என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Sunday, November 14, 2010

18 மாறிவிட்ட பழமொழிகள்- மீள்பதிவு

பழமொழிகளின் உண்மையான அர்த்தங்கள் மாறி அல்லது மருவி புது மொழிகளாகி விட்டது. சில பழமொழிகளின் உண்மையான அர்த்தங்களை தொகுத்து கொடுத்துள்ளேன்.

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு
இதன் அர்த்தம் ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணு என்பதல்ல....
ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணு என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது.

களவும் கற்று மற....
இதன் அர்த்தம் களவு, திருட்டு போன்றவைகளை கற்றுவிட்டு பின் மறக்கவேண்டும் என்பதல்ல...மாறாக,
களவு, திருட்டு போன்றவற்றை கற்க மற என்பதாகும். அதாவது களவும் கற்க மற...

அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்
இதன் அர்த்தம் ஒருவன் ஏதாவது ஒன்றில் சிக்கி உண்மையை சொல்லாமல் இருந்தால் அவனை அடித்து நொறுக்கினால் உண்மையை சொல்வான் என்ற அர்த்தத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் இதன் அர்த்தம் அதுவல்ல....
அடி... அதாவது இறைவனின் திருவடி அல்லது காலடி. ஒருவனுக்கு ஒரு கஷ்டம் வந்து விட்டால் அவன் இறைவனின் திருவடியில் சரணடைந்து விட்டால் இறைவனின் உதவி நமக்கு கிடைக்கும். இறைவனின் திருவடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ முடியாது என்பதே இதன் அர்த்தமாகும்.

ஓன்று பட்டால் உண்டு வாழ்வு
இதன் அர்த்தம், நாம் ஒற்றுமையாக இருந்தால் வாழ்க்கை உண்டு என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டாலும் கூட, உண்மையான அர்த்தம் அதுவல்ல...நம் வாழ்க்கையில் துன்பம், பசி பட்டினி, கஷ்டம், நஷ்டம் போன்ற ஏதாவது ஒன்றை பட்டால்தான் வாழ்க்கை கிடைக்கும். எதுவுமே படாவிட்டால் வாழ்க்கை கிடைக்காது என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டதாகும்.

கல்லை கண்டால் நாயைக் காணாம் , நாயைக் கண்டால் கல்லைக் காணாம்
இதன் அர்த்தம், நாய் வரும்போது கல்லை காணாம், கல்கிடைக்கும் போது நாயை காணாம் என்பதல்ல..
தத்ரூபமாக வடிக்கப்பட்ட ஒரு நாயின் சிற்பத்தை பார்க்கும்போது, அதை நாயாக பார்த்தால் கல் மறைந்து நம் மனக்கண்ணில் நாயாக காட்சிதரும். மாறாக அந்த நாயின் சிற்பத்தை கல்லாக பார்த்தால், என்னதான் தத்ரூபமாக வடிக்கப்பட்டிருந்தாலும் கல்தான் நம் மனக்கண்ணில் தெரியும் என்பதாகும். அதாவது, நாயக்கண்டால் கல்லை காணோம். கல்லைக்கண்டால் நாயை காணோம் என்பதாகும்


அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
இந்த பழமொழியின் அர்த்தம், அரசனன்று கொல்பவன் . அதாவது (அரசன்+அன்று)
கொல்பவன் அரசனன்று(அரசன் அல்ல அல்லது அரசன் இல்லை).
தெய்வமே நின்று கொல்லும்.

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை
இந்த பழமொழியின் அர்த்தம், போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை.
வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
இதன் அர்த்தம், ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே...) அவளை நன்றாக கவனித்து கொண்டால் , அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.


அரசனை நம்பி புருஷனை கைவிட்ட....
இதன் அர்த்தம், அரசை அதாவது அரசமரத்தை நம்பி புருஷனை கைவிட்ட...என்பதாகும். அரச மரத்தை சுற்றினால் குழந்தை பேறு உண்டாகும் என்பது கிராமத்து வழக்கம்


Post Comment

இதையும் படிக்கலாமே:


18 comments:

 1. நல்லா இருக்குங்க...

  ReplyDelete
 2. ஆயிரம் பேரை கொன்னாத்தான் அர வைத்தியன் ஆகா முடியும் என்கிற பழமொழியையும் சேர்த்துகொள்ளுங்கள் நண்பா
  இதன் அர்த்தம்
  அந்த கால மருத்துவத்தில் ஆயிரம் வேர்களை அழித்து மருந்து செய்ய தெரிந்தவன் தான் அர வைத்தியன் ஆகா முடியம் என்று கூறியுள்ளனர் .ஆனால் பின்னால்
  வந்த போலி மருத்துவர்கள் பழமொழியை இவ்வாறு மாற்றி கொண்டனர்

  ReplyDelete
 3. பாஸ்..ரூம் போட்டு யோசிச்சீங்களோ.? ..

