என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, November 09, 2010

7 கண்ணீரில் ஒரு கவிதாஞ்சலி

 அன்றைய காலக்கட்டத்தில் கலைஞரின் வசனம் மிக புகழ் பெற்றது. இவரின் வசனத்திற்க்காகவே படங்கள் வெற்றியை ஈட்டின என்று சொன்னால் மிகையில்லை.இவர் வசனமெழுதும் படங்கள் வெளிவந்தபோது கதாநாயகனுக்கு இணையாக இவரது பெயரையும் போட்டுதான் விளம்பரப்படுத்தினார்கள். அன்றைய இளைஞர்களை இவரது வசனம் ஈர்த்து திரையரங்குகளை நிரப்பின. திராவிட இயக்கத்தின் வெற்றிக்கு இவரது வசனங்கள் பெரிதும் துணை புரிந்தது. இன்று சினிமாவில் இருக்கும் பெருவாரியான நடிகர்களுக்கு இவரின் பராசக்தி, மனோகரா ஆகிய படங்களின்  வசனமும்,  வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் வசனமும்தான் பாலபாடம், நுழைவுச்சீட்டு. அடடடா இதே ஏன்பா இப்ப சொல்லறே? இன்னைக்குத்தான் அவர் வசனம்  எழுதிய படங்களை கட்சிக்காரர்கள் சேர்ந்து கூட பத்துநாள் ஓட்ட  முடியலியேன்னு சொல்றீங்களா? உண்மைதான். ஆனால், விஷயம் இதுவல்ல....
திரைப்பட வசனங்கள் மட்டுமல்ல....கலைஞர் படித்த கவிதாஞ்சலியும் பிரசித்தி பெற்றதுதான். ஆம்.....தமிழக முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது சென்னை வானொலியில் கலைஞர் அவர்கள் வாசித்த கவிதாஞ்சலி பலபேரின் கண்களை குளமாக்கியது. இதோ அந்த கவிதாஞ்சலி இன்றைய தலைமுறையினருக்காக....


Post Comment

இதையும் படிக்கலாமே:


7 comments:

 1. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. அந்த கலைஞர் வேற..இப்ப இருக்க கலைஞர் வேற தல..

  ReplyDelete
 3. கலைஞர் கவிதை,வசனத்த விட கடிதம் நிறைய்ய எழுதுவாரு பாஸ்...

  ReplyDelete
 4. இதுபோன்று இன்னும் நிறைய எழுத வாழத்துகள். பகிர்வுக்கு நன்றி.,!1

  ReplyDelete
 5. ரொம்ப நல்லாருக்கு ஓட்டு போட்டுட்டேன்

  ReplyDelete
 6. [si="4"][co="yellow"][ma] ஹரிஸ்,சித்ரா, பிரவீன்குமார் , நல்லநேரம் சதீஷ் ஆகியோரின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி... [/ma][/co][/si]

  ReplyDelete
 7. http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
  இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.