என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, November 11, 2010

19 கிரந்த எழுத்துக்களும் சில பெயர்களும்

ஸ ஷ க்ஷ ஜ ஹ போன்ற கிரந்த எழுத்துக்களை நீக்கிவிட்டு புதிதாக சில எழுத்துக்களை சேர்க்க போகிறார்களாம். மேற்கண்ட எழுத்துக்கள் தமிழோடு கலந்துவிட்ட எழுத்துக்கள். இந்த எழுத்துக்களை நீக்கிவிட்டால் பிரபலமான பெயர்களை இனி எப்படி அழைப்பது. ஒரு கற்பனை.....
ஸ்டாலின்- ச்டாலின்
ஜெயலலிதா- செயலலிதா
எம்.ஜி.ஆர்- எம் .சி.ஆர்.
ரஜினி- ரசினி
விஜயகாந்த்- விசயகாந்த் (நிறைய விசயங்களை புள்ளி விவரத்துடன் பேசுவதால் இந்த பெயரும் பொருத்தம்தான்)
சிவாஜி - சிவாசி
ஜெமினி- செமினி
வாஜ்பாய்- வாச்பாய்
விஜய்- விசய்
பாரதி ராஜா-பாரதிராசா
பாக்யராஜ்- பாக்யராசு
தாஜ்மஹால்- தாச்மகால்
மும்தாஜ்- மும்தாச்
ஷாஜஹான்-சாசகான்
மஜ்னு- மச்னு
ஜூலியட்-சூலியட்
இப்படியே போனால் பட்டியல் நீளும்.பட்டியல் போடுவதற்கு இந்த பதிவு போதாது என்பதால் இத்துடன் சுபம்  போட்டுவிடுகிறேன்.

Post Comment

இதையும் படிக்கலாமே:


19 comments:

 1. ஐயா... பதிவு எழுதும் முன் என்ன விசயம் என்று புரிந்துக் கொண்டு எழுத வேண்டும்... கிரந்த எழுத்துகளான ஸ ஷ க்ஷ ஜ ஹ நீக்கப்படப் போவதில்லை.... புதிதாக பல எழுத்துக்களைச் சேர்க்கவே பிராமணர்கள் முனைகிறார்கள்.

  மேலும் படிக்க http://bit.ly/c2D8qY

  ReplyDelete
 2. சொன்னமாதிரி பதிவு போட்டுடீங்களே பாஸ்..

  ReplyDelete
 3. பாஸ்,,அந்த எழுத்தெல்லாம் நீக்கலயாம்..புதுசா சில எழுத்துக்கள சேக்குறங்களாம்..இப்ப தான் ஓரு பெரியவர் வந்து சொல்லிட்டு போறாரு..

  ReplyDelete
 4. தவறான புரிதல்.

  http://govikannan.blogspot.com/2010/11/blog-post_11.html

  இதனை பார்க்கவும்

  ReplyDelete
 5. அப்படியாவது நம்ம பேச்சில் கிராமிய மணம் வீசட்டும் :)

  ReplyDelete
 6. அங்கிதா வர்மா சொன்னது

  ஐயா... பதிவு எழுதும் முன் என்ன விசயம் என்று புரிந்துக் கொண்டு எழுத வேண்டும்... கிரந்த எழுத்துகளான ஸ ஷ க்ஷ ஜ ஹ நீக்கப்படப் போவதில்லை.... புதிதாக பல எழுத்துக்களைச் சேர்க்கவே பிராமணர்கள் முனைகிறார்கள். //
  கும்மி சொன்னது:
  தவறான புரிதல்.//
  [ma]தவறை சுட்டிக்காட்டிய அங்கிதா வர்மா,கும்மி அவர்களுக்கு நன்றி....[/ma]

  ReplyDelete
 7. [co="yellow"][ma]வருகைக்கு நன்றி ஆமினா அவர்களே [/ma][/co]

  ReplyDelete
 8. [im]http://www.freeimagehosting.net/uploads/068dd6f749.jpg[/im] சொன்னது:
  சொன்னமாதிரி பதிவு போட்டுடீங்களே பாஸ்.//
  [co="yellow"][ma]ஆமாம் நண்பா, இது ஏற்கனவே யோசித்து வைத்தது.[/ma][/co]
  =================================
  பாஸ்,,அந்த எழுத்தெல்லாம் நீக்கலயாம்..புதுசா சில எழுத்துக்கள சேக்குறங்களாம்..இப்ப தான் ஓரு பெரியவர் வந்து சொல்லிட்டு போறாரு..//
  [co="yellow"][ma]ஆமாம் நண்பா, நாமரெண்டு பேரும் கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோன்னு தோணுது. எப்படியோ நீங்களும் நானும் பெயரை மாற்றவேண்டிய அவசியமில்லை.[/ma][/co]

  ReplyDelete
 9. விஜயகாந்த்- விசயகாந்த் (நிறைய விசயங்களை புள்ளி விவரத்துடன் பேசுவதால் இந்த பெயரும் பொருத்தம்தான்)
  nakkal jaasthinga ungalukku ......

  ReplyDelete
 10. ஆமா பாஸ்.. நம்ம பெயர மாத்த தேவையில்ல..

  தினமணி தலையங்கம் தான் நம்மள கொஞ்சம் குழப்பிடுச்சி..அதுக்கு கோவி.கண்ணன்,இக்பால் செல்வன் தெளிவா விளக்கம் குடுத்துருக்காங்க..அவர்களுக்கு எம் நன்றிகள்..

  ReplyDelete
 11. அப்பாடி நானும் என்னோட பெயரை மாற்ற வேண்டியது இல்லை.

  ReplyDelete
 12. ரகீம் கசாலி - உங்கள் பதிவில் மாற்றி விடுங்கள்.
  சகாதேவன்

  ReplyDelete
 13. பிராமணர்கள் மாற்ற முயலுகிறார்கள் என்று அங்கிதா போன்ற அரைகுறைகள் உளறுவதால் தான் நாடு முன்னேறமுடிவதில்லை.

  ReplyDelete
 14. இப்பத் தான் பரிகிறத நாம் பட்டிக் காட்டான் என்று நினைப்பவர்கள் தான் தமிழை சரியாக உச்சரிக்கிறார்களோ....

  ReplyDelete
 15. நம்ம பாக்கியராஜாவுக்குக் கூட இந்த உச்சரிப்பு தானே கிராமப் புறத்தில் நல்ல பெயர் பெற்றுத் தந்தது...

  ReplyDelete
 16. விஜயகாந்த் பற்றிய நகைச்சுவை சூப்பர்... இணைப்பு கொடுத்த கும்மிக்கு சென்று என்னவென்று தெரிந்துக்கொள்கிறேன்...

  ReplyDelete
 17. [ma]தலைவா சூப்பர்[/ma]

  ReplyDelete
 18. [ma]தலைவா சூப்பர்[/ma]

  ReplyDelete
 19. [co="yellow"][ma]நாகராஜ சோழன், சகாதேவன், மதி.சுதா, பிரபாகரன், அண்ணாச்சி, அனானி ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....[/ma][/co]

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.