  ReplyDelete
 4. சிறு துரும்பும் பல் குத்த உதவும்<=சிறு இரும்பும் பல்லக்கு தூக்க உதவும்..

  ReplyDelete
 5. ஆயிரம் பேரை கொன்னாத்தான் அர வைத்தியன் ஆகா முடியும் என்கிற பழமொழியையும் சேர்த்துகொள்ளுங்கள் நண்பா
  இதன் அர்த்தம்
  அந்த கால மருத்துவத்தில் ஆயிரம் வேர்களை அழித்து மருந்து செய்ய தெரிந்தவன் தான் அர வைத்தியன் ஆகா முடியம் என்று கூறியுள்ளனர் .ஆனால் பின்னால்
  வந்த போலி மருத்துவர்கள் பழமொழியை இவ்வாறு மாற்றி கொண்டனர்////
  [ma] அடடா.....இது நமக்கு தோணாமல் போச்சே நண்பா ....வருகைக்கு நன்றி....[/ma]

  ReplyDelete
 6. ஹரிஸ் சொன்னது ....சிறு துரும்பும் பல் குத்த உதவும்<=சிறு இரும்பும் பல்லக்கு தூக்க உதவும்..//[ma] ஆ இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா? வருகைக்கு நன்றி நண்பா.. [/ma]

  ReplyDelete
 7. [ma]வருகைக்கு நன்றி கலாநேசன்[ma]

  ReplyDelete
 8. ??????? ?????????? ???? ??????? ????? ?????????????????? .....??????? ?????.......

  ReplyDelete
 9. //களவு, திருட்டு போன்றவற்றை கற்க மற என்பதாகும். அதாவது களவும் கற்க மற...//
  Nice...

  ReplyDelete
 10. அப்படியே "பந்திக்கு முந்து படைக்கு பிந்து" - இந்த பழமொழிக்கும் அர்த்தம் சொல்லிடுங்க.

  ReplyDelete
 11. நாகராஜசோழன் MA //அப்படியே "பந்திக்கு முந்து படைக்கு பிந்து" - இந்த பழமொழிக்கும் அர்த்தம் சொல்லிடுங்க.///[MA]சாப்பாடு விஷயத்துல கரக்டாத்தான் இருக்கும் விடுங்க.. [co="YELLOW"]வருகைக்கு நன்றி [si="4"]நாகராஜ சோழன் , பாரத்...பாரதி....,NKS.ஹாஜா மைதீன்[/si][/CO][/MA]

  ReplyDelete
 12. பழமொழிகளிற்கு இப்படியும் அர்த்தம் இருக்கா?
  இந்த காலத்திற்கு இவைதான் சரி

  ReplyDelete
 13. டெரர்ரா யோசிக்காட்டி நமக்கு நம் முன்னோர்க்கும் என்ன வேறுபாடு இருக்கும்? நமக்கு அடுத்த தலைமுறை இன்னும் எப்படி எப்படியெல்லாம் மாத்துவாங்களோ? இன்னும் டெரர்ராத்தான் இருக்கும்.

  [ma]கொஞ்சம் விளக்கம் சொல்லுங்களேன். இந்த மரமண்டைக்கு ஒன்னும் புரியலீங்க. [/ma]

  ReplyDelete
 14. இதுவரை தெரியாத விளக்கத்தை தெரிந்து கொண்டேன்......பயனுள்ள பதிவு......

  ReplyDelete
 15. களவும் கத்தும் மற.... என்பது பழமொழி. அதாவது, களவும் (திருட்டும்), கத்தும் (பொய்யும் / கத்து என்றால் பொய் என்று அர்த்தமாகும்) மற என்பது பழமொழி. களவும் கற்று மற என்று தமக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொண்டனர்.

  ReplyDelete
 16. தமிழ் மனம் முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 17. ```மாங்கு மாங்குன்னு என்னத்த எழுதினாலும் ஓட்டுதான் போட மாட்டேங்குறீங்க...காசா பணமா ஒரு கருத்தையாவது சொல்லிட்டு போங்களேன்```

  இதோ நானும் சொல்லிட்டேன்.

  விளக்கங்கள் அருமை. பல விஷயங்கள் நான் இதுவரை படிக்காதவை.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.