

  ReplyDelete
 5. [ma]தொப்பிதொப்பி, மணிவண்ணன்,பெயர் சொல்ல விருப்பமில்லை, ஹரிஸ், நல்லநேரம் சதீஷ் ஆகியோரின் வருகைக்கும், கருத்துக்கும், வாக்குகளுக்கும் நன்றி.[/ma]

  ReplyDelete
 6. @ நா.மணிவண்ணன்

  ரிப்பீட்டு

  சிறந்த ஏமாந்தவர் விருது அல்லது இளிச்சவாயர்கள் விருது - மக்களுக்கு

  ReplyDelete
 7. ஆஹா அருமையான விருதுகள்.....சிறந்த விருது குடுக்கும் விருதுனை உங்களுக்கு அளிக்கிறோம்......

  ReplyDelete
 8. [ma]பாலா, ஹாஜா மைதீன் ஆகியோருக்கு நன்றி.[im]http://1.bp.blogspot.com/_qjYIPFYU5zI/TOE3uCERSDI/AAAAAAAAAKo/W0VK91RcNN4/s1600/15262-Winning-Blue-Athlete-Person-Leaning-Against-His-Oversized-Trophy-Cup-Clipart-Illustration-Image.PNG[/im][/ma]

  ReplyDelete
 9. நல்ல கிரியேட்டிவிட்டி... இதே போல பிரபல பதிவர்களில் யார் யாருக்கு என்ன விருதுகள் கொடுக்கலாம் என்று ஒரு பதிவெழுதினால் பத்திக்கும்...

  ReplyDelete
 10. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.