என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, November 18, 2010

10 அதென்ன மிசா அல்லது எமெர்ஜென்சி- பாகம் 2

 முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கே போய் படிச்சுட்டு வாங்க  

நெருக்கடி நிலை அமுலுக்கு வந்தபின் 1975, ஜுலை 1_ந்தேதி இந்திரா காந்தி தன்னுடைய 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். விலைவாசியைக் குறைப்பது, நில உச்சவரம்பைக் கொண்டு வருவது, ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்குவது, குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரிச்சலுகை, பாடப்புத்தகங்களை குறைந்த விலையில் வழங்குவது முதலியவை 20 அம்ச திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். நெருக்கடி நிலைக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் ஜுலை 22_ந்தேதி ஓட்டெடுப்பு நடந்தது. நெருக்கடி நிலைக்கு ஆதரவாக 336 ஓட்டுகளும், எதிராக 59 ஓட்டுகளும் பதிவாயின. "நெருக்கடி நிலைமை"யின் போது சில நன்மைகளும், பல தீமைகளும் நடந்தன.
அதிகாரிகள், ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வேலைக்கு வந்தனர். ஒழுங்காக வேலை பார்த்தனர். வேலை நிறுத்தங்கள், முழு அடைப்புகள் இல்லை. கள்ள மார்க்கெட் ஒழிந்தது. அதே சமயத்தில், சஞ்சய் காந்தி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, தன் விருப்பப்படி எல்லாம் உத்தரவு பிறப்பித்தார். பிறப்பு விகிதத்தைக் குறைப்பதற்காக, வட இந்தியாவில் கட்டாயமாக பலர் கருத்தடை செய்யப்பட்டனர்.
நெருக்கடி நிலை அமுலுக்கு வந்த ஐந்து மாத காலத்திற்குள் 37 லட்சம் பேர் கருத்தடை செய்யப்பட்டனர். கருத்தடைக்கு ஆள் பிடிக்கும்படி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். (நெருக்கடி நிலையின்போது நடந்த அத்துமீறல்கள் பற்றி அப்போது செய்தி எதுவும் வெளியாகவில்லை. காரணம், அப்போது பத்திரிகைத் தணிக்கை அமுலில் இருந்ததால் அச்செய்திகளை வெளியிட அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். நெருக்கடி நிலை ரத்தான பிறகு இதுபற்றிய செய்திகள் வெளியாயின). நெருக்கடி நிலையை காமராஜர் எதிர்த்தார்.
திருத்தணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நெருக்கடி நிலையை கண்டித்து பகிரங்கமாகப் பேசினார். "நெருக்கடி நிலை" அமுலாகி 4 மாதத்தில் (1975 அக்டோபர் 2) காமராஜர் திடீரென்று காலமானார். அப்போது இந்திரா காந்தி விமானத்தில் வந்து காமராஜருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கண் கலங்கினார்.
இதற்கிடையே இந்திரா காந்தி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. "ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லும்" என்று 1975 டிசம்பர் 19_ந்தேதி தீர்ப்பு கூறப்பட்டது. பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 1976 மார்ச்சில் முடிவடைவதாக இருந்தது. பாராளுமன்றத்தின் ஆயுள் காலத்தை நீடித்து, தேர்தலை தள்ளிவைக்க இந்திரா விரும்பினார்.
"தேர்தலை தள்ளி வைக்க வேண்டாம். இப்போதே நடத்துவது நல்லது" என்று சில மந்திரிகள் யோசனை கூறினார்கள். அதை இந்திரா ஏற்கவில்லை. "நெருக்கடி நிலை காலவரம்பு இன்றி நீடிக்கவேண்டும்" என்று சஞ்சய் காந்தி வற்புறுத்தினார். அதை ஏற்று பாராளுமன்ற தேர்தலை இந்திரா தள்ளிவைத்தார். அதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
நெருக்கடி நிலையின்போது, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது. நெருக்கடி நிலையை முதல்_அமைச்சர் கருணாநிதி எதிர்த்தார். இதன் காரணமாக கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு 1976 ஜனவரி மாதம் 31_ந்தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. பிரமுகர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தேர்தல் நடத்த முடிவு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு 1 ஆண்டு கழிந்தது.
அரசியல் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வந்த இந்திரா காந்தி பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தினால் தனக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று நம்பினார். 1977 ஜனவரி 18_ந்தேதி ரேடியோவில் பேசுகையில் "பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும். சிறையில் இருக்கும் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள்" என்று அறிவித்தார்.
                                          (தொடரும்) 
நண்பர்களே.....சில பத்திரிகைகளில் நான் படித்ததை தொகுத்து, இடையிடையே நான் கேள்விப்பட்ட விஷயங்களையும் சேர்த்து இந்த கட்டுரையை  உங்களோடு பகிர்ந்து வருகிறேன்.நான் படித்த ஒரு விஷயம் இந்த தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த சிறு முயற்சியை  எடுத்துள்ளேன்.  தயவுசெய்து காப்பிரைட் பிரச்சினையை எழுப்பவேண்டாம். 
நிறைய நண்பர்கள் இந்த கட்டுரையை நான் எழுதுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது என் எழுத்து நடையே அல்ல....இந்த கட்டுரைக்கு நான் ஒரு தொகுப்பாளர் மட்டுமே....


Post Comment

இதையும் படிக்கலாமே:


10 comments:

 1. சுவாரஸ்யமாய் சொல்கிறீர்கள். அடுத்த பாகம் எப்போ?

  ReplyDelete
 2. நெருக்கடி நிலை குறித்த செய்திகளை அழகாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள் .இன்றைய சமுதாயத்தினர் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் .வாழ்த்துக்களும் நன்றியும் .அடுத்த பாகம் எப்போது

  ReplyDelete
 3. தகவல்கள் அருமை, தொடர்ந்து எழுதுங்கள்..

  ReplyDelete
 4. நல்லதை மீண்டும் சொல்ல காப்பிரைட் தேவை இல்லை

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. நல்லா இருக்குங்க... எனக்கு எல்லாம் புது தகவல்கள். தொடருங்கள்...

  ReplyDelete
 6. நல்ல முயற்சி, தயவு செய்து தொடரவும் !

  ReplyDelete
 7. சூப்பருங்க!

  தெரியாத பல விஷயங்கள் தெரிந்தது... அடுத்தபாகமும் போடுவீங்க தானே! சீக்கிரம் போட்டுடுங்க

  என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு தெரியாம புலம்பிட்டு இருக்கப்போறேன் :(

  ReplyDelete
 8. குறிப்பிட்ட அந்த இடுகையை நீக்கிவிட்டேன் நண்பரே... என் தளத்திற்கு வருகை தந்து நடுநிலையான கருத்துக்களை தெரிவித்ததற்கு நன்றி...

  ReplyDelete
 9. எமெர்ஜென்சி பற்றி விரிவான ஒரு தொகுப்பு.வாழ்த்துகள்.தொடரட்டும் உங்கள் பணி.

  ReplyDelete
 10. நல்லாருக்கு தொடருங்கள்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